பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்சினி அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (10.9.2024) காலை 9.00மணிக்கு மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் யாழ்ப்பாணம், வவுனியா , கிளிநொச்சி மாவட்ட போதை தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.






