உளவள ஆற்றுப்படுத்தல் தொடர்பான கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் ஆரம்ப நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (16.08.2024) மு. ப 10.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சமூகத்தில் நலிவடைந்தவர்களை உள சமூக ஆதரவூடாக வலிப்படுத்துவதற்கான வைகறை வேலைத் திட்டம் தொடர்பாக FAIRMED Foundation இலங்கைக்கான இணைப்பாளர் வைத்திய கலாநிதி நயனி சூரயாராச்சி அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து முதற்கட்டமாக மருதங்கேணியில் முள்ளியான் கிராமமும், தெல்லிப்பழை பிரதேச செயலகங்களிலிருந்து நல்லிணக்கபுரம் கிராமமும் தெரிவு செய்யப்பட்டு அக் கிராமத்திலுள்ள சிறுவர், இளைஞர்களுக்கு இவ் வைகறை நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக உளவள ஆற்றுபடுத்தலை மேற்கொள்வதை நோக்காக கொண்டு இச் செயற்றிட்டம் நடைபெறவுள்ளது.
உதவி மாவட்ட செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர்,மருதங்கேணி பிரதேச செயலாளர், தெல்லிப்பளை உதவி பிரதேச செயலாளர் FAIRMED Foundation யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி உள சமூக இணைப்பாளர், வலிகாமம், வடமராட்சி பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5