யாழ்ப்பாண மாவட்டத்தில் யு. என். டி. பி. நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (20.08.2024) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம பொறியியலாளர், கடற்றொழி்ல் உதவிப் பணிப்பாளர், பிரதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், அரச சார்பற்ற நிறுவன இணைப்பாளர், யு. என். டி. பி. திட்ட இணைப்பாளர் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.






