வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி)
|
புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலயம் |
|
![]() |
|
| முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம் | |
| மிகவும் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான இவ்வாலயம் 1867ம் ஆண்டு யாஸ்திரீகர் தலமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் வர்த்தமானிப் பிரசுரத்துக்குட்பட்ட ஒரேயொரு ஆலயமாகவும் காணப்படுகின்றது. | |
| இடத்தின் பண்புகள் | |
| ஆரம்ப கால மன்னராட்சிக்காலத்தில் போர்வீரர்களாக இருந்த கரையோரப் பிரதேச மக்களில் குருநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மீன்பிடித்தொழில் செய்யும் நோக்கோடு இப்பிரதேசத்துக்கு வருகை தந்து 1800ம் ஆண்டு சிறுகுடில் அமைத்து சுரூபம் வைத்து வணங்கி வந்தனர். | |
| சான்று | |
| இவ்வாலயம் 1795/4 இலக்க 2013.01.28ந் திகதிய வர்த்தமானியின் வெளியீட்டின் பிரகாரம் தொல்பொருளாக சேர்த்துக்கொள்ளப்பட்டது. | |
| அமைவிடம் | |
| வெற்றிலைக்கேணி J/432 எனும் கிராம சேவகர் பிரிவில் வெற்றிலைக்கேணி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. | |
| செல்லும் முறை | |
| குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பால் கால்நடை, சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனத்தில் செல்ல முடியும். | |
| ஒழுங்கு முறை | |
| திருவிழாக்காலங்களில் மட்டுமே தண்ணீர், மலசலகூட வசதிகள் காணப்படும். | |
| சிறப்புக்கட்டுப்பாடு | |
| மது அருந்த முடியாது | |
| தூரம் | |
| வடமராட்சி கிழக்கு மருதங்கேணி சந்தியிலிருந்து 14km | |
| பராமரிப்பு | |
| கிராம மட்ட அமைப்புக்கள் | |
| தொடர்பு கொள்ளல் | |
| கலாசார உத்தியோகத்தர், | |
|
பிரதேச செயலகம், வடமராட்சி கிழக்கு. தொலைபேசி இல :- 0776164893 மின்னஞ்சல் முகவரி :- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
| கிராம சேவகர், | |
|
வெற்றிலைக்கேணி J/432. தொலைபேசி இல :- 0771791850 |
|
| சிறப்புத்தினம் | |
| வருடந்தோறும் ஆடிமாதம் 02ம் திகதி முடிவடைந்ததும் தொடர்ந்து 08ம் திகதி இவ்வாலய பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. தை மாதமும் விழா நடைபெறுகிறது. | |
| மணற்காடு புனித அந்தோனியார் ஆலயம் (பழைய இடம்) | |
|
|
| முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம் | |
| 1894ம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஆலயம் இருந்த இடம் தெரியாமல் மணற்புயல் காரணமாக மணலால் முற்றாக மூடப்பட்டதோடு இன்று அதன் கட்டடப்பகுதி வெளித்தோன்றயுள்ளது. | |
| பின் தற்போதைய புதிய ஆலயம் 1925ம் ஆண்டில் பிறிதொரு இடத்தில் அமைக்கப்பட்டது. | |
| இடத்தின் பண்புகள் | |
| 1994ம் ஆண்டு அருட்திரு ஒலிவ் அடிகளால் அடிக்கல் நாட்டப்பட்டது. இவ்வாலயத்தின் முதற்குருவாக அருட்திரு ஞானப்பிரகாசம் மங்களதாஸ் திருநிலைப்படுத்தப்பட்டார். | |
| அமைவிடம் | |
| மணற்காடு J/419 எனும் கிராம சேவகர் பிரிவில் மணற்காடு எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. | |
| செல்லும் முறை | |
| குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பால் கால்நடை, சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனத்தில் செல்ல முடியும் | |
| ஒழுங்கு முறை | |
| தொல்லியல் திணைக்கள நடைமுறை | |
| சிறப்புக்கட்டுப்பாடு | |
| மது அருந்த முடியாது | |
| தூரம் | |
|
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி சந்தியிலிருந்து 28km வடமராட்சி வடக்கு பருத்தித்துறையிலிருந்து 12km |
|
| பராமரிப்பு | |
| தொல்லியல் திணைக்களம் | |
| தொடர்பு கொள்ளல் | |
| கலாசார உத்தியோகத்தர், | |
|
பிரதேச செயலகம், வடமராட்சி கிழக்கு. தொலைபேசி இல :- 0776164893 மின்னஞ்சல் முகவரி :- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
| கிராம சேவகர் | |
|
மணற்காடு J/419 தொலைபேசி இல :- 0770239371 |
|
| சிறப்புத்தினம் | |
| தேவாலயப் பெருநாள் ஆண்டுதோறும் ஆனி மாதம் 13ம் திகதி கொண்டாடப்படுகிறது. | |
|
சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயம் |
|
|
|
|
| முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம் | |
|
இயற்கையானதும் நட்புறவானதுமான இச்சரணாலயம் ஏரிகளால் சூழப்பட்டிருக்கிறது.
|
|
| கவர்ச்சியான இச்சரணாலயத்திற்கு பல்வேறுவகைப்பட்ட உள்ளுர் மற்றும் வெளியூர் பறவைகள் நவம்பர் மாதம் தொடக்கம் தை மாதம் நடுப்பகுதி வரை வருவதனால் வித்தியாசமான பறவையினங்களைப் பார்க்க முடியும். அத்துடன் சிலவகைப்பட்ட பறவைகள் வெப்பநிலைக்கேற்ப முட்டையிடுவதுமுண்டு. குமண சரணாலயத்திற்கு அடுத்ததாக முக்கியம் பெறும் ஒரு சரணாலயமாகவும் விளங்குகின்றது. | |
| இடத்தின் பண்புகள் | |
| சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடகிழக்குக் கரையோரத்தில் 49.2 சதுர கிலோமீற்றருக்கு மேலான பரப்பளவைக் கொண்டது. இச்சரணாலயம் ஆய்வாளர்கள், மாணவர்கள், சூழலியலாளர்கள் போன்றோரின் ஆய்வு ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. | |
| அமைவிடம் | |
| சுண்டிக்குளம் J/435 எனும் கிராம சேவகர் பிரிவில் சுண்டிக்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. | |
| செல்லும் முறை | |
| குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பால் கால்நடை மற்றும் மோட்டார் சைக்கிள் போன்ற வாகனத்தில் செல்லல் | |
| தூரம் மருதங்கேணி சந்தியிலிருந்து 35km | |
| பராமரிப்பு | |
| வனவிலங்கு திணைக்களம் | |
| தொடர்பு கொள்ளல் | |
| கலாசார உத்தியோகத்தர், | |
|
பிரதேச செயலகம், வடமராட்சி கிழக்கு. தொலைபேசி இல :- 0776164893 மின்னஞ்சல் முகவரி :- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
|
கிராம சேவகர், சுண்டிக்குளம் J/435 தொலைபேசி இல :- 0770532133 |
|
| நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் | |
|
|
|
| முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம் | |
| வடமராட்சி கிழக்குப்பகுதியில் சிறப்புமிக்க இந்து ஆலயங்களில் முதன்மை பெறுகின்றது. | |
| மூர்த்தி, தலம், தீர்த்தம், தலபுராணம் என்பவற்றைக் கொண்டதும் ஐந்து தலை நாகத்தினை மூலவராகக் கொண்டதும் வரலாற்று சிறப்புடன் அற்புதங்கள் நிறைந்ததும் வடமராட்சி கிழக்கில் பல நாகதம்பிரான் கோயில்கள் இருந்தாலும் தலைமைக் கோயிலாகவும் விளங்குகின்றது. அத்துடன் ஆதிமுதல் இன்றுவரை இக்கிராம மக்கள் எவ்வித கொடிய விஷஜந்துக்கள் தீண்டினாலும் வைத்தியம் செய்வது கிடையாது. இக்கோயிலில் கிடைக்கும் அருமருந்தினை எடுத்து நாககேணியில் உள்ள நீரில் கரைத்து உட்கொண்டு கடி இடத்தில் பூசி சுகமடைவர். தற்போதும் அடியார்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற இப்பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்திற்கு வருகை தருகின்றனர். | |
| இடத்தின் பண்புகள் | |
| யாழ்ப்பாணக்குடாநாட்டின் வடபுலத்தில் பருத்தித்துறை நகரின் கீழ்திசையில் 16km தொலைவில் அமைந்துள்ளது. ஆதியில் இங்கு வாழ்ந்த நாகர் சாதியினர் நாக வணக்கத்தை உடையவர்களாகவும் தனது அரசனை/ தலைவனை தம்பிரான் என்று அழைக்கும் வழக்கத்தினைக் கொண்டிருந்தனர். இதன் காரணமாக நாகதம்பிரான் என்ற பெயரைச் சூட்டி வழிபட்டு வந்துள்ளனர். கோவிற் பதிவேகளின்படி 1845ம் ஆண்டில் நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் பதிவு செய்யப்பட்டுள்ளது. | |
| அமைவிடம் | |
| நாகர்கோவில் J/424 எனும் கிராம சேவகர் பிரிவில் நாகர்கோவில் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. | |
| செல்லும் முறை | |
| குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பால் கால்நடை, சைக்கிள்,மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்ல முடியும். | |
| சிறப்புக்கட்டுப்பாடு | |
| மாமிசம், மது அருந்த முடியாது. ஆண்கள் மேல்சட்டையுடன் செல்ல முடியாது | |
| தூரம் | |
| வடமராட்சி கிழக்கு மருதங்கேணி சந்தியிலிருந்து 18km | |
| பராமரிப்பு | |
| கிராமிய மட்ட அமைப்புக்கள் | |
| தொடர்பு கொள்ளல் | |
| கலாசார உத்தியோகத்தர், | |
|
பிரதேச செயலகம், வடமராட்சி கிழக்கு. தொலைபேசி இல :- 0776164893 மின்னஞ்சல் முகவரி :- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
|
கிராம சேவகர், நாகர்கோவில் J/424 தொலைபேசி இல :- 0770776681528 |
|
| சிறப்புத்தினம் | |
| வருடந்தோறும் புரட்டாதி மாதத்தில் பத்துநாட்கள் திருவிழா நடைபெறுகின்றது. இதில் கப்பல் திருவிழா புரட்டாதி மாத பூரணையின் மறுநாள் ஏழாவது விழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. | |
வலிகாமம் தெற்கு (உடுவில்)
| இணுவில் செகராசசேகரப்பிள்ளையார் கோயில் | |
|
|
|
| பண்டைய தமிழ் மன்னர்களால் அமைக்கப்பட்ட 4 முதுபெரும் ஆலயங்களுள் செகராசசேகரப் பிள்ளையார் ஆலயமும் ஒன்றாகும். செகராசசேகரனால் அமைக்கப்பட்டு வழிபட்ட திருத்தலம் என்பதால் இவ்வாலயம் செகராசசேகரப்பிள்ளையார் கோயில் என அழைக்கப்படுகின்றது | |
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
| உருவாக்கப்பட்ட காலம் | |
| இற்றைக்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. | |
| அமைவிடம் | |
|
முற்காலத்தில் இணுவில் மத்தியில் அமைந்த இணைந்த குளங்களால் நீர் பாய்ச்சப்பட்டு இப்பகுதியில் பருத்தி(அடைப்புக்களில்) விளைந்த பூமி இதுவாகும்.இணுவில் கிராமத்தின் அன்றைய வனப்பினால் சரித்திரப்புகழ் பெற்ற வனப்புடன் கூடியது இவ்வாலயமாகும். |
|
| உருவாக்கியவர் | |
| செகராசசேகரன் என்ற மன்னன் | |
| உருவாக்கப்பட்டதன் நோக்கம் | |
