காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கு ம் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (15.08.2024) பி. ப 03.00 மணிக்கு காங்கேசன்துறை கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.
நாளை (16.08.2024) காலை 10.00 மணிக்கு நாகபட்டினத்திலிருந்து புறப்படவுள்ள பயணிகள் கப்பல் பி.ப 02.00 மணிக்கு காங்கேசன்துறையினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பாக மேற்படி கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4