கடந்த சனாதிபதித் தேர்தலில் போது செல்லுபடியற்ற வாக்குகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகமாக காணப்பட்டமை தொடர்பில் முதற்கட்டமாக, தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வாக்களிக்கும் முறைமை பற்றி - ஒவ்வொரு திணைக்களையும் சேர்ந்த பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவருக்கு தெளிவுபடுத்துதல் கலந்துரையாடல் நாளை (25.10.2024) பி. ப 3.15 மணிக்கு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் பங்குபற்றுபவர்கள் அவர்களுடைய திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற ஏனைய உத்தியோகத்தர்களுக்கு வாக்களிக்கும் முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.