| சைவத்தையும்,கலை,பண்பாட்டம்சங்களையும் வளர்க்கும் நோக்கமாக உருவாக்கப்பட்டது. | |
| அமைவிடம் | |
|
கிராம அலுவலர் பிரிவு :- இணுவில் மேற்கு கிராமத்தின் பெயர் :- பாப்பாத்தோட்டம் விசேட பெயர் :- பருத்தி அடைப்புப் பிள்ளையார் கோயில் |
|
| செல்லும் முறை | |
| குறிப்பிட்ட இடத்திற்கு பஸ், மோட்டார் வாகனம், சைக்கிள் மற்றும் கால்நடையாக செல்லமுடியும். | |
| சிறப்புக்கட்டுப்பாடுகள் | |
| மது,மாமிசம் அருந்த முடியாது.காலை,மதியம்,மாலை போன்ற பூஜை நேரங்களில் மட்டும் தான் அனுமதிக்கப்படுவார்கள். ஆண்கள் மேல்சட்டையுடன் செல்ல முடியாது. | |
| தூரம் | |
| யாழ்ப்பாணம் வலி தெற்கில் அமைந்துள்ள இவ்வாலயம் மருதனார்மடத்திலிருந்து தெற்கு பக்கமாக காங்கேசன்துறை வீதியினூடாக 1 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. காங்கேசன்துறை வீதியில் இணுவில் பாப்பாத்தோட்ட வீதியினூடாக 250 மீற்றர் மேற்கு திசை நோக்கிச் சென்றால் இவ்வாலயம் கண்ணுக்குப் புலப்படும். | |
| பராமரிப்பு | |
| ஆலயப்பரிபாலன சபை | |
| தொடர்பு கொள்ளல் | |
|
பதவி – தலைவர்:- சின்னத்துரை சுந்தரலிங்கம் அலுவலகம் தொலைபேசி இலக்கம் - 0779355086 |
|
| இவ்வாலயத்தின் வருடாந்தப் பெருவிழா சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தியில் கொடியேற்ற விழாவுடன் ஆரம்பிக்கின்றது.பத்தாம் நாளான சித்திரைப் பூரணை தினத்தன்று தீர்த்த திருவிழாவும் சிறப்புடன் நடைபெறுகின்றது. வருடம் முழுவதும் சதுர்த்தி விழாவும் கார்த்திகையில் விநாயகர் விரத காலம் 21 நாளும் சிறப்பான பூசை விழாக்களும்,மார்கழி மாதத்தில் திருவெம்பாவை உற்சவமும் சிறப்பாக நடைபேறுகின்றது. | |
| உடுவில் மகளிர் கல்லூரி | |
|
|
|
| ஆசியாவிலே முதன் முதலில் பெண்கள் விடுதியுடன் உருவாக்கப்பட்ட பாடசாலை உடுவில் மகளிர் கல்லூரி என்பதால் முக்கியத்துவம் பெறுகின்றது எனலாம். | |
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
|
உருவாக்கப்பட்ட காலம்: 1824 ம் ஆண்டு அமைவிடம் :- உடுவில் மத்தி உருவாக்கியவர்:- கரியட் வின்சிலோ அம்மையார் |
|
| உருவாக்கப்பட்டதன் நோக்கம் | |
| இங்குள்ள பெண்கள் கல்வி கற்பதில்லை என்பதனை அறிந்த அம்மையார் அப்பகுதி மக்களை அழைத்து பெண்களுக்கான கல்வியின் அவசியம் பற்றி விளக்கி உடுவில் மகளிர் கல்லூரியினை ஸ்தாபித்தார். | |
| அமைவிடம் | |
| கிராம அலுவலர் பிரிவு :- உடுவில் வடமத்தி
கிராமத்தின் பெயர் :- உடுவில் மத்தி விசேட பெயர்:- - உடுவில் பெண்கள் பாடசாலை |
|
| செல்லும் முறை | |
| குறிப்பிட்ட இடத்திற்கு பஸ், மோட்டார் வாகனம், சைக்கிள் மற்றும் கால்நடையாக செல்லமுடியும். | |
| ஒழுங்கு முறை | |
| குறிப்பிட்ட இடத்தைப் பார்வையிடுவதற்கு பாடசாலை அதிபரின் அனுமதி பெறப்படல் வேண்டும். | |
| தூரம் | |
| யாழ்ப்பாணம் வலி தெற்கில் அமைந்துள்ள இப்பாடசாலை மருதனார்மடச் சந்தியிலிருந்து மேற்குப் பக்கமாக கைதடி மானிப்பாய் வீதியினூடாக 250 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. | |
| பராமரிப்பு | |
| பாடசாலை அபிவிருத்திச்சங்கம் | |
| தொடர்பு கொள்ளல் | |
|
பதவி-அதிபர்- சிரானி மில்ஸ் அலுவலகம் தொலைபேசி இலக்கம் :-0212241110 மின்னஞ்சல் முகவரி :- uduvil girls english இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
|
இணுவில் பரராஐ சேகரப்பிள்ளையார் கோயில் |
|
|
|
|
| பரராஐசேகரப்பிள்ளையார் என்னும் ஆரிய சக்கரவர்த்திகள் வழிவந்த தமிழ் அரசனின் பெயரைத் தாங்கி நிற்கும் இவ்வாலயம் ஆனது சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பை பெறுகின்றது.பரராஐசேகர மன்னனால் இவ்வாலயம் கட்டப்பட்டதாகவோ, பரராஐசேகர மன்னனின் மந்திரி பிரதானிகளால் அல்லது பேரூரின் ஆட்சித் தலைவர்களினால் கட்டப்பட்டதாகவோ அன்றி பரராஐசேகர மன்னனால் வழிபடப்பட்டு வந்தமையால் பரராஐசேகரப்பிள்ளையார் என்ற பெயரை பெற்றிருக்கலாம். | |
|
இடத்தின் / பொருளின் பண்புகள் உருவாக்கப்பட்ட காலம் |
|
| சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது | |
| அமைவிடம் | |
| இணுவில் எனும் பேரூரானது சான்றோர் புகழும் ஆன்றோர்க்கு உறைவிடமாய் சைவ மக்கள் வசிக்கப் பெற்றதுமாய், கொன்றையும்,கூவிளையும், மருதும்,அரசும்,தேமாவும் ,தீம்பலாவும், புஷ்பங்களுமான வசீகர மிகு நந்தவன பூமியாக காணப்படுகின்றது. | |
| உருவாக்கியவர் | |
| ஶ்ரீ பரராஐசேகர மன்னன் | |
| உருவாக்கப்பட்டதன் நோக்கம் | |
| சைவத்தையும்,கலை,பண்பாட்டம்சங்களையும் வளர்க்கும் நோக்கமாக உருவாக்கப்பட்டது. | |
| அமைவிடம் | |
| கிராம அலுவலர் பிரிவு : இணுவில் தென்மேற்கு
கிராமத்தின் பெயர் : வண்ணாங்காடு விசேட பெயர்:மடத்து வாசல் பிள்ளையார் கோயில் |
|
| செல்லும் முறை | |
| குறிப்பிட்ட இடத்திற்கு பஸ்,மோட்டார் வாகனம், சைக்கிள் மற்றும் கால்நடையாகவும் செல்லமுடியும் | |
| ஒழுங்கு முறை | |
| குறிப்பிட்ட இடத்தை பார்வையிடுவதற்கு உல்லாசப் பயணிகள் எதுவிதமான ஒழுங்கு முறைகளையும் பின்பற்றத் தேவையில்லை. | |
|
வரிவிதிப்புக்கள்:- இல்லை சிறப்புக்கட்டுப்பாடுகள் |
|
| மது,மாமிசம் அருந்த முடியாது.காலை,மதியம்,மாலை போன்ற பூசை நேரங்களில் மட்டும் தான் அனுமதிக்கப்படுவார்கள். ஆண்கள் மேல்சட்டையுடன் செல்ல முடியாது. | |
| தூரம் | |
| யாழ்ப்பாணம் வலி தெற்கில் அமைந்துள்ள இவ்வாலயம் மருதனார்மடச் சந்தியிலிருந்து காங்கேசன்துறை வீதியில் 2 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.காங்கேசன்துறை வீதியில் கோவில் வாசல் என அழைக்கப்படும் இணுவில் சந்தியில் நின்று 500 மீற்றர் சென்று மேற்குத்திசையில் உற்றுநோக்கின் இவ்வாலயம் கண்ணுக்குப் புலப்படும் | |
| பராமரிப்பு | |
| நிர்வாக சபை இல்லை | |
| தொடர்பு கொள்ளல் | |
|
தலைவர் - வைத்தீஸ்வரக்குருக்கள், சோமாஸ்கந்தக்குருக்கள் அலுவலக தொலைபேசி இலக்கம் :021 224 1709 |
|
| சிறப்புத்தினம் அல்லது காலம் | |
| வைகாசி மாத சதய நட்சத்திரத்தில் கொடியேற்றத்திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 10ம் நாள் திருவாதிரையில் தேர் உற்சவமும் 11ம் நாள் புனர்பூசத்தன்று தீர்த்தத்திருவிழாவும் நடைபெறும். | |
| இணுவில் கந்தசுவாமி கோயில் | |
|
|
|
| தற்போது இவ்வாலயம் அமைந்துள்ள இடத்தில் வெற்றிலைத்தோட்டம் அமைத்த இணுவில் குடிமகனான பக்திமான் குழந்தையர் வேலாயுதர் நற்பேறு பெற்றார். இவரின் கனவிற் தோன்றிய முருகப்பெருமான் தான் காஞ்சியிலிருந்து வந்ததாகவும்,வெற்றிலைத்தோட்டத்தில் தான் குறிப்பிட்ட இடத்தில் தன்னை ஆதரிக்குமாறும் கூறினார். மேலும் அத்தோட்டத்தில் ஒரு நொச்சி மரத்தினை நாட்டப்பட்டும் அருகே தனது காலால் மிதித்திருப்பதாகவும் தெரிவித்து மறைந்தருளினார். | |
| மறுநாட் காலை வேலாயுதர் தனது தோட்டத்தை அடைந்த போது புதியதொரு நொச்சி மரம் நிற்பதையும் அருகில் கால் மிதித்த அடையாளத்தையும் கண்டார். ஆனந்த மேலீட்டினால் முருகப்பெருமானை வியந்து அவ்விடத்தில் ஒரு குடிசையை அமைத்து விளக்கேற்றி வழிபட்டார். இதனால் இக்காணிக்கு நொச்சியோலை மிதியன் என்றும் தோம்புப் பெயர் ஏற்ப்பட்டது. இவ்வாலயத்தின் தல விருச்சமான நொச்சிமரம் கருவறையின் அருகில் காணப்படுகின்றது. | |
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
| உருவாக்கப்பட்ட காலம்: 12ம்,13ம் நூற்றாண்டென ஆய்வுகள் கூறுகின்றன.
அமைவிடம்: இணுவில் தென்மேற்கு உருவாக்கியவர்:- அக்கிராமத்து மக்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் :- சைவத்தையும்,கலை,பண்பாட்டம்சங்களையும் வளர்க்கும் நோக்கமாக உருவாக்கப்பட்டது. |
|
| அமைவிடம் | |
| கிராம அலுவலர் பிரிவு :- இணுவில் மேற்கு
கிராமத்தின் பெயர் : நொச்சியோலை விசேட பெயர்: - நொச்சியோலை முருகன் |
|
| செல்லும் முறை | |
| குறிப்பிட்ட இடத்திற்கு பஸ், மோட்டார் வாகனம், சைக்கிள் மற்றும் கால்நடையாகவும் செல்லமுடியும் | |
| ஒழுங்கு முறை | |
| குறிப்பிட்ட இடத்தை பார்வையிடுவதற்கு உல்லாசப் பயணிகள் எதுவிதமான ஒழுங்கு முறைகளையும் பின்பற்றத் தேவையில்லை. | |
| சிறப்புக்கட்டுப்பாடுகள் | |
| மது,மாமிசம் அருந்த முடியாது.காலை,மதியம்,மாலை போன்ற பூசை நேரங்களில் மட்டும் தான் அனுமதிக்கப்படுவார்கள். ஆண்கள் மேல்சட்டையுடன் செல்ல முடியாது. | |
| தூரம் | |
| யாழ்ப்பாணம் வலி தெற்கில் அமைந்துள்ள இவ்வாலயம் யாழ் நகரில் நின்று காங்கேசன்துறை வீதியில் 7 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.காங்கேசன்துறை வீதியில் கோவில் வாசல் என அழைக்கப்படும் இணுவில் சந்தியில் நின்றும் மேற்குத்திசையில் உற்றுநோக்கின் இவ்வாலயம் கண்ணுக்குப் புலப்படும். | |
| பராமரிப்பு | |
| ஆலய பரிபாலன சபை | |
| தொடர்பு கொள்ளல் | |
|
பதவி :- இணுவில் கந்தசாமி கோவில் தர்மகர்த்தா சபை தலைவர் அலுவலகம் தொலைபேசி இலக்கம் :- 0212241417 |
|
| சிறப்புத்தினம் அல்லது காலம் | |
| மகோற்சவமாக வைகாசிச் சஷ்டி திதியில் கொடியேற்ற விழாவினைத் தொடர்ந்து ஆனி அமாவாசையில் தீர்த்த உற்சவத்தையும் கொண்ட 25 திருவிழாக்களை தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றது.மகோற்சவ தினங்களில் விசேட திருவிழாக்களாக 12ம் திருவிழா பெருமஞ்சத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. மாம்பழத்திருவிழா, சப்பறத்திருவிழா, வேட்டைத்திருவிழா போன்றவையும் சிறப்பு மிக்க திருவிழாக்களே. | |
| ஏனைய திருவிழாக்களில் கந்தசஷ்டி தனிச் சிறப்புப் பெற்ற திருவிழாவான இவ்வாலயத்தில் நடைபெறுகின்றது. உலகப் பெருமஞ்சமாகவும் முதல் பெருமஞ்சமாகவும் நூற்றாண்டு கடந்த தனிச்சிறப்பு கொண்டதாக காணப்படுகின்றது. | |
| ஆஞ்சநேயர் கோயில் | |
|
|
|
| இவ்வாலய நிறுவுனறும் பிரதம குருவுமான இ.சுந்தரேஸ்வரக்குருக்களின் இனிய கனவில் தோன்றிய ஆஞ்சநேயரின் கோரிக்கைப்படியே இவ்வாலயம் நிறுவப்பட்டது. | |
