தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தாதிய பயிற்சி கல்லூரியின் அலுவலர்களுக்கான சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சியானது உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ. தர்ஷினி அவர்களின் தலைமையில் தாதிய பயிற்சி கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் இன்று (19.07.2024) காலை சிறப்பாக நடைபெற்றது.
இவ் விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சியில் தாதிய பயிற்சி மாணவர்கள் மற்றும் மாவட்ட செயலக சிறுவர் பெண்கள் அலகு அலுவலர்கள் உள்ளிட்ட 85 பங்குபற்றாளர்கள் பயனடைந்தனர்.





