இலங்கை சமுத்திர பல்கலைகழகம் பிராந்திய நிலையம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் இணைந்து நாடாத்தும்
முன் கற்றலுக்கான அங்கீகார முறைமை(RPL) ஊடாக கடலக மாலுமிகளுக்கான தேசிய தொழிற்தகமைச் சான்றிதழ் வழங்குவதற்கான திறன் இடைவெளி நிரப்புதல்(Gap filling programme) நிகழ்ச்சித்திட்ட அங்குரார்பண நிகழ்வு இன்றைய தினம் (22.07.2024) யாழ்மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு .மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர்,உதவிப்பணிப்பாளர் இலங்கை சமுத்திர பல்கலைகழகம்,பிராந்திய நிலையம் யாழ்ப்பாணம்,மாவட்ட முகாமையாளர்-
தேசிய தொழில்பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை , மாவட்ட இணைப்பாளர் (திறன்)மாவட்டச் செயலகம் ,பயிற்சி வளவாளர்கள்,பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் நான்கு பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய ( வேலனண,ஊர்காவற்துறை, நெடுந்தீவு,தெல்லிப்பளை) 42 பயனாளிகளுக்கான பயிற்சிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.






