யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக் கழகம் நடாத்தும் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும் உதவி மாவட்ட செயலாளருமான செல்வி உ.தர்சினி அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் 30.12.2024 ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப 04.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் உத்தியோகத்தர்களின் - புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகள், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற பிள்ளைகள் மற்றும் உயர்தரத்தில் சிறப்புச் சித்தி பெற்று பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகள் கெளரவிக்கப்பட்டார்கள்.
இந் நிகழ்வில் உத்தியோகத்தர்களுக்கிடையிலான போட்டிகள், உத்தியோகத்தர்களின் கவிதை மற்றும் பாடல் இசை நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.






