நாளை (18.01.2025) தெல்லிப்பளையில் நடைபெறவுள்ள தேசியப் பொங்கல் விழாவில் பங்குபற்றுவதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் கௌரவ திரு.பிரதீப் சுந்தரலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நஜித் இந்திக்க, மூத்த கலைஞர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கொழும்பிலிருந்து இன்று (17.01.2024) மு. ப 11.45 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையம் வந்தடைந்தனர். அவர்களை மாவட்டச் செயலகத்தின் சார்பில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையிலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் வரவேற்றார்கள்.
மேலும் இந் வரவேற்பு நிகழ்வில் வணக்கத்திற்குரிய ஹொரகல விமலதிஸ்ஸ தேரர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ கருணநாதன் இளங்குமரன், கெளரவ வைத்திய கலாநிதி சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் மற்றும் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு. விநாயகமூர்த்தி சகாதேவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கெளரவ பிரதி அமைச்சர் அவர்களுடன் தேசிய நூலகத்தின் தலைவர் கலாநிதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, இலங்கை கலை மன்றத்தின் தலைவர் திரு. கீர்த்தி வெலிசரகே மூத்த கலைஞர் திரு.தர்மசிறி பண்டாரநாயக்க, மூத்த இலக்கியவாதி திரு ஜயதிலக கம்மல்லவீர,
மூத்த நடிகர் திரு. சந்திரசோம பிந்துஹேவா,
மூத்த இலக்கியவாதி திரு.
கமல் பெரேரா, மூத்த நாடக இயக்குனர் திரு.சுனில் கோஸ்டா, சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.பிரசன்னஜித் அபேசூரிய, மூத்த நடிகைகள் திருமதி சமிலா பெரிஸ், மூத்த கலைஞர் திரு.எஸ்.சுதாராஜ் , மூத்த வர்ண கலைஞர் திரு. பிரகீத் ரத்நாயக்க, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும்
அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் திரு. பிரேமரத்ன தென்னகோன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.