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
| உருவாக்கப்பட்ட காலம்: 2001 ம் ஆண்டு | |
| அமைவிடம் | |
| இணுவில் மருதனார்மடச் சிற்றூரில் காங்கேசன்துறை வீதியின் மேல் திசையில் வளம் மிக்க விவசாய மண்ணாலமைந்த ஆலயக் கோபுரத்தின் மீது 18 அடி உயர்ந்த மாருதி தேவனும், ஆலயத்தின் அருகில் 72 அடி உயரமான ஆஞ்சநேயர் சிலையும் காட்சிதரும் வண்ணமாக அமைந்துள்ளது. | |
| உருவாக்கியவர் | |
| சிவஶ்ரீ.இ. சுந்தரேஸ்வரக்குருக்கள் | |
| உருவாக்கப்பட்டதன் நோக்கம் | |
| யாழ் மாவட்டத்திலேயே தமக்கென ஒரு ஆலயம் தோன்ற வேண்டுமெனவும் வழிபடும் மக்களின் துயர்துடைக்கவும் சித்தங்கொண்ட ஆஞ்ச நேயரின் கோரிக்கையினை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. | |
| சான்றுகள் | |
| அருளாளர் விநாசித்தம்பி அவர்களால் வாய்வழி செய்தியாக இப்பிரதேசத்தில் இராமபக்தர் தவம் செய்தமை என கூறப்படுகின்றது. | |
| அமைவிடம் | |
|
கிராம அலுவலர் பிரிவு : இணுவில் மேற்கு கிராமத்தின் பெயர் : மருதனார்மடம் விசேட பெயர்: அருள் வளர் சுந்தர ஆஞ்சநேயர் |
|
| செல்லும் முறை | |
| குறிப்பிட்ட இடத்திற்கு பஸ், மோட்டார் வாகனம், சைக்கிள் மற்றும் கால்நடையாகவும் செல்லமுடியும். | |
| சிறப்புக்கட்டுப்பாடுகள் | |
| மது,மாமிசம் அருந்த முடியாது.காலை,மதியம்,மாலை போன்ற பூசை நேரங்களில் மட்டும் தான் அனுமதிக்கப்படுவார்கள். ஆண்கள் மேல்சட்டையுடன் செல்ல முடியாது. | |
| தூரம் | |
| யாழ்ப்பாணம் வலி தெற்கில் அமைந்துள்ள இவ்வாலயம் மருதனார் மடச்சந்தியில் அமைந்துள்ளது. | |
| பராமரிப்பு | |
| ஆலய ஆதீனகர்த்தா | |
| தொடர்பு கொள்ளல் | |
|
பதவி – ஆதீனகர்த்தா - சிவஶ்ரீ.இ. சுந்தரேஸ்வரக்குருக்கள் அலுவலகம் தொலைபேசி இலக்கம் -0774324662 |
|
| சிறப்புத்தினம் அல்லது காலம் | |
| மார்கழி மூலம், மற்றும் ஒவ்வொரு சனி,வியாழன், செவ்வாய் கிழமைகள் சிறப்பான நாட்கள். சனிக்கிழமைகளில் பூசை,அன்னதானம்,பஜனை என்பனவும் நடைபெறும். | |
| சந்திர சேகரப்பிள்ளையார் கோயில்-சுன்னாகம் | |
|
|
|
| வரத பண்டிதர் அவர்கள் பிள்ளையார் கதையை இக்கோயில் மண்டபத்தில் அரங்கேற்றியமையும், சுன்னாகம் தவஞானி செல்லாச்சியம்மையார் அவர்கள் வழிபட்டமையினால் இக்கோயில் சிறப்புப் பெற்றது.அத்துடன் சுன்னாகம் ஐயனார் வீதியிலுள்ள ‘’ தோப்பு வளவில்’’ இறைபக்தி மிகுந்த சைவ பரம்பரையினர் வாழ்ந்து வந்தனர். | |
| இக்காணி சிறந்த தோட்ட நிலமாகவும் விளங்கியது.இந்த இடத்தில் வெள்ளரிக் கொடிகள் பயிரிடப்படுவது வழமையாகவிருந்தது.ஒரு நாள் அந்த வெள்ளரிக் கொடிகளுக்கு நீர் பாய்ச்சும் பொழுது கொடிகளின் நடுவில் எமது பெரும்பனராகிய பிள்ளையார் சிலையாகக் காட்சியளித்தார்.அவர்களுக்கு ஏற்பட்ட ஆனந்தம் எல்லை மீறிச் சென்றது.பக்தி மேலிட்டது.அவர்கள் புனிதமான இடத்தில் பெருமானை அமரச் செய்ய வேண்டும் என்று விரும்பி தற்போதுள்ள ஆலயம் அமைந்துள்ள இடத்தில் ஒரு கொட்டகை அமைத்து வழிபாடு செய்ததாக பரம்பரை கதைகள் மூலம் அறிய முடிகிறது. | |
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
|
உருவாக்கப்பட்ட காலம் :- 400 வருடங்களுக்கு மேலாக அமைவிடம் :- சுன்னாகம் நகர் மத்தியில் இவ்வாலயத்துடன் தாளை விருட்சமும் வானளாவி வளர்ந்துள்ள மருத மரமும்,வயல் நிலமுமாக காணப்படுகின்றது. உருவாக்கியவர் :- அக்காலத்து கிராமத்து மக்கள்
|
|
| உருவாக்கப்பட்டதன் நோக்கம் | |
| சைவத்தையும்,கலை,பண்பாட்டம்சங்களையும் வளர்க்கும் நோக்கமாக உருவாக்கப்பட்டது. | |
| அமைவிடம் | |
|
கிராம அலுவலர் பிரிவு : சுன்னாகம் நகர் மத்தி கிராமத்தின் பெயர் : ஐயனார் கோவிலடி |
|
| செல்லும் முறை | |
| குறிப்பிட்ட இடத்திற்கு பஸ்,மோட்டார் வாகனம், சைக்கிள் மற்றும் கால்நடையாகவும் செல்லமுடியும் | |
| ஒழுங்கு முறை | |
| குறிப்பிட்ட இடத்தை பார்வையிடுவதற்கு உல்லாசப் பயணிகள் எதுவிதமான ஒழுங்கு முறைகளையும் பின்பற்ற தேவையில்லை. | |
| சிறப்புக்கட்டுப்பாடுகள் | |
| மது,மாமிசம் அருந்த முடியாது.காலை,மதியம்,மாலை போன்ற பூசை நேரங்களில் மட்டும் தான் அனுமதிக்கப்படுவார்கள். மேல்சட்டையுடன் செல்ல முடியாது. | |
| தூரம் | |
| யாழ்ப்பாணம் வலி தெற்கில் அமைந்துள்ள இவ்வாலயம் சுன்னாகச் சந்தியிலிருந்து காங்கேசன்துறை வீதி வழியே 200 மீற்றர் சென்று ஐயனார் வீதியினூடான 2 கிலோமீற்றர் தொலைவில் இவ்வாலயம் கண்ணுக்குப் புலப்படும் | |
| பராமரிப்பு | |
| ஆலயப்பரிபாலன சபை | |
| தொடர்பு கொள்ளல் | |
|
பதவி: செயலாளர் –ம-.கோணேஸ்வரன் அலுவலகம் தொலைபேசி இலக்கம் 021 224 2262 |
|
| சிறப்புத்தினம் அல்லது காலம் | |
| நாட்கள் நடைபெற்று சித்திரைப்பூரணை நாளில் தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது. அடுத்த நாள் பூங்காவனம் நடைபெறுகிறது. சதுர்த்தி, ஆனிச்சதயம், பிள்ளையார் கதை, திருவெம்பாவை, சர்வாலய தீபம் என்பன சிறப்பான தினங்களாக காணப்படுகின்றது. | |
| கந்தரோடை தொல்பொருள் மையம் | |
|
|
|
| உயிர் பரிமாணத்தின் தோற்றத்தையும் அது சார்ந்த பண்பாட்டு அம்சங்களையும் பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான இடமாக காணப்படுகின்றது. | |
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
|
உருவாக்கப்பட்ட காலம்:- பெருங்கற்காலம் அமைவிடம்:- கந்தரோடை உருவாக்கியவர்:- அக்காலத்து மக்கள் |
|
|
பயன்படுத்தப்பட்டதன் நோக்கம் :- இடுகாடாக பயன்படுத்தப்பட்டது. இறந்த மனிதர்கள் மட்சாடிக்குள் அடக்கம் செய்யும் நோக்கமாக உருவாக்கப்பட்டது. சான்றுகள் வர்த்தமானி இலக்கம் -1739, திகதி 30.12.2011 |
|
| வரலாற்றுப்புகைப்படம் | |
![]() |
|
| அமைவிடம் | |
|
கிராம அலுவலர் பிரிவு : கந்தரோடை கிராமத்தின் பெயர் : குடாரை விசேட பெயர்:- கத்துறுகொட தொல்லியல் மையம் |
|
| செல்லும் முறை | |
| குறிப்பிட்ட இடத்திற்கு பஸ்,மோட்டார் வாகனம், சைக்கிள் மற்றும் கால்நடையாகவும் செல்லமுடியும் | |
| சிறப்புக்கட்டுப்பாடுகள் | |
| காலையிலிருந்து மாலை வரை பார்வையிடலாம் | |
| தூரம் | |
| யாழ்ப்பாணம் வலி தெற்கில் அமைந்துள்ள இத்தொல்லியல் மையம் சுன்னாகச் சந்தியிலிருந்து மேற்கு நோக்கி 2 கிலோமீற்றர் வரை சென்று கந்தையார் உபாத்தியாயர் வீதியினூடாக சென்று தமிழ் கந்தையா வித்தியாலயத்தின் விதியூடாக 3/4 கிலோமீற்றர் தொலைவில் உற்றுநோக்கின் இத்தொல்லியல் மையம் கண்ணுக்குப் புலப்படும் | |
| பராமரிப்பு | |
| தொல்லியல் திணைக்களம் | |
| தொடர்பு கொள்ளல் | |
| பதவி- செயலாளர்
அலுவலகம் தொலைபேசி இலக்கம் -0112695255 மின்னஞசல் முகவரி – www.arcacology.gov.lk |
|
| இளந்தாரி கோயில்- இணுவில் | |
![]() |
![]() |
| இளந்தாரியாக இருந்த கயிலாயநாதன் எனும் அரசன் புளிய மரத்தில் குடிமக்களின் கண்ணெதிரே ஏறி உருக்கரந்தான். (பச்சைக் கூட்டுடன் மறைந்தான்) பின்பு சில நாட்களில் அம்மரத்தடியில் கூடி நின்ற மக்கள் முன் தோன்றி தம்மை வழிபடும் நெறிகளையும், தெய்வீகத்தையும் கூறி மறைந்தருளினான். இதனால் இவ்விடம் முக்கியத்துவம் பெற்றது எனலாம். | |
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
| உருவாக்கப்பட்ட காலம்:பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகும்
அமைவிடம் :- இணுவில் கிழக்கு உருவாக்கியவர் :- அக்காலத்து அவ்வூர் குடிமக்கள் |
|
| உருவாக்கப்பட்டதன் நோக்கம் :- இளந்தாரி என்ற அரசன் குடிமக்கள் மீது பேரன்பு கொண்டு நல்லாட்சி செய்ததுடன் அவனை தெய்வமாக போற்றி வந்ததினால் இக்கோயில் உருவாக்கப்பட்டது. | |
| அமைவிடம் | |
|
கிராம அலுவலர் பிரிவு : (J/189) இணுவில் கிழக்கு கிராமத்தின் பெயர் : இணுவில் கிழக்கு |
|
| செல்லும் முறை | |
| குறிப்பிட்ட இடத்திற்கு பஸ்,மோட்டார் வாகனம், சைக்கிள் மற்றும் கால்நடையாகவும் செல்லமுடியும் | |
| ஒழுங்கு முறை | |
| குறிப்பிட்ட இடத்தை பார்வையிடுவதற்கு உல்லாசப் பயணிகள் எதுவிதமான ஒழுங்கு முறைகளையும் பின்பற்றத் தேவையில்லை. | |
| சிறப்புக்கட்டுப்பாடுகள் | |
| மது,மாமிசம் அருந்த முடியாது.காலை,மதியம்,மாலை போன்ற பூசை நேரங்களில் மட்டும் தான் அனுமதிக்கப்படுவார்கள். மேல்சட்டையுடன் செல்ல முடியாது. | |
| தூரம் | |
| யாழ்ப்பாணம் வலி தெற்கில் அமைந்துள்ள இவ்வாலயம் மருதனார்மடத்திலிருந்து தெற்கு பக்கமாக நின்றும் காங்கேசன்துறை வீதியினூடாக 1 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. காங்கேசன்துறை வீதியில் இணுவில் மத்திய கல்லூரி ஆரம்ப பாடசாலை வீதியினூடாக 250 மீற்றர் கிழக்கு திசை நோக்கிச் சென்றால் இவ்வாலயம் கண்ணுக்குப் புலப்படும். | |
| பராமரிப்பு | |
| ஆலய ஆதீனகர்த்தா | |
| தொடர்பு கொள்ளல் | |
|
பதவி :- ஆதீனகர்த்தா - ஆறுமுகராசா பரமானந்தப்பிள்ளை அலுவலகம் தொலைபேசி இலக்கம் :- 0771795189 |
|
| சிறப்புத்தினம் அல்லது காலம் | |
| ஆலய முன்றலில் வருடா வருடம் குறித்த திதியில் பொங்கி மடை பரவுதல் இடம்பெறும். | |
யாழ்ப்பாணம்
| யாழ் நூலகம் | |
|
|
|
| ஆசியாவின் மிகப் பெரிய நூலகத்தில் இதுவும் ஒன்றாகும். 1933ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இங்கு 97000 புத்தகங்கள் பாவனையிலிருந்தது. 1981ஆம் ஆண்டு ஆனி மாதம் 1ஆம் திகதி ஏற்பட்ட இனக்கலவரத்தின் போது எரித்து அழிக்கப்பட்டது. யாழ்ப்பாண வராலற்றில் இது ஓர் இருண்ட காலமாக வர்ணிக்கப்படுகிறது. 25000 புத்தகங்களுடன் 2002ஆம் ஆண்டு மீள்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. | |
| பண்பு | |
| யாழ் குடாநாட்டின் நூறு வருடங்களுக்கு முற்பட்ட அரசியல், சமய கலாசார ஆவணங்களின் மூலப்பிரதிகள், பத்திரிகைகள் அடங்கலாக 97000 புத்தகங்கள் காணப்பட்டது. | |
| வரலாற்று புகைப்படம் | |
![]() |
![]() |
| அமைவிடம் | |
