78வது சுதந்திர தின மாவட்ட நிகழ்வு - 2026
சுற்றுலா வழிகாட்டி நூல்
60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியீடு
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா - 2026
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா - 2026
தேசிய உற்பத்தித்திறன் விருது – அதிமேதகு ஜனாதிபதியிடமிருந்து முதலாம் இடத்திற்கான விருதினைப் பெற்ற யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்

දිසාපති / දිස්ත්‍රික් ලේකම්

GA Piiratheepan

  

මහතා එම්. පීරතීපන්

ශ්‍රී ලංකා පරිපාලන සේවයේ විශේෂ ශ්‍රේණිය I

 

 

 

 

2தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 (National Productivity Awards) போட்டியில் பொதுத்துறைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளது. இதற்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று (08.11.2026) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கான முதலாம் இடத்திற்குரிய விருதினை அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் வழங்கி வைத்தார். இதன்போது கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி அவர்களும் உடனிருந்தார். மேலும், இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் அரசாங்க அதிபருடன் இணைந்து விருதினைப் பெற்றுக்கொண்டனர். இந்தச் சாதனையானது யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சிறந்த தலைமைத்துவம், ஒருங்கிணைந்த முயற்சி, அர்ப்பணிப்பான உழைப்பு மற்றும் மக்களுக்கான சிறந்த சேவை வழங்கலுக்குக் கிடைத்துள்ள தேசிய அங்கீகாரமாகும்.


Readmore


 

පුවත් සහ සිදුවීම්

News

தேசிய உற்பத்தித்திறன் விருது – அதிமேதகு ஜனாதிபதியிடமிருந்து முதலாம் இடத்திற்கான விருதினைப் பெற்ற யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்

නොවැම්බර් 09 2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 (National Productivity Awards) போட்டியில் பொதுத்துறைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளது. இதற்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று (08.11.2026) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கான முதலாம் இடத்திற்குரிய விருதினை அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்...

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கு மதத் தலைவர்களின் பங்களிப்பு அவசியம் – அதிமேதகு ஜனாதிபதி!

නොවැම්බර් 06 2026

ஒன்றுபட்டு எழுச்சி பெற்ற ஓராண்டு – ‘அகன்று செல்’ செயற்பாட்டின் ஓராண்டு மதிப்பீட்டு சர்வமத மாநாடு அலரி மாளிகையில் நடைபெற்றது! போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “அகன்று செல்” தேசிய செயற்பாட்டின் ஓராண்டு நிறைவையொட்டிய மதிப்பீட்டு சர்வமத மாநாடு, அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இன்று (05.11.2026) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. 'ஒன்றுபட்டு எழுச்சி பெற்ற ஓராண்டு' எனும் தொனிப்பொருளில்...

TIN சான்றிதழ் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பில் அரசாங்க அதிபருடன் பிராந்திய ஆணையாளர் சந்திப்பு

නොවැම්බර් 05 2026

யாழ்ப்பாணம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய ஆணையாளர் திரு. A. P. குணதுங்ஹ அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்று (04.11.2026) மாவட்டச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, வரி செலுத்துநர் அடையாள இலக்கமான (TIN) இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாகப் பொதுமக்கள் மீண்டும் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளும்...

TIN சான்றிதழைச் சமர்ப்பிக்கும் கட்டாய நடைமுறை 2027 ஏப்ரல் 01ஆம் திகதி வரை ஒத்திவைப்பு - யாழ்ப்பாண பிராந்திய ஆணையாளர் தெரிவிப்பு!

නොවැම්බර් 05 2026

குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளில் ஈடுபடும் தனிநபர்கள், வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் (TIN) சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாய நடைமுறை 2027 ஏப்ரல் 01ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். இத் தகவலை, யாழ்ப்பாண பிராந்திய உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் திரு. A. P. குணதுங்ஹ அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கு அறிவித்துள்ளார்....

யாழில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல்!

නොවැම්බර් 04 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் இன்றைய தினம்(04.11.2026) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள், அனர்த்த அபாயங்களைக் குறைத்தல் மற்றும் அவற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டமிடல்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. இதன்போது, மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமை உரையைத் தொடர்ந்து, வளிமண்டலவியல்...

மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியிலும் எதிர்காலத்தைச் செம்மைப்படுத்துவதிலும் ஆசிரியர்களுக்கும் மாணவத் தலைவர்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது - அரசாங்க அதிபர்

නොවැම්බර් 04 2026

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த 2026ஆம் ஆண்டுக்கான மாணவத் தூதுவர் நிகழ்ச்சித்திட்ட நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் தலைமையில், இன்றைய தினம் (04.11.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின்...

வட மாகாண கிராம அபிவிருத்திச் சங்கங்களின் 2026ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தல் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது

නොවැම්බර් 04 2026

யாழ்ப்பாண மாவட்டம் பல்வேறு விருதுகளைப் பெற்றுத் தனது சாதனையைப் பதிவு செய்தது.வட மாகாணத்தில் இயங்கிவரும் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்து, அவற்றின் வினைத்திறன் மற்றும் வினைவிளைதிறனை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தரப்படுத்தல் விருது வழங்கும் விழா இன்று (04.11.2026) புதன்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வட மாகாண...

பாடசாலை கைத்தொழில் முயற்சியாண்மை வட்டங்களை வலுப்படுத்த ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு!

නොවැම්බර් 04 2026

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் கைத்தொழில் முயற்சியாண்மை வட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில், ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பிரதிப் பணிப்பாளர் திரு. கா. சசிகரன் தலைமையில் இன்றைய தினம் (04.11.2026) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் நடைபெற்றது. இச் செயலமர்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அதிதியாகக் கலந்துகொண்டு செயலமர்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்....

வடக்கு ஏற்றுமதி மன்றம் 2027: ஏற்றுமதி ஊக்குவிப்புச் செயலமர்வு!

නොවැම්බර් 03 2026

எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 20 மற்றும் 21ஆம் திகதிகளில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள வடக்கு ஏற்றுமதி மன்றம் (Northern Export Forum 2027) நிகழ்வை முன்னிட்டு, வடமாகாண ஏற்றுமதி ஊக்குவிப்புச் செயலமர்வு இன்று (03.11.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு...

சிறுதானிய உற்பத்தியில் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகளை ஆராய்வு!

නොවැම්බර් 03 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுதானியங்களை உற்பத்தி செய்வதற்கும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆரோக்கியமான பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்குமான முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக இந்தியாவிலிருந்து வருகை தந்த இந்திய முதலீட்டாளரான தத்தோ திரு. எஸ். சுந்தர் அவர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (02.11.2026) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினார்....

« »

Related Links

==> Requesting copies of Birth, Marriage and Death certificates Online
==> Vehicle Revenue Licence Service  Online
==> Bus Seat Booking Online
==>
Train Seat Booking Online