சனாதிபதித் தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமை பொறுப்புக்கள் தொடர்பான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் இன்று (24.08.2024) மு. ப 10.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
ஊடகவியலாளர்களின் வகிபாங்கினை அர்த்தமுள்ள வகையில் அதிகரிக்கச் செய்யும் நோக்கில் தேர்தல் கண்கானிப்பு தொடர்பான தன்னார்ந்த முயற்சி (VIEW) அமைப்பினதும், AFRIEL நிறுவனத்தினதும் அனுசரனையில் இச் செயலமர்வு நடைபெற்றது.
ஊடகவியலாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்டுதலுடன் அறிக்கையிடலை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந் நிகழ்வில் VIEW அமைப்பின் ஆலோசனை சபை பிரதானி திரு. மஹிந்த தேசப்பிரிய (முன்னாள் தலைவர்,தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழு) அவர்களும் மற்றும் VIEW அமைப்பின் ஆலோசனை சபை உறுப்பினர் திரு. எம்.எம்.மொஹமட் (தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர்) அவர்களும் நிகழ்வின் வளவாளர்களாக கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கினார்கள்.
இந் நிகழ்வில் 35 ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5