| ஜே-81 கிராம அலுவலா் பிரிவில் மணிக்கூட்டு வீதியில் அமைந்துள்ளது. | |
| செல்லும் முறை | |
| பேருந்து, கார், முச்சக்கரவண்டி | |
|
ஒழுங்குமுறை |
|
| அமைதி , உல்லாச பயணிகளுக்கு பார்வையிட மட்டும் அனுமதி | |
| சிறப்புக் கட்டுப்பாடுகள் | |
| பாதணிகள், கைப்பைகள் அனுமதிக்கப்படமாட்டாது. கைபேசி, புகைப்படம் எடுக்க தடை | |
| தூரம் | |
| யாழ் பேருந்து நிலையத்தில் இருந்து 350 மீற்றர் பிரதான வீதி | |
| பராமரிப்பு | |
| யாழ் மாநகர சபை | |
| தொடர்புகளுக்கு | |
|
021 222 6028, 021 222 6030, 021 222 6031 |
|
| சிறப்புதினம் | |
| திங்கள் மற்றும் அரச விடுமுறை தினங்களில் மூடப்பட்டிருக்கும். திங்கள் கிழமைகளில் பத்திரிகை வாசிப்பு பகுதி மட்டும் திறக்கப்படும். | |
| யாழ்ப்பாணக் கோட்டை | |
|
|
|
| 1619ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்ட இக்கோட்டை தொடர்ந்து ஒல்லாந்தர், ஆங்கிலேயரால் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்டு தற்போது வரலாற்றுச்சின்னமாக பராமரிக்கப்படுகிறது. இது இலங்கையின் இரண்டாவது வரலாற்று புகழ் மிக்க கோட்டையாகும். | |
| பண்புகள் | |
|
நட்சத்திர வடிவில் கருங்கற்களாலும், பாறைகளாலும் அமைக்கப்பட்டுள்ளது. அகழிகள் மற்றும் தூக்கு மேடை என்பன தற்போதும் பராமரிக்கப்படுகின்றது. |
|
| வரலாற்று புகைப்படம் | |
|
|
|
| அமைவிடம் | |
| யாழ்ப்பாணம் ஜே-81- கோட்டை கிராம அலுவலப் பிரிவில் கடற்கரை வீதியில் அமைந்துள்ளது. | |
| செல்லும் முறை | |
| பேருந்து, கார், முச்சக்கரவண்டி | |
| ஒழுங்குமுறை | |
| மாலை 5.30 மணி வரை பார்வையிடலாம். | |
| சிறப்புக்கட்டுப்பாடுகள் | |
| தொட்டு சேதப்படுத்தக்கூடாது. | |
| தூரம் | |
| யாழ் பேருந்து நிலையத்தில் இருந்து 400மீற்றர் பண்ணை வீதி வரை | |
| பராமரிப்பு | |
| தொல்பொருள் திணைக்களம் | |
| தொடர்புகளுக்கு
0212224125 |
|
| பண்ணை கடற்கரை பூங்கா | |
|
|
|
| கரையோர பாதுகாப்பிற்கும் பொதுமக்கள் மற்றும் உல்லாச பயணிகளின் பொழுதுபோக்கிற்காகவும் அமைக்கப்பட்டது | |
| பண்பு | |
| கடல்நீர் ஏரியோரமாக உள்ளது. | |
| அமைவிடம் | |
| ஜே 81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் கடற்கரை வீதியில் அமைந்துள்ளது. | |
| செல்லும் முறை | |
| பேருந்து, கார், முச்சக்கரவண்டி | |
| ஒழுங்குமுறை | |
| பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனை தடை, சுத்தம் பேணப்பட வேண்டும் | |
| தூரம் | |
| யாழ் பேருந்து நிலையத்தில் இருந்து 400 மீற்றர் பண்ணை வீதி | |
| பராமரிப்பு | |
| யாழ் மாநகர சபை | |
|
தொடர்புகளுக்கு (0212222275) |
|
| நாக விகாரை | |
![]() |
![]() |
| கி. பி. 3ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் நாகர்களுக்காக தேவநம்பியதீச மன்னனினால் கட்டப்பட்ட விகாரை ஆகும். | |
| பண்பு | |
| வரலாற்று புகழ்மிக்க பௌத்த விகாரை | |
| அமைவிடம் | |
| ஜே 79 சிறாம்பியடி கிராம அலுவலர்பிரிவு ஸ்ரான்லி வீதியில் ஆரிய குளத்திற்கு எதிரே அமைந்துள்ளது. | |
| செல்லும் முறை | |
| பேருந்து, கார், முச்சக்கரவண்டி | |
| ஒழுங்குமுறை | |
| அமைதி பேண வேண்டும் | |
| தூரம் | |
| யாழ் பேருந்து நிலையத்தில் இருந்து 100 மீற்றர் ஸ்ரான்லி வீதி | |
| பராமரிப்பு | |
| இந்து பௌத்த கலாசார அமைச்சு | |
|
தொடர்புகளுக்கு 0771879183 |
|
| சிறப்புதினம் | |
|
பௌத்த சமய பண்டிகை தினங்கள் |
|
|
தொல்பொருள் அருங்காட்சியகம் |
|
![]() |
![]() |
| வரலாற்று காலத்து அரும் பொருட்களை கொண்டதாகும். சுவாமி ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் வீட்டின் சுவரும் இங்கு காணப்படுவது சிறப்பம்சமாகும். | |
| பண்பு | |
| பண்டைய கால கலை, கலாசார பொருட்கள், போர் உபகரணங்கள் மற்றும் பண்டைய நாணயங்கள் என்பவற்றினை பார்வையிடலாம் | |
| சான்று | |
| 188ம் தொல்பொருள் கட்டளைச்சட்டம் வ-பீ-277/40-2011-12-30 (ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் வீட்டின் சுவரிற்குரியது) | |
| வரலாற்று புகைப்படம் | |
|
|
|
| அமைவிடம் | |
| ஜே-78 அத்தியடி கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ளது. | |
| செல்லும் முறை | |
| பேருந்து, கார் ,முச்சக்கரவண்டி | |
| ஒழுங்குமுறை | |
|
ஒளிதெறிப்புடன் புகைப்படம் எடுப்பதற்கு தடை |
|
| சிறப்புக்கட்டுப்பாடுகள் | |
| தொட்டுப் பாரக்க முடியாது. | |
| தூரம் | |
| யாழ் பேருந்து நிலையத்தில் இருந்து 400 மீற்றர் நாவலர் வீதி வரை | |
| பராமரிப்பு | |
| தொல்பொருட்காட்சியகம் | |
|
தொடர்புகளுக்கு |
|
| 0212224125 | |
| யாழ்பாண பேரூந்து நிலையத்திலிருந்து ஸ்ரான்லி வீதி வழியாக 100 மீற்றர் சென்று நாகவிகாரையினை பார்வையிட்டு அதனைத் தொடர்ந்து பலாலி வீதியில் சென்று நாவலர் மண்டபத்தினையும், நாவலர் வீட்டின் சுவர் மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகத்தினை பார்வையிடலாம். | |
|
சிறப்புதினம் |
|
| அரச அலுவலக நேரங்களில் மட்டும் பார்வையிடாலம். | |
| கதிரேசன் கோவில் (வண்ணை கதிர்வேலாயுத சுவாமி ஆலயம்) | |
|
|
|
|
நாட்டுக் கோட்டை செட்டிமாரால் கட்டப்பட்டு 1931ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்ட்டது. புராதன கருங்கல் மற்றும் றங்குன் தேக்கில் மண்டபங்கள் அமைக்கப்பட்ட ஆலயமாகும். |
|
| பண்பு | |
|
றங்குன் தேக்கில் ஆக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளது. |
|
| சான்று | |
| 188ம் தொல்பொருள் கட்டளைச்சட்டம் வ-பீ-277/40-2011-12-30 | |
| அமைவிடம் | |
| ஜே 83 கொட்டடி கிராம அலுவலா் பிரிவில் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ளது. | |
| செல்லும் முறை | |
| பேருந்து, கார், முச்சக்கரவண்டி | |
| ஒழுங்குமுறை | |
| அமைதி பேண வேண்டும் | |
| சிறப்புக்கட்டுப்பாடுகள் | |
| கலாசார உடையணிதல் | |
| தூரம் | |
| யாழ் பேருந்து நிலையத்தில் இருந்து 74 மீற்றா் கே.கே.எஸ் வீதி | |
| பராமரிப்பு | |
| பொது ஆலயம் நிர்வாக சபையின் கீழ் பராமரிக்கப்படுகின்றது. | |
|
தொடர்புகளுக்கு 021222 7334 |
|
| சிறப்புதினம் | |
| தைபூசம், கந்தசஷ்டி | |
| வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயம் | |
|
|
|
ஒல்லாந்தர் ஆட்சி காலத்தில் சைவத்தையும் தழிழையும் வளர்ப்பதற்காக கோபாலச்செட்டியார், வைத்திலிங்கச் செட்டியார் என்பவர்களினால் தஞ்சையை அரசாண்ட மகாராஷ்ட சத்திரபதி பிரதஸ்சிங் என்ற மன்னனின் கட்டளைப்படி கி.பி. 1790 ஆம் ஆண்டளவில் சிற்பசாஸ்திர வல்லுநர் ஸ்ரீகண்ணாயிரஸ்தபதியார் என்பவரால் கட்டப்பட்ட புராதன சிவன் ஆலயமாகும். |
|
| பண்பு | |
| ஆகம விதிப்படி பரிவாரக் கோயில்களுடன் காணப்படுகின்றமை. | |
| சான்று | |
| 188ம் தொல்பொருள் கட்டளைச்சட்டம் வ-பீ-277/40-2011-12-30 | |
|
வரலாற்று புகைப்படம் |
|
|
|
|
| ஜே 83 கொட்டடி கிராம அலுவலர் பிரிவில் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ளது. | |
| செல்லும் முறை | |
| பேருந்து, கார், முச்சக்கரவண்டி | |
| ஒழுங்குமுறை | |
| அமைதி பேண வேண்டும் | |
| சிறப்புக்கட்டுப்பாடுகள் | |
| கலாசார உடையணிதல் | |
| தூரம் | |
| யாழ் பேருந்து நிலையத்தில் இருந்து 75 மீற்றர் | |
| பராமரிப்பு | |
|
வைத்திலிங்கச்செட்டியார் (தர்மகர்த்தா) |
|
| சிறப்புதினம் |
|
| வருடாந்த மகோற்சவம் இரு தடவைகள் இடம் பெறும் | |
|
|
|
| ஆறு கால்மடம் | |
![]() |
|
|
பண்டைய காலத்தில் வழிப்போக்கர்களின் இழைப்பாறுதலுக்காக பாதை ஓரமாக, சந்தை, கோயில், மயானத்திற்கு அருகில் மன்னர்களால் கட்டப்பட்ட மடங்களின் அமைப்பை ஒத்த ஆறு தூண்கள் கொண்ட பாரம்பரிய கட்டிடமாகும். |
|
| மடம், கிணறு, தண்ணீர்தொட்டி, சுமைதாங்கிக்கல், ஆவுரஞ்சிக்கல், பெரிய மரம் என்பன இங்கு காணப்படுகின்றன. | |
|
வரலாற்று புகைப்படம் |
|
![]() |
![]() |
| ஜே-88 புதிய சோனகதெரு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ளது | |
| செல்லும் முறை | |
| பேருந்து, கார், முச்சக்கரவண்டி | |
| தூரம் | |
| யாழ் பேருந்து நிலையத்திலிருந்து 3.5 கிலோமீற்றர் மானிப்பாய் வீதி | |
| பராமரிப்பு | |
| ஞானவைரவா் ஆலய பரிபாலன சபையும், அறிவொளி சனசமூக நிலையமும் இணைந்து பராமரிக்கின்றன. | |
| யாழ்பாண பேரூந்து நிலையத்திலிருந்து கே.கே.எஸ் வீதி வழியாக 75 மீற்றர் சென்று கதிரேசன் கோயிலை பார்வையிட்டு அதனைத் தொடர்ந்து அவ்வீதியாக 25 மீற்றர் சென்று சிவன் கோயிலை தொடர்ந்து சிவன் கோயில் வடக்கு வீதி வழியே மானிப்பாய் வீதியூடாக 2 கிலோமீற்றர் சென்றால் ஆறுகால் மடத்தினை பார்வையிடலாம். | |
வலிகாமம் வடக்கு (தெல்லிப்பளை)
| மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் | |
|
|
|
| சிவாகம முறைப்படி அமைக்கப்பெற்ற ஈழத்து ஆலயங்களில் ஒன்று மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில். குதிரைமுகம் அமையப் பெற்ற மாருதப்புரவீக வல்லியின் குதிரை முகம் நீங்கப் பெற்றமையும் இதன் காரணமாக முருகனை வணங்கி அவ்விடத்திலே ஒரு ஆலயம் அமைத்ததாகவும் இதனால் மாவிட்டபுரம் என்னும் பெயர் அமையப் பெற்றதாகக் கூறப்படுகின்றது. ஈழத்திலே ஐந்து தேர் திருவீதியுலா வரும் ஆலயங்களில் ஒன்றாக சிறப்புப் பெற்றது. இவ்வாலய வருடாந்த உற்சவம் ஆடி அமாவாசை தினத்தை தீர்த்தோற்சவமாகக் கொண்டு 25 நாட்கள் நடைபெறும். இங்கு தைப்பூசம், திருக்கார்த்திகை, ஆருத்ராதரிசனம், கந்தசஷ்டி, சூரன்போர், ஆடிப்பூரம் ஆகிய தினங்கள் விசேட வழிபாட்டுக்குரியவை. | |
| இடத்தின்/பொருளின் பண்புகள் | |
| கி.பி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உக்கிர சோழன் என்னும் சோழ மன்னன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது | |
