மூன்றாம் நிலை முறைசாராக் கல்வி, தொழில் சார் பயிற்சி முறைமை மூலம் மாணவர்களை முன்னேற்றுதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (08.08.2024) பி. ப 03.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் முறைசாராக் கல்வி அபிவிருத்தி மற்றும் மேம்படுத்தல் தொடர்பாகவும் கடந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த பதில் அரசாங்க அதிபர் அவர்கள் ஒரு முன்னோடித் திட்டமாக ( Pilot Project) - திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக ஒரு கிராம சேவையாளர் பிரிவு அல்லது அதனுடன் இணைந்த கிராம சேவையாளர் பிரிவினையும் இணைத்து ஆகக் குறைந்தது 100 இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்கல்வியினை ஏற்படுத்தவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும், இதன் முன்னேற்றங்கள் அடுத்த மாதம் ஆராயப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் இவ் விழிப்புணர்வுச் செயற்பாட்டிற்கு தொழில் பயிற்சி அதிகார சபையின் (VTA) ஒத்துழைப்பினை நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், தொழில் பயிற்சி அதிகார சபையின் (VTA) பிரதிப் பணிப்பாளர், தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் (NAITA) மாவட்ட முகாமையாளர், கல்வி வலய முறைசாராப்பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5