யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கும் யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. J. A. ஹாலிங்க ஜெயசிங்க அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (08.08.2024) பி. ப. 4.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல்கள் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இச் சந்திப்பில் உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. கி. அமல்ராஜ், காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. M. M. G சந்தன ஹமகொட மற்றும் யாழ்ப்பாண உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அவர்களும் உடனிருந்தார்கள்.
 
1 2