| சான்று | |
|
தொல்பொருளாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது வர்த்தமானி இல - 1739 திகதி - 2011.12.30 அமைவிடம் : J/230, மாவிட்டபுரம் |
|
| செல்லும் முறை | |
| கே.கே.எஸ் வீதி தெல்லிப்பளை சந்தி ஊடாக மாவிட்டபுரம் சந்தியை சென்றடைதல். | |
| சிறப்புக் கட்டுப்பாடுகள் | |
| மது, மாமிசம் பயன்படுத்த முடியாது, ஆண்கள் மேலங்கியுடன் ஆலயத்திற்குள் செல்ல முடியாது | |
| தூரம் | |
| தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலிருந்து 4km | |
| பராமரிப்பு | |
|
மஹாராஜஸ்ரீ து.ஷ.இரத்தினசபாபதிக் குருக்கள் பிரதம குரு, மாவை ஆதீனம் |
|
| தொடர்புகொள்ளல் | |
| 0213210349, 0778302573 | |
| சிறப்புத் தினம்/காலம் | |
| ஆடி அமாவாசை தினத்தை தீர்த்தோற்சவமாகக் கொண்ட 25 நாட்கள் திருவிழாக் காலம் , பிரதி மாதமும் கார்த்திகைத் திருவிழா மாதோற்சவம் மற்றும் பிரதி வாரமும் வெள்ளிக்கிழமை திருவிழா வாரோற்சவம், வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை நாட்கள் | |
|
ஸ்ரீ நகுலாம்பிகா சமேத ஸ்ரீ நகுலேஸ்வரர் சுவாமி கோவில் |
|
|
|
|
| மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூவகைச் சிறப்பும் அமையப் பெற்றது கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம். இதன் புராதன பெயர் திருத்தம்பலேஸ்வரம். திருத்தம்பலேசுவரர் என்பவர் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு கீரிமுகம் நீங்கப் பெற்றதால் கீரிமலை எனப் பெயர் பெற்றது. இதனை வடமொழியில் நகுலகிரி என்பர். இதனாலேயே கீரிமலையிலுள்ள சிவன் ஆலயம் நகுலேஸ்வரம் எனப் பெயர்பெற்றது. இவ்வாலய வருடாந்த மகோற்சவம் தைப்பூசத்தின் அடுத்தநாள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மகா சிவராத்திரியன்று தீர்த்தோற்சவம் இடம்பெறும். | |
| இடத்தின்/பொருளின் பண்புகள் | |
| ஆதிசோழ மன்னனாகிய முசுகுந்தன், நளன், அருச்சுனன் என்போரால் வழிபடப்பட்டதெனவும் தீர்த்த, தல, யாத்திரைகளுக்குரிய புண்ணிய இடங்களில் ஒன்றாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது | |
| சான்று | |
|
தொல்பொருளாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது வர்த்தமானி இல - 1739 திகதி - 2011.12.30 |
|
| அமைவிடம் | |
| J/226 நகுலேஸ்வரம், கீரிமலை | |
| செல்லும் முறை | |
| கே.கே.எஸ் வீதியூடாக மாவிட்டபுரம் சந்தியினை அடைந்து அங்கிருந்து மேற்கு நோக்கி 3Km தூரத்தில் அமைந்துள்ளது | |
| சிறப்புக் கட்டுப்பாடுகள் | |
| மது மாமிசம் பயன்படுத்த முடியாது, ஆண்கள் மேலங்கியுடன் ஆலயத்திற்குள் செல்ல முடியாது | |
| தூரம் | |
| பிரதேச செயலகத்திலிருந்து 7Km | |
| பராமரிப்பு | |
| சிவஸ்ரீ கு.நகுலேஸ்வரக் குருக்கள், ஆதீனகர்த்தாவும் பிரதம சிவாச்சாரியாரும் நகுலேஸ்வரம், கீரிமலை | |
| தொடர்பு கொள்ளல் | |
| தொலைபேசி - 0602212440 | |
| சிறப்புத் தினம்/காலம் | |
| ஆடி அமாவாசை தினம், மகாசிவராத்திரி தினம், மாசி மாதம் வருடாந்த உற்சவகாலம், வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை நாட்கள் | |
|
கீரிமலைக் கேணி |
|
|
|
|
| இது ஆரம்பத்தில் கண்டகி தீர்த்தம் என அழைக்கப்பட்டது. வரலாற்று மட்டும் சமய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகிய கீரிமலைத் தீர்த்தம் நோய் தீர்க்கும் புண்ணிய தீர்த்தமாக சிறப்புப் பெறுகின்றது. இக்கீரிமலைக் கேணிக்கான நீரூற்றானது தெல்லிப்பளை, மாவிட்டபுரம், சுண்ணாம்புப் பாறை வெடிப்புகளூடாகவும் நேருக்குநேர் மோதும் கடலலைகளினூடாகவும் மேலெழும்பி உருவாகின்றது. கடல் நீரும் நீரூற்றும் ஒன்றிணையும் இத்தீர்த்தமானது “சிவசக்தி” ஒன்றிணைந்த ரூபத்தினை எடுத்தியம்புவதால் இது புனிதத் தன்மையும் தூய்மைத் தன்மையும் பெறுகிறது. | |
| சான்று | |
|
தொல்பொருளாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது வர்த்தமானி இல - 1769 திகதி - 2011.12.30 |
|
| அமைவிடம் | |
| J/226 நகுலேஸ்வரம், கீரிமலை | |
| செல்லும் முறை | |
|
கே.கே.எஸ் வீதியூடாக மாவிட்டபுரம் சந்தியினை அடைந்து அங்கிருந்து மேற்கு நோக்கி 3 1/2 km தூரத்தில் அமைதுள்ளது |
|
| சிறப்புக் கட்டுப்பாடுகள் | |
| ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் நீராடும் கேணி காணப்படுகின்றது. இக்கேணியினுள் சவர்க்காரம், சம்போ போன்றவற்றை பயன்படுத்த முடியாது. காலணியுடன் உள்ளே இறங்க முடியாது. இதனை புனிதமாக வைத்திருக்கவேண்டியது மக்களின் கடமையாகும். பொலித்தீன் பாவிக்க முடியாது | |
| தூரம் | |
| தெல்லிப்பளைப் பிரதேச செயலகத்திலிருந்து 7 km | |
| பராமரிப்பு | |
| வலி வடக்கு பிரதேச சபை | |
| தொடர்புகொள்ளல் | |
| வலி வடக்கு பிரதேச சபை | |
| சிறப்புத் தினம்/காலம் | |
| எல்லா நாட்களும் |
நல்லூர்
| மந்திரிமனை | |
|
|
|
|
நல்லூரில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் மந்திரிமனை நல்லூரின் கடந்தகால வரலாற்றை எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. இது நல்லூர் கோவிலுக்கு 900 மீற்றர் வடக்காகவும் சங்கிலியன் தோப்புக்கு 90 மீற்றர் வடக்காகவும் பருத்தித்துறை வீதியின் இடப்பக்கமாகவும் அமைத்துள்ளது. முன்னாளில் நல்லூர் அரசர்களது அரச பரிபாலன நடவடிக்கைகள் இடம்பெற்ற இடம் இதுவாகும். யுhழ்ப்பாண இராஐ;யத்துக்குரித்தான சிதைவுகளின் சான்றுகளும் அழகான கட்டடக்கலை அமைப்புக்களும், மரவேலைப்பாடுளும் இவ்வுண்மையினை உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் இதன் வடிவமைப்பும் அலங்காரங்களும் அக்காலப்பகுதியில் நிலவிய பண்பாட்டின் குறிப்பிடத்தக்க கலையம்சத்தை பிரதிபலிக்கின்றன
|
|
| சங்கிலியன் தோரணவாசல் | |
|
|
|
|
யாழ்ப்பாண இராஐ;யத்தின் எச்சமாக கருதப்பட வேண்டிய இடத்திலுள்ள ஒரேயொரு சான்று இதுவாகும். இது முத்திரைச்சந்தியிலிருந்து வடக்கு நோக்கி ஒரு சில யார்கள் தூரத்தில் இடங்கொண்டுள்ளது.இம் முகப்புக்கட்டிடமானது தனது ஆரம்பகாலத்தை குறிக்கும் ஒருவிதமான விசேட கட்டிடக்கலை அம்சங்களை கொண்டது. சிலர் இதனை சங்கிலி மன்னனது அரண்மணைவாசல் எனக்கூறுவர். ஆயினும் வேறு சிலர் இதனை யாழ்ப்பாண மக்களது அடிமைச்சின்னமெனக் கூறுவர் எவ்வாறாயினும் யாழ்ப்பாணத்தில் அந்நிய ஆட்சியின் சின்னமாகவே இது காணப்படுகின்றது.
|
|
| சங்கிலியன் தோப்பு | |
![]() |
|
|
நல்லூரில் பருத்தித்துறை வீதியின் இடப்பக்கமாக அமைத்துள்ள நல்லூர் இராஐதானியின் எச்சமாகிய இது முக்கியமானதொரு சான்றாகும். இங்குள்ள இடிபாடுகள் போர்த்துக்கேய பரிஷ் பாடசாலைகளுக்கும், டச்சுக்கால கிறிஸ்தவ பாடசாலைக்கும் உரியவை. இங்கிருக்கும் கட்டடங்கள் மரத்தாலும், மண்ணாலும் சிறியதாக கட்டப்பட்டவை. டாக்டர் .பி. ரகுபதி என்பவரால் செய்யப்பட்ட ஆராட்சியின் படி, மண்ணால் வனையப்பட்ட பாண்டங்களுள் சில 10ஆம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டுக்குரியவையாக இனங்கானப்பட்டன. பிற்காலத்தில் 1984 ஆம் ஆண்டு மேற்படி இடிபாடுகள் புரனமைக்கப்பட்டு தற்போது தொல்பொருளியல் திணைக்களத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
|
|
| யமுனா ஏரி | |
![]() |
|
|
நல்லூர் ராஐதானியின் முக்கியமான எச்சங்களுள் ஒன்றாகக்கருதப்படும் யமுனா ஏரியானது சங்கிலியன் தோப்பு எனப்படும் கல்லாலான முகப்பக்கு கிழக்காகவும் தற்போதுள்ள கிறிஸ்தவ ஆலயத்திலிருந்து சொற்ப தூரத்திலும் அமைத்துள்ளது.முன்னைய அரசர்கள் தமது பாதுகாப்புக்கென இவ் ஏரியினுள் சுரங்கப்பாதை அமைந்தனர் எனவும் அத்தகைய சுரங்கபாதைகளில் ஒன்று மந்திரிமனையுடன் தொடர்புறுகின்றதெனவும் கூறப்படுகின்றது. முன்னைய யாழ்ப்பாண அரசர்களது பிராத்தியத்தில் இயற்கையான பாதுகாப்பு அரண்கள் ஏதுவும் இல்லாமையினால் தமது பாதுகாப்புக்காக அவர்கள் சுரங்கப்பாதைகளை அமைத்தமைபற்றி ஆச்சரியப்பட ஏதுமில்லை. இப்பிரதேச சுற்றாடலில் செங்கற்கள் சுண்ணக்கற்களால் செய்யப்பட்ட அரங்காலத்தூண்கள் மற்றும் மட்பாண்டங்கள் யாவும் இப்பிரதேசத்தில் முன்னொருகாலத்தில் கட்டத்தொகுதியொன்று இருத்திருக்க வேண்டுமென்பதையே எடுத்தியம்புகின்றன.
|
|
| சங்கிலியன் சிலை | |
|
|
|
|
நல்லூரை தலைநகராகக்கொண்டு யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னனது சிலையானது பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாகும். இது யாழ்ப்பாண இராஐ;யத்தின் காலப்பகுதியை எமக்கு நினைவூட்டுகின்றது. கிறிஸ்தவ ஆலயத்தில் இருந்து சில கிலோமீற்றர்கள் மேற்குப்பக்கமாக யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதிக்கு அருகாமையில் இச் சிலை அமையப்பெற்றுள்ளது. 1974 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆந்திகதி அப்போதைய மாநகரசபை பிதாவாக இருந்த திரு.துரையப்பா என்பவரால் இச் சிலை திறந்து வைக்கப்பட்டது. பின்னர் 2011.08.03 ஆம் திகதியன்று இச்சிலை மீளமைக்கப்பட்டு இன்று புதுப்பொலிவுடன் திகழ்கின்றது.
|
|
| நல்லூர் கந்தசுவாமி கோயில் | |
|
|
|
|
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்துக் கோயில்களில் ஒன்று நல்லூர் கோயில். நுல்லூர் நகரில் அமைத்துள்ள இது தனக்கென நீண்டவரலாற்றை கொண்டது. யாழ்ப்பாண வைபவமாலையில் உள்ளதன் படி, 13ஆம் நூற்றாண்டின் முன்னர் யாழ்ப்பாணத்தையாண்ட யாழ்ப்பாண அரசனது மந்திரியாயிருந்த செண்பக பொருமாள் என்பவரால் இக்கோயில் இதேயிடத்தில் கட்டியெபழுப்பப்பட்டது. காலனித்துவக் காலப்பகுதியில் இக்கோயில் பலதடவைகள் மீளமைக்கப்பட்ட போதிலும், வரலாற்றில் இக்கோயில் புகழ்வாய்ந்ததாகும். காலனித்துவ ஆட்சியாளர்களினால் அழிக்கப்பட்டதன் பின் இக்கோவிலை ஸ்தாபித்த இரகுநாத மாப்பாண முதலியபார் என்பவரது பரம்பரையினரால் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றது.
