Government Agent/District Secretary

Mr.M.Piiratheepan
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், கௌரவ விருந்தினராக “கலைக்குரிசில்” திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கவிஞரும் மூத்த நாடகவியலாளருமான திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்கள் பங்கேற்றார். இவ்வாண்டின் பண்பாட்டுப் பெருவிழா “மாவைப் பண்டிதர்” அமரர் க. சச்சிதானந்தன் அரங்கு (மாவிட்டபுரம்) எனும் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள், தனது உரையில், ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனத் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பாரம்பரிய கலை வடிவங்கள் படிப்படியாக சுருக்கப்பட்டு இலத்திரனியல் வடிவங்களுக்கு மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அவற்றின் அசல் தன்மையையும் பாரம்பரிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.see more....Events
News
Government Service Centers
ஹுமெடிக்கா நிறுவனத்தினால் களமுனை உத்தியோகத்தர்களுக்கான 3,900 முகக்கவசங்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்களிடம் கையளிக்கப்பட்டன. இவற்றில் தலா 400 வீதம் யாழ்ப்பாணம், நல்லூர், உடுவில் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர்களிடம் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் மற்றும் ஹுமெடிக்கா நிறுவன உத்தியோகத்தர்களினால் கையளிக்கப்பட்டன. மேலும் 1300 முகக்கவசங்கள் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கும், 1000 முன்னிலை சுகாதார உத்தியோகத்தர்களுக்கான முகக்கவசங்களும் வழங்கப்பட்டன.
• அகில உலக மருத்துவர் நல அமைப்பினால் ரூபா 720,000.00 பெறுமதியான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
அகில உலக மருத்துவர் நல அமைப்பினால் யாழ் மாவட்டத்தில் உள்ள 24 நாலன்புரி நிலையங்களில் வசிக்கும் 410 குடும்பங்களும் மற்றும் நலன்புரி நிலையங்களில் வசித்து வெளியேறிய 310 குடும்பங்களுமாக மொத்தம் 720 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபா வீதம் ரூபா 720,000.00 பெறுமதியான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திரு. த. சத்தியமூர்த்தி அவர்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்களிடம் கையளித்தார். இவை உடனடியாக மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களினால் பொதி செய்யப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்பட்டன.
கொவிட் 19 வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக தொழில்வாய்ப்பு மற்றும் வருமானங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் கொரோனா தடுப்புச் செயலணியின் வழிகாட்டலின் கீழ் யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடக நிவாரண உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் அரச உதவித்திட்டங்களின் கீழ் சமுர்த்தி பயனாளிகளான 74,458 குடும்பங்களுக்கும் சமுர்த்தி உதவிக்காக காத்திருக்கும் 9,427 குடும்பங்களுக்கும் சமுர்த்தி கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கு மேலதிகமாக 36,000 சமுர்த்தி பயனாளிகளுக்கான உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பயனாளிகளுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன. முதியோர் உதவி வழங்கல் திட்டத்தின் கீழான 18,371 பயனாளிகளுக்கும் முதியோர் உதவிக்காக காத்திருப்போர் என்ற அடிப்படையின் கீழ் 2,856 பயனாளிகளுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகள் 7,359 பயனாளிகளுக்கும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட 385 பயனாளிகளுக்கும் கொடுப்பனவுகள் இதுவரை பகிரப்பட்டுள்ளன. இதற்காக 564 மில்லியன் ரூபா நிவாரண உதவியாக பாதிக்கப்பட்டவர்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி இன்று ( 30.03.2020) காலை முன்னெடுக்கப்பட்டது.ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாகஇ நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் பணியை பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சிறப்பு அதிரடிப் படையினர் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியிருடன் இணைந்து பொலிஸார் உள்ளிட்டோர் முன்னெடுத்து வருகின்றனர்.கொரோனா வைரஸ் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











