தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சினால் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட பயிலுநர்களிற்கு கடற்தொழிலுக்கான மீன்பிடி படகு, இயந்திரம், மீன்பிடி வலை மற்றும் உபகரணங்கள் , விவசாய தொழில் நடவடிக்கைகளுக்காக நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கல் நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் லெப்டினல் கேணல் , புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட பயிலுநர்கள் கலந்துகொண்டார்கள்.