|
|
| சென் ஜேம்ஸ் தேவாலயம் | |
|
|
|
|
காலனித்துவக் காலப்பகுதியில் ஸ்தாபிக்கப்பட்ட முக்கிய தேவாலயங்களுள் ஒன்றாகிய இது நீண்டதொரு வரலாற்றை கொண்டது. சங்கிலியன் தோப்பு என அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ள கிறிஸ.தவ ஆலயமானது போர்த்துக்கீசர்களால் கத்தோலிக்க ஆலயமாக கட்டப்பட்டு பின்னர் டச்சுக்காரர்களினாலும், பிரிட்டிஷ்காரர்களினாலும், புரட்டஸ்தாந்து ஆலயமாக மாற்றியமைக்கப்பட்டது. 1818 ஆம் ஆண.டில் இந் தோவாலயம் வண.ஜோசப் நைட் அடிகளாரால் நிர்வகிக்கப்பட்டடு 1823 இல் புனித யாக்கோபு ஆலயமென பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முந்தைய நல்லூர் ஆலயத்தின் மூலஸ்தான சிதைவுகள் இன்றும் இவ்வாலயத்தின் முக்கியத்துவமாகும்.
|
|
| கில்னர் மண்டபம் | |
![]() |
|
|
ஜோன் ஹில்னர் (1938 ஆண்டு பிறந்தவர் ) என்பவரது நினைவாகவும் இலங்கையில் அவரது சேவையை பாராட்டும் விதமாகவும் கட்டப்பட்டது ஹில்னர் மண்டபம். இம்மண்டபத்திற்கான அத்திவாரம் (சபாசங்கத்தின் பதில் தலைவராக இருந்தவராகிய) திரு.ட்டீ.டபிள்யு.காரட் என்பவரால் 1909 ஆம் ஆண்டு செப்டெம்பர் 9ம் திகதி இடப்பட்டது.இலங்கையில் அவரால் வழங்கப்பட்ட சேவைபற்றிய விளக்கவுரை, யாழ்ப்பாணம் புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. இதைவிடவும் Nஐhன் ஹில்னர் அவர்களது நினைவாக 1987 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட புனித பீட்டர்ஸ் ஹில்னர் பாலர் பாடசாலையும் குறிப்பிடத்தக்கது.
அரச வர்த்தமானி இலக்கமும் திகதியும் 1739 2011-12-30 கிரமசேவகர் பிரிவு :- ஜே 101 நீராவியடி நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இருந்தான தூரம் 4.3 கி.மீ
|
|
| இந்துசாதனம் | |
![]() |
|
|
நீராவியடி கிராம உத்தியோகத்தர் வசம் அமைந்துள்ள நீராவியடி கிராம வித்தியாலய வீதியில் 10 ம் வரிப்பணஇலக்கமுடைய இடத்தில் அமைந்துள்ள சைவ நிர்சாக சபையின் பதிவாலயமாக உபயோகித்திருக்கும் இந்துசாதனசாலை. இது இந்து மதத்தை பரப்புவதற்கு ஆக அமைக்கப்பட்ட பத்திரிகை
|
|
| யாழ்ப்பாண பல்கலைக்கழகம் | |
![]() |
|
|
யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது 1974 ஆம் ஆண்டு இலங்கை பல்கலைக்கழகத்தின் ஆறாவது வளாகமாக பரமேஸ்வராக்கல்லூரியை நடுவில் உள்வாங்கியதன் மூலம் உருவாக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டில் இது சுயாதீனமுடையதொருஃ தானாக இயங்கத்தக்கதொரு பல்கலைக்கழகமாக மாறியது. இது யாழ்ப்பாணம், திருநெல்வேலி, சேர்.பொன.; இராமநாதன் வீதியில் அமைந்துள்ளது. பேராசிரியர்களான எஸ். பத்மநாதன் மற்றும் வசந்தி அரசரட்ணம் ஆகியோர் முறையே வேந்தராகவும், உப வேந்தராகவும் இருக்கின்றனர். ஏறக்குறைய 5500 மாணவர்கள் கல்விகற்பது குறிப்பிடத்தக்கது. 06 கற்கை பீடங்களும் இராமநாதன் நூண்கலைக்கல்லூரி முதலிய 02 கற்கை நிலையங்களும் இங்குள்ளன.
|
|
| யாழ்ப்பாண தொழினுட்பக்கல்லூரி | |
![]() |
|
|
இக் கல்லூரி யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைத்துள்ளது. இது 1959 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி நியூசிலாந்து தூதவர் திரு ஜே.ஹன்ட்டர்ஸ் என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டது. பாடசாலையிலிருந்து விலகியோருக்கும், பல்கலைக்கழக அனுமதியை தவறவிட்டவர்களுக்கும் சுயதொழிலில் ஈடுபட விரும்புவர்களுக்கும் பரந்தளவில் வாய்ப்புக்களை இக்கல்லூரி வழங்குகின்றது. மேலும் 2009 ஆம் ஆண்டு இக்கல்லூரியானது தொழிலிநுட்ப கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டதுடன் மாணவர்களுக்கென பலவிதமான கற்கை நெறிகளையும் கொண்டுள்ளது.
|
|
| யாழ் இந்துக்கல்லூரி | |
![]() |
|
|
இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகளுள் ஒன்று யாழ்ப்பாண இந்துக்கல்லூரி. கிறிஸ்தவ மிஷனரி பாடசாலைகளுக்கு மாற்றீடான ஆங்கில மொழிப்பாடசாலை ஒன்று வேண்டுமென எண்ணிய இந்து சமய மக்களால் 1886இல் இது ஆரம்பிக்கப்பட்டது. அந்நாட்களில் இது சுதேசநகர உயர்பாடசாலையென அழைக்கப்பட்டது. இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட அதே ஆண்டில் விவேகானந்த சுவாமிகள் இப்பாடசாலைக்கு விஐயம் செய்தமையானது குறிப்பிடத்தக்க அம்சமாகும். பொத்தமன் அப்பாப்பிள்ளை என்பவர் முதலாவது அதிபராக இருந்தார்.1890 இருத்து 1892 வரையான காலப்பகுதியில் இப்பாடசாலை நிதிப்பிரச்சனைகளை எதிர் நோக்கிய வேளை சைவப்பரிபாலன சபையிடம் கையளிக்கப்பட்டு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது வண்ணார்பண்ணையில் அமைந்துள்ளது.
|
|
| அரியாலை கிழக்கு கடற்கரை | |
![]() |
|
|
நல்லூர் பிரிவிலுள்ள அரியாலை கிழக்கு கடற்கரையோரம் இது இடம் கொண்டுள்ளது. அரியாலை என்பது யாழ்ப்பாணத்திலிருந்து 5கி.மீ கிழக்காக அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் புறநகரமாகும் யாழ் குடாநாட்டில் உள்ள அதிசிறந்த கடற்கரைகளுள் ஒன்றென இது கூறப்படுகின்றது. மென்மையான அலைகள் கரையை நோக்கி வருகின்ற அடர் நீல நிற நீரினுள் நீண்ட தூரம் நடந்து செல்ல முடியும் இக்கடற்கரையினை பொது மக்களுக்கான விடுமுறைத்தலமாக புனரமைப்புச்செய்வதற்கு அண்மையில் நல்லூர் பிரதேச சபை தீர்மானித்துள்ளது. கூடியவிரைவில் அபிவிருத்தி வேலைகள் இடம்பெறவுள்ளன.
|
வலிகாமம் தென்மேற்கு (சண்டிலிப்பாய்)
| ஐம்பு கோள பட்டினம், சம்பில்துறை |
![]() |
|
|
|
இலங்கையை ஆண்ட கஐபாகு மன்னன் சேரநாட்டிலிருந்து கண்ணகி விக்கிரகத்தை சம்பில்துறை வழியாக கொண்டு சென்றமையினாலும் , சங்கமித்தை புத்தரின் சின்னமான வெள்ளரசு மரக்கிளையை இக்கிராமத்தின் வழியாக எடுத்துச் சென்றமையினாலும் , மாருதப்புரவீகவல்லி வந்து இறங்கியமையாலும் மீனவர்கள் மீன்பிடி துறைமுகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சம்பில்துறை / ஐம்பு கோள பட்டினம் முக்கியத்துவம் பெறுகின்றது |
| இடத்தின் பொருளின் பண்புகள் |
![]() |
|
சான்று வர்த்தமானி இல 1486 வெளியீட்டுத்திகதி 23,02,2007 |
| வரலாற்றுப் புகைப்படம் |
![]() ![]() |
| அமைவிடம் |
|
கிராம சேவகர் பிரிவு J/152 கிராமத்தின் பெயர் மாதகல் மேற்கு |
| செல்லும்முறை |
| சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திலிருந்து பண்டத்தரிப்புசந்தி அங்கிருந்து மாதகல் பின்னா் கடற்கரை வீதியூடாக 1கிமீ துாரத்தில் அமைந்துள்ளது |
| ஒழுங்கு முறை |
| காலை 8 மணிமுதல் மாலை 8 மணிவரையும் பார்வையிடலாம் பாதணியுடன் செல்லமுடியாது மது மாமிசம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது |
| துாரம் |
|
சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் இருந்து பண்டத்தரிப்பு சந்தி 3கிமீ பண்டத்தரிப்பு சந்தி இருந்து மாதகல் கடற்கரை 5 கிமீ மாதகல் கடற்கரை இருந்து ஐம்பு கோள பட்டினம் .07 கிமீ |
| வரிவிதிப்புக்கள் |
| மாதகல் சம்பில்துறையினை ஒரு உல்லாசப் பயணத்துறையாக்வும் மதவழிபாட்டிற்குரிய இடமாகவும் காணப்படுவதனால் இங்கு எவ்வித கட்டண அறவீடுளோ வரி விதிப்புக்ளோ இல்லை |
| சிறப்புக்கட்டுப்பாடுகள் |
| மாதகல் சம்பில்துறை உல்லாச பயணத்துறையினர் வணக்க தலமாகவும் கருதுவதனால் இங்கு மது மாமிசம் அருந்துவதில்லை இவ்விடத்தை சமயாசாரப்படி தரிசனம்செய்து வருகின்றனர். |
| இந்தியாவிலிருந்து சங்கமித்தை வந்திறங்கிய இடம் இது எனக்கூறப்படுகிறது. இவ்விடத்தில் சங்கமித்தையின் சிலையும் கடற்கரையோரம் நிறுவப்பட்டுள்ளது |
வலிகாமம் மேற்கு (சங்கானை)
|
ஒல்லாந்தர் கால தேவாலயம் |
|
|
|
|
| ஒல்லாந்தர் கால கட்டடக்கலைக்கு சான்றாகவுள்ளது. | |
| இடம்/பொருளின் பண்பு |
|
| போத்துக்கேயரால் நிர்மாணிக்கப்பட்டு பின்னர் தற்போதையது போல உருவாக்கப்பட்டது. முருகைக்கற்களால் உருவாக்கப்பட்ட இது பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவிலை இடித்து அதன் கற்கள் கொண்டு கட்டப்பட்டதாக மரபுவழிக்கதை உண்டு. | |
| சான்று | |
| 1486/2007 - 02- 23 | |
| அமைவிடம் | |
| J/180, சங்கானை தெற்கு. | |
| செல்லும்முறை | |
| 782/ 787 இலக்க பேரூந்து | |
| சிறப்புக் கட்டுப்பாடுகள் | |
| முன் அனுமதி பெற்றே செல்லலாம். | |
| தூரம் | |
| சங்கானை பிரதான பேரூந்து தரிப்பிடத்திலிருந்து 0.5km | |
| பராமரிப்பு | |
| தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம் | |
| தொடர்பு கொள்ளல் | |
| தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம் | |
| பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவில் | |
|
|
|
| பிரசித்தி பெற்ற விஷ்ணு ஆலயம். | |
| இடம் / பொருளின் பண்பு | |
| தக்ஷ்ணகைலாய புராணத்தில் இவ்வாலயம்பற்றிக் கூறப்பட்டுள்ளது.விஷ்ணு ஆமைவடிவத்தில் தோன்றியதாக கூறப்படுகின்றது. | |
| அமைவிடம் | |
| J/170, பொன்னாலை | |
| செல்லும்முறை | |
| சங்கானை பிரதான பேரூந்து தரிப்பிடத்திலிருந்து 782 இலக்க பேரூந்தூடாக மூளாய் சந்தி, பின்னர் தனிப்பட்ட வாகனமூடாக | |
| ஒழுங்குமுறை | |
| உரிய பண்பாடு பேணப்பட வேண்டும். | |
| சிறப்புக் கட்டுப்பாடுகள் | |
| போதைப்பொருட்கள், மாமிசம் விலக்கப்பட வேண்டும். ஆண்கள் மேலங்கியுடன் செல்வது கூடாது. பாதணிகளுடன் உட்செல்லல் கூடாது. | |
| தூரம் | |
| சங்கானை பிரதான பேரூந்து தரிப்பிடத்திலிருந்து 08km | |
| பராமரிப்பு | |
| ஆலய பரிபாலனசபை | |
| தொடர்பு கொள்ளல் | |
| ஆலய பரிபாலன சபை 021 205 1815 | |
| சிறப்பு தினம்/ காலம் | |
