நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும், தெரிவாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் (10.08.2024) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தேர்தல் ஆணைக்குழு மேலதிக ஆணையாளர் திரு. சிந்தக குலரட்ண, பொலிஸ் திணைக்கள பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. றுவான் குணசேகர, பொலிஸ் திணைக்கள தேர்தல்கள் பணிப்பாளர் திரு அசோக தர்மசேன, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. தர்மபால, யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. ஜே. ஏ. ஹாலிங்க ஜெயசிங்க , உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. கி. அமல்ராஜ், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், முறைப்பாட்டு முகாமைத்துவப் பிரிவின் உதவித் தெரிவாட்சி அலுவலர் உட்பட சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
இக் கலந்துரையாடல் சனாதிபதி தேர்தல்கள் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு ஆராயப்பட்டன.







