மாவட்டச் செயலகத்தின் உற்பத்தி திறன் பிரிவின் ஏற்பாட்டில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோர்களுக்கான சந்தைப்படுத்தல் மற்றும் அனுபவப் பகிர்வு செயலமர்வானது இன்றைய தினம் (27.08.2024) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் உற்பத்தித் திறன்சாா் நடவடிக்கைகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதன் ஊடாக தொழில் முனைவோர்கள் சிறந்த பயனைப் பெறலாம் எனவும், உற்பத்தித் திறன்சாா் உத்தியோகத்தர்கள் உற்பத்தித் திறன் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு தொழில் முயற்சியாளர்களின் முன்னேற்றகரமான பின்னூட்டல்களை அறிக்கையிடுமாறும் தெரிவித்தார்.
இந்நிகழ்வு திட்டத்துடன் தொடர்புடைய தொழில் முனைவோர் மற்றும் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அறிவை. மேம்படுத்துதல் , வணிகத்தை அபிவிருத்தி செய்தல் , தொழில் முனைவோருடைய வணிக நடைமுறைகளை பகிர்ந்து கொள்தல் போன்ற விடயங்களை நோக்கமாகக் கொண்டு இச் செயலமர்வு நடைபெற்றது.
இந்நிழ்வில் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ. தர்சினி, முயற்சியாண்மை அபிவிருத்திக்கான பயிற்சி உத்தியோகத்தர் T. தனஞ்சயன், மாவட்ட செயலக, பிரதேச செயலக உற்பத்தி திறன் உத்தியோகத்தர்கள் மற்றும் 25 தொழில் முனைவோா் ஆகியோா் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5