| ஆவணி, மார்கழி, திருவிழாக்காலங்கள், ஏகாதசி, திருவெம்பா | |
|
பறாளாய் விநாயகர் ஆலயம் |
|
|
|
|
| இடம் / பொருளின் பண்பு | |
| யாழ்ப்பாண அரசர்கால ஆலயம். பறாளாய் விநாயகர் பள்ளில் இதன் வரலாறு கூறப்பட்டுள்ளது. | |
| அமைவிடம் | |
| J/174, சுழிபுரம் கிழக்கு | |
| செல்லும்முறை | |
| சங்கானை பிரதான பேரூந்து தரிப்பிடத்திலிருந்து 782 இலக்க பேரூந்தூடாக சுழிபுரம் தபால் அலுவலகம், பின்னர் தனிப்பட்ட வாகனமூடாக | |
| ஒழுங்குமுறை | |
| உரிய பண்பாடு பேணப்பட வேண்டும். | |
| சிறப்புக் கட்டுப்பாடுகள் | |
| போதைப்பொருட்கள், மாமிசம் விலக்கப்பட வேண்டும். ஆண்கள் மேலங்கியுடன் செல்வது கூடாது. பாதணிகளுடன் உட்செல்லல் கூடாது. | |
| தூரம் | |
| சங்கானை பிரதான பேரூந்து தரிப்பிடத்திலிருந்து 06km | |
| பராமரிப்பு | |
| ஆலய பரிபாலன சபை | |
| தொடர்பு கொள்ளல் | |
| ஆலய பரிபாலன சபை 0776284439 | |
| சிறப்பு தினம் / காலம் | |
| ஆனி திருவிழா, பிள்ளையார் கதை | |
| துணைவி புராதன ஆலயம் | |
|
|
|
| கற்கோவிலாக காணப்படுகின்றது. கிரந்த எழுத்திலான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றது. பிள்ளையார் மற்றும் சிவன்(பிரகதீஸ்வரர்) ஆலயங்கள் காணப்படுகின்றது. | |
| இடம் / பொருளின் பண்பு | |
| கி.பி. 15 - 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஏறத்தாழ 50”X425” அளவுடையது. | |
| அமைவிடம் | |
| J/159, சங்கரத்தை | |
|
செல்லும்முறை |
|
| தனிப்பட்ட வாகனமூடாக | |
| ஒழுங்குமுறை | |
| உரிய பண்பாடு பேணப்பட வேண்டும். | |
| சிறப்புக் கட்டுப்பாடுகள் | |
| போதைப்பொருட்கள், மாமிசம் விலக்கப்பட வேண்டும் | |
| தூரம் | |
| சங்கானை பிரதான பேரூந்து தரிப்பிடத்திலிருந்து 06km | |
| பராமரிப்பு | |
| கிராம அலுவலர் - J/159, சங்கரத்தை | |
| வட்டுக்கோட்டை தேவாலயம் | |
|
|
|
| ஞாபகார்த்தமாக கருங்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது | |
| சான்று | |
| 1739/2011 - 12 - 30 |
|
| அமைவிடம் | |
| J/166, வட்டு தென்மேற்கு | |
| செல்லும்முறை | |
| சங்கானை பிரதான பேரூந்து தரிப்பிடத்திலிருந்து 782 / 787 இலக்க பேரூந்தூடாக சித்தங்கேணி, சித்தங்கேணி இலிருந்து 785/ 789 இலக்க பேரூந்தூடாக | |
| ஒழுங்குமுறை | |
| உரிய பண்பாடு பேணப்பட வேண்டும். | |
| சிறப்புக் கட்டுப்பாடுகள் | |
| முன் அனுமதி பெற்றே செல்லலாம். போதைப்பொருட்கள் விலக்கப்பட வேண்டும். | |
| தூரம் | |
| சங்கானை பிரதான பேரூந்து தரிப்பிடத்திலிருந்து 05km | |
| பராமரிப்பு | |
| பாதிரியார், வட்டு தேவாலயம். | |
| தொடர்பு கொள்ளல் | |
| செயலாளர், வட்டு தேவாலயம் (0772007585) | |
| சிறப்பு தினம் / காலம் | |
நத்தார், உயிர்ப்பு விழா, ஆண்டுவிழா |
|
| திருவடிநிலை | |
|
|
|
| இடம்/ பொருளின் பண்பு | |
| பிதிர்க்கடன் செய்யும் புனிதத்தலம். கி;.மு. இருந்தே புகழ்பெற்றது. நம்பொத்த பௌத்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது | |
| அமைவிடம் | |
| J/174, சுழிபுரம் கிழக்கு | |
| செல்லும்முறை | |
| சங்கானை பிரதான பேரூந்து தரிப்பிடத்திலிருந்து 782 இலக்க பேரூந்தூடாக சுழிபுரம் சந்தி, பின்னர் தனிப்பட்ட வாகனமூடாக | |
| ஒழுங்குமுறை | |
| உரிய பண்பாடு பேணப்பட வேண்டும். (திருவிழாக்காலங்களில் மட்டும்) | |
| சிறப்புக் கட்டுப்பாடுகள் | |
| போதைப்பொருட்கள், மாமிசம் விலக்கப்பட வேண்டும். (திருவிழாக்காலங்களில் மட்டும்) | |
| தூரம் | |
| சங்கானை பிரதான பேரூந்து தரிப்பிடத்திலிருந்து 10km | |
| பராமரிப்பு | |
| கிராம அலுவலர் - J/174, சுழிபுரம் கிழக்கு | |
| தொடர்பு கொள்ளல் | |
| கிராம அலுவலர் - J/174, சுழிபுரம் கிழக்கு | |
| சிறப்பு தினம்/ காலம் | |
| ஆடி அமாவாசை, பறாளாய் விநாயகர் ஆலய திருவிழா நாட்கள், பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலய திருவிழா நாட்கள். |
வலிகாமம் கிழக்கு (கோப்பாய்)
| நிலாவரைக் கிணறு | |
![]() |
![]() |
| இராமாயண காலத்தில் இராம இராவண போர்க்காலத்தில் வருகை தந்த வானரப் படைகளுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டதால், இராமன் தனது வில்லினை குற்றி நீர் எடுத்த இடமே நிலாவரைக் கிணறு. | |
| இது புத்தூரில் ஒரு அதியமான வற்றாத கிணறாக விளங்குவது இதன் முக்கியத்துவமாகும். | |
| இடத்தின் பண்புகள் | |
|
காலம் - கி.பி 1824ம் ஆண்டளவில் அமைவிடம் - நிலாவரை புத்தூர் |
|
| பயன்படுத்தியவர் | |
| பயன்படுத்திய நோக்கம் - கிணற்றின் மேற்பரப்பில் நன்னீர் காணப்பட்டமை. வற்றாத கிணறாக காணப்பட்டமை. | |
| வரலாற்று புகைப்படம் | |
|
|
|
| அமைவிடம் | |
|
கிராம சேவகர் பிரிவு – J/275 கிராமத்தின் பெயர் - நவக்கிரி விசேட பெயர் - நிலாவரை |
|
| செல்லும் முறை | |
| கால்நடை, மோட்டார் சைக்கிள் | |
| ஒழுங்கு முறை | |
| நிலாவரை பிரதேசத்தினை சுற்றியுள்ள இடங்களினை அசுத்தப்படுத்தக் கூடாது. தவறின் தண்டிக்கப்படுவர். | |
| சிறப்புக் கட்டுப்பாடுகள் | |
|
மது அருந்த முடியாது. எந் நேரத்திலும் செல்லலாம் |
|
| தூரம் | |
| புத்தூர் பருத்தித்துறை பிரதான வீதியில் இருந்து உள்ள தூரம் - 3 கி.மீ | |
| பராமரிப்பு | |
| வலி கிழக்கு பிரதேச சபை உள்ளுராட்சி திணைக்களம் | |
| தொடர்பு கொள்ளல் | |
|
தவிசாளர் /செயலாளர் வலி கிழக்கு பிரதேச சபை தொ.பேசி இல – 021 205 8866 |
|
| சிறப்பு தினம் அல்லது காலம் | |
| எப்பொழுதும் | |
| மூலிகைத் தோட்டம் | |
![]() |
![]() |
| சித்தர்கள் ஞானிகள் கூறிய கருத்துக்களை அடிப்படையாக கொண்டவையான சிகிச்சை, பத்தியம் போன்ற நடைமுறைகள் அனைத்திற்கும் உரிய மூலிகைகள் ஆகும். | |
| இடத்தின்/பொருளின் பண்பு | |
|
அமைவிடம்:- நவக்கிரி, புத்தூர் பயன்படுத்தியோர்:- பிரதேச மக்கள் நோக்கம்:- உடல் ஆரோக்கியத்திற்கான ஆயுள்வேத சித்த வைத்தியம். |
|
| வரலாற்றுப்புகைப்படம் |
|
![]() |
![]() |
| தூரம் | |
| பருத்தித்துறை வீதி புத்தூரில் இருந்து உள்ள தூரம் 3 கி.மீ | |
| பராமரிப்பு | |
| மாகாண சுதேச வைத்திய திணைக்களம் | |
| தொடர்பு கொள்ளல் | |
|
மாகாண சுதேச வைத்திய திணைக்களம், யாழ்ப்பாணம். தொ.இல – 021 222 2278 |
|
| சிறப்புத்தினம் அல்லது காலம் | |
| காலை 8.30 - 4.15 கடமை நேரத்தில் | |
| பொக்கணை நீரூற்று | |
|
|
|
| இராமன் தான் நீர் அருந்துவதற்காக ஊரெழுவில் தோண்டி நீர் அருந்திய இடமே பொக்கணை வற்றாத நீருற்றாகும். | |
| இடத்தின் பண்புகள் | |
|
காலம் - இராமன் இலங்கைக்கு வந்த காலம் அமைவிடம் - ஊரெழு, சுன்னாகம் பயன்படுத்திய நோக்கம் - நன்னீர் |
|
|
|
|
| வரலாற்று புகைப்படம் | |
|
|
|
| அமைவிடம் | |
|
கிராம சேவகர் பிரிவு – J/267 கிராமத்தின் பெயர் - ஊரெழு, மேற்கு விசேட பெயர் - யாமா |
|
| செல்லும் முறை | |
| கால்நடை, மோட்டார் சைக்கிள் | |
| ஒழுங்கு முறை | |
|
தற்பொழுது தேசிய நீர் வழங்கல் அதிகார சபையினால் பராமரிக்கப்படுகின்றது. நீர் விநியோகம் நடைபெறுகின்றது. |
|
| சிறப்புக் கட்டுப்பாடுகள் | |
| மது, மாமிசம் பயன்படுத்தக் கூடாது. | |
| தூரம் | |
| பலாலி வீதியிலிருந்து 300m | |
| பராமரிப்பு | |
| தேசிய நீர் வழங்கல் அதிகார சபை | |
| தொடர்பு கொள்ளல் | |
|
தேசிய நீர் வழங்கல் அதிகார சபை தொ.பேசி இல – 0212223742 |
|
| சிறப்பு தினம் அல்லது காலம் | |
| எப்பொழுதும் | |
| அக்கரை கடற்கரை | |
![]() |
![]() |
| அச்சுவேலியில் அமைந்துள்ள அழகிய கடற்கரை | |
| இடத்தின் பண்பு | |
| உல்லாச கடற்கரை | |
| வரலாற்றுப் புகைப்படம் | |
|
|
|
| அமைவிடம் | |
|
கிராம சேவகர் பிரிவு – J/283 கிராமத்தின் பெயர் - அச்சுவேலி விசேட பெயர் - அக்கரை கடற்கரை |
|
| செல்லும் முறை | |
| கால்நடை, மோட்டார் சைக்கிள் | |
| சிறப்புக் கட்டுப்பாடுகள் | |
| மது, மாமிசம் பாவிக்க கூடாது. | |
| தூரம் | |
| பருத்தித்துறை வீதியிலிருந்து 4 கி.மீ | |
| பராமரிப்பு | |
| வலி.கிழக்கு பிரதேச சபையினால் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. | |
| சிறப்பு தினம் அல்லது காலம் | |
| எப்பொழுதும் | |
| பரி.கன்னிமரியாள் தேவாலயம் | |
|
|
|
| இடம் |
|
| கோப்பாய் மத்தி | |
| நூற்றாண்டினைக் கடந்த தேவாலயம் | |
| இடத்தின் பண்புகள் | |
| பழமையான தேவாலயம் | |
| அமைவிடம் | |
|
கிராம சேவகர் பிரிவு – J/261 கிராமத்தின் பெயர் - கோப்பாய் மத்தி |
|
| செல்லும் முறை | |
| பருத்தித்துறை பிரதான வீதியில் அமைந்துள்ளதால் பஸ் | |
| தூரம் | |
| கோப்பாய் சந்தியிலிருந்து 300 m தூரத்தில் (யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் பாதை ) உள்ளது. | |
| பராமரிப்பு | |
| தேவாலயசபை | |
| அச்சுவேலி ஒல்லாந்தர் கால கோட்டை | |
|
|
|
| இடம் | |
| அச்சுவேலி தென்னிந்திய திருச்சபை தேவாலயம்
ஒல்லாந்தர் கட்டிய 12 பிரபல்யமான தேவாலயங்களில் இதுவும் ஒன்று .1606 இல் கட்டப்பட்டது. இரண்டு மாடிக் கட்டிட அமைப்பைக் கொண்டது. 2000 பேர் வரை ஆராதனையில் பங்கு பற்றுக்கூடிய விஸ்தீரணத்தைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. |
|
| இடத்தின் பண்புகள் | |
|
ஒல்லாந்தர் கால கோட்டை உள்ளே சுரங்கப்பாதை இருப்பதாகக் கூறப்படகிறது. காலம் -கி.பி.1606 அமைவிடம் - அச்சுவேலி பயன்படுத்தியவர்- ஒல்லாந்தர், ஆங்கிலேயர் பயன்படுத்திய நோக்கம் - ஆட்சிஎமையமாகச் செயற்படலும் கிறிஸ்தவமதத்தை பரப்புதலும் |
|
| வரலாற்று புகைப்படம் | |
