மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஆவணி மாதம் 05 ஆம் திகதி தொடக்கம் 07 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளிப் பகுதியில் நடைபெறவுள்ள உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சி, விற்பனை தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக தொழில்முயற்சியாளர்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (29.07.2024) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தொழில்முயற்சியாளர்களுக்கான சுகாதாரம், போக்குவரத்து மற்றும் இதரவசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர், யாழ் மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர், தொழில் முயற்சியாளர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 5 6