வெள்ள அனர்த்தத்திற்கு பின்னரான தற்போதைய நிலைமைகள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட
அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (03.12.2024) பி.ப 2. 30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடினார்.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், வெள்ள அனர்த்தத்தின் போது சிறப்பாக கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், தாம் பல பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்த மக்களின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டதாகவும், உடனடியாக தீர்க்க வேண்டிய விடயங்களுக்கு நடவடிக்கை எடுத்ததாகவும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களையும் பார்வையிட்டதாகவும், சில கிராமங்களில் வெள்ளத்தினை வெளியேற்றுவதற்கான பொறிமுறையினை உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படாத வகையில் பல நிரந்தர திட்டங்களை சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்து செயற்படுவோம் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
வெள்ள அனர்த்தத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும், பிரதேச செயலாளர்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
 
1 2 3 4