|
|
|
| அமைவிடம் | |
|
கிராம சேவகர் பிரிவு – J/285 கிராமத்தின் பெயர் - அச்சுவேலி வடக்கு |
|
| செல்லும் முறை | |
| அச்சுவேலி பிரதான வீதியில் அமைந்துள்ளதால் பஸ் | |
| தூரம் | |
| அச்சுவேலி நகரத்திலிரந்து 20அ தெற்கு பக்கம் | |
| பராமரிப்பு | |
| தொல்பொருட் அருங்காட்சி திணைக்களம் | |
| தொடர்பு கொள்ளல் | |
| தொ.பேசி இல – 0773175387 | |
வேலணை
| சித்தாத்திரை மாதா கோயில் | |
|
|
|
| எந்த நேரத்திலும் யாத்திரியர்கள் வந்து தங்கியிருந்து வழிபடக்கூடிய வசதிகளை உடைய கோயில். இக் கோயிலை சுற்றி உள்ள பிரதேசங்களில் சுத்தமான நன்னீரை பெற்றுக்கொள்ளலாம். யாத்திரிகர் மட வசதியுண்டு. |
|
| அமைவிடம் | |
| வேலணை வடகிழக்கு, J/13 | |
| செல்லும் முறை | |
| அரச தனியார் பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களிலும் செல்லலாம் | |
| ஒழுங்கு முறை | |
| கோயிலுக்குள் தொலைபேசிப் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது. சாட்டிக் கோயில் பங்குத்தந்தை மூலமே கோயில் இயங்கி வருகின்றது. அவரது கட்டுப்பாட்டை மீறிச் செயற்பட முடியாது. |
|
| சிறப்புக் கட்டுப்பாடுகள் | |
|
|
| தூரம் | |
| யாழ்ப்பாணத்தில் இருந்து 12km | |
|
|
|
| பராமரிப்பு | |
| மிஷனரி | |
| தொடர்பு கொள்ளல் | |
| கோயில் நிர்வாகம். | |
| சிறப்புத்தினம் | |
| வருடாந்த திருவிழா புரட்டாதி மாதம் | |
|
வெள்ளக்கடற்கரை (சாட்டி) |
|
|
|
|
| இயற்கையாகவே தூய்மையான வெண்ணிற மணல் நிறைந்த நீண்ட கடற்கரை. உல்லாச பயணிகள் விரும்பக் கூடியதான இயற்கைக் கடற்கரைக் காற்று, நீராடக் கூடிய வசதி. சுத்தமான நன்னீரை பெறலாம் (5m அருகில்) |
|
| இடத்தின் பண்புகள் | |
|
|
| அமைவிடம் | |
| வேலணை வடகிழக்கு, J/13, வெள்ளக்கடக்கரை | |
| செல்லும் முறை | |
| அரச தனியார் பேருந்துகள் மற்றும் அணைத்து வாகனங்களிலும் செல்லலாம். | |
| வரி விதிப்புக்கள் | |
| வாகன தரிப்பிட கட்டணம் கடலில் உல்லாச படகுச் சவாரி செய்ய கட்டணம் (தனியார்) |
|
| தூரம் | |
| யாழ்ப்பாணத்தில் இருந்து 12km. மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து சாட்டி வீதி ஊடாக 2km |
|
|
|
|
| பராமரிப்பு | |
| வேலணை பிரதேசசபை | |
| தொடர்பு கொள்ளல் | |
| வேலணை பிரதேசசபை | |
|
வெளிச்ச வீடு |
|
|
|
|
|
கடலில் தொழில் புரிபவர்கள் திசை தெரியாமல் இருப்பவர்கள் கரையினை கண்டறிந்து திரும்புவதற்கு உதவியாக அமைக்கப்பட்டது. இது கோரியா வெளிச்ச வீடு என அழைக்கப்பட்டது. இது டச்சுக் காலத்தில் உருவாக்கப்பட்டது. |
|
| அமைவிடம் | |
|
• புங்குடுதீவு கிழக்கு தெற்கு, J/25. • கண்ணகிபுர கிராமம், கோரியா வெளிச்ச வீடு |
|
| செல்லும் முறை | |
| அரச தனியார் பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களிலும் செல்லலாம். | |
| ஒழுங்கு முறை | |
|
• பிரதேசத்தின் தூய்மையை பாதுகாத்தல். • பிரதேச பண்பாட்டை மதித்தல். |
|
| சிறப்புக் கட்டுப்பாடுகள் | |
|
• மது அருந்துதல் தவிர்க்கப்படுகின்றது. • தீய செயற்பாடுகளில் ஈடுபடுதல் கூடாது. |
|
| தூரம் | |
| புங்குடுதீவு அம்மன் கோயிலில் இருந்து 1km. | |
|
|
|
| பராமரிப்பு | |
| வேலணை பிரதேச செயலகம். | |
|
பெருக்க மரம் (பெருக்கடி) |
|
|
|
|
| 8௦௦ வருடங்கள் பழமையானதென்றும் அரேபியர் இலங்கை வந்த போது குதிரை படையின் குதிரைகளுக்கு உணவாகக் கொண்டு வந்து நாட்டியதாகவும் பின்னர் கால மாற்றத்தால் இம் மரம் இவ்வாறு ஆனதாகவும் செவிவழிக்கதைகள் கூறப்படுகின்றது. இருப்பினும் இதனை உறுதிப்படுத்த முடிய வில்லை. | |
| இடத்தின் பண்புகள் | |
|
|
| அமைவிடம் | |
|
புங்குடுதீவு வட மேற்கு , J/32 . கடற்கரையில் இருந்து 30m தூரத்திற்குள் உள்ளது. |
|
| செல்லும் முறை | |
| அனைத்து வாகனங்களிலும் செல்லலாம் | |
| சிறப்புக் கட்டுப்பாடுகள் | |
|
|
| தூரம் | |
| கடற்கரையில் இருந்து 30m தூரத்திற்குள் உள்ளது | |
|
|
|
|
ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் |
|
|
|
|
| பிரசித்தி பெற்ற இந்து ஆலயமாக காணப்படுகிறது
64 சக்தி பீடங்களில் ஒன்றாக காணப்படுகின்றது அம்பிகையின் கால் சிலம்பு விழுந்த இடமாகிய நயினையம் பதியில் அன்னைக்கு ஆலயம் அமைத்து தோஷங்களை நீக்கியதாக வரலாறு கூறுகின்றது |
|
| பல நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆலயம் | |
| இடத்தின் பண்புகள் | |
| நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு | |
| அமைவிடம் | |
| நயினாதீவு வடக்கு , J/34 .மணிபல்லவம் ,மணித்தீவு ,நாகதீவு | |
| செல்லும் முறை | |
|
• கடல் மார்க்கமாக செல்ல வேண்டும், • அனைத்து வாகனங்களிலும் செல்லலாம் |
|
| ஒழுங்கு முறை | |
| ஆலய பூஜை நேரத்தில் மட்டுமே உட்பிரவேசிக்க முடியும் | |
| சிறப்புக் கட்டுப்பாடுகள் | |
|
மது அருந்துதல் தவிர்க்கப்படுகின்றது. தீய செயற்பாடுகளில் ஈடுபடுதல் கூடாது. ஆண்கள் மேல் சட்டையுடன் செல்ல முடியாது பெண்கள் தலைவிரி கோலமாக செல்ல முடியாது |
|
|
|
|
| பராமரிப்பு | |
| கோயில் நிர்வாகம் | |
| தொடர்பு கொள்ளல் | |
| கோயில் நிர்வாகம் | |
| சிறப்புத்தினம் | |
| தைப்பூசம், ஆடிப் பூரம், உயர் திருவிழாக்கள், கந்தசஷ்டி, கேதாரகௌரி விரதம், வரலக்ஷ்மி விரதம், திருவெம்பாவை | |
| நயினாதீவு ரஜ மகா விகாரை | |
|
|
|
| பிரசித்தி பெற்ற புத்தர் ஆலயமாக காணப்படுகிறது
புத்தர் வந்து அருள்பாலித்த இடமாகவும் மணிமேகலையின் வருகையுடன் கூடிய இடமாகவும் காணப்படுகின்றது |
|
| இடத்தின் பண்புகள் | |
| நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு | |
| அமைவிடம் | |
| நயினாதீவு வடக்கு , J/34 | |
| செல்லும் முறை | |
|
• கடல் மார்க்கமாக செல்ல வேண்டும் • அனைத்து வாகனங்களிலும் செல்லலாம். |
|
| ஒழுங்கு முறை | |
| எந்த நேரத்திலும் பார்வையிட முடியும் | |
| சிறப்புக் கட்டுப்பாடுகள் | |
|
மது அருந்துதல் தவிர்க்கப்படுகின்றது. தீய செயற்பாடுகளில் ஈடுபடுதல் கூடாது |
|
|
|
|
| பராமரிப்பு | |
| விகாராதிபதி | |
| தொடர்பு கொள்ளல் | |
| விகாராதிபதி | |
| சிறப்புத்தினம் | |
| வைகாசி விசாகம் |
தீவகம் வடக்கு(ஊர்காவற்றுறை)
| ஹமன்ஹில்கோட்டை (Hammen Hill Fort) | |
|
|
|
| இது ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலுள்ள கற்பாறையினாலான சிறுதீவில் அமைக்கப்பட்டுள்ளது | |
| இடத்தின்/பொருளின் பண்புகள். | |
| ஊர்காவற்றுறையை 1658ல் டச்சுக்காரர்கள் போர்த்துக்கீசரிடம் இருந்து கைப்பற்றினார்கள். அதன் பின் காரைநகர் வியாவில் பகுதியில் அமைந்திருந்த ஜயனார் ஆலயத்தை இடித்து அழித்து அவ்வாலயத்தின் கற்களைக் கொண்டு தென்மேற்குக் கடற்கரையில் சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் கடலுக்குள் கடற்கோட்டையைக் கட்டினார்கள். இக்கோட்டையை ஹமன்ஹீல் (Hammenhiel) என அழைத்தார்கள். டச்சுக்காரர்களுக்காக பூதத்தம்பி முதலியார் இக்கோட்டையைக் கட்டிக் கொடுத்ததனால் பூதத்தம்பி கோட்டை என்றும் இது அழைக்கப்பட்டு வந்தது. இக்கடற்கோட்டை இன்றும் கடலுக்குள் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. | |
| சான்று | |
| பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக கலாசார தேசிய மரபுரிமைகள் அமைச்சினால் 2006.11.17 மற்றும் 2007.02.23ம் திகதிய அரச வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது | |
| அமைவிடம் | |
| ஊர்காவற்றுறை கிராமசேவையாளர் பிரிவு J/49 | |
| செல்லும் முறை | |
| படகு | |
| ஒழுங்கு முறை | |
| கடற்படையினரின் முன் அனுமதி பெறல் | |
| வரிவிதிப்புகள் | |
| இல்லை | |
| சிறப்புக்கட்டுப்பாடுகள் | |
| கடற்படையினரின் முன் அனுமதி பெறல் | |
| தூரம் | |
|
ஊா்காவற்றுறையிலிருந்து ஒரு கடல் மைல் தொலைவு |
|
| பராமரிப்பு | |
| கடற்படையினர் | |
|
தொடா்பு கொள்ளல் |
|
| பிரதேச செயலகம் ஊர்காவற்றுறை | |
|
ஊருண்டிக்கோட்டை (Uruendi Fort) |
|
| புகைப்படம் | |
| ஆதிக்குடியேற்றப் பகுதியான ஊருண்டித் துறைமுகத்தை மையமாகக் கொண்டு இப்பகுதி செம்மண் கலந்த பூமியாகவும் மக்கள் செறிந்து காணப்பட்டமையாலும் இக்கோட்டையினை போர்த்துக்கீசர் அப்பகுதியில் அமைத்தனர். இது பழங்கோட்டை என்ற பெயரில் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. நயினாதீவில் கி.பி. 1620ற்கும் 1624க்கும் இடைப்பட்ட காலத்தில் நயினாதீவில் கட்டப்பட்ட நாகம்மை ஆலயத்தினை இடித்து அதன் கற்களைக்கொண்டு ஊர்காவற்றுறை சங்குமால் அருகில் இக்கோட்டை கட்டப்பட்டது. 1950 காலத்தில் கோட்டையில் கோவில் கூரை நல்ல நிலையில் இருந்தது. இங்கு பிரபுக்கள் வாழும் மனை அல்லது காசில் எனக் குறிப்பிடுவது தகுதியாகும். | |
| இடத்தின்/பொருளின் பண்புகள் | |
| இக்கோட்டையில் இயேசு சிலுவையில் மரித்த காட்சியினை யாழ்ப்பாண திருமறைக் கலாமன்றம் வீடியோ படமாக்கியது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். ஜெருசலேம் கல்வாரி மலையினை ஒத்ததாக இப்பகுதி அமைந்துள்ளது. | |
| அமைவிடம் | |
| பருத்தியடைப்பில் கிராமசேவையாளர் பிரிவு J/50 | |
| செல்லும் முறை | |
| மோட்டார் வாகனம் | |
| ஒழுங்கு முறை | |
| நேரடியாக செல்ல முடியும் | |
| வரிவிதிப்புகள் | |
| இல்லை | |
| தூரம் | |
| ஊர்காவற்றுறையிலிருந்து 05 கி.மீ | |
| தொடர்பு கொள்ளல் | |
|
பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை |
|
|
துறைமுகம் (Habour) |
|
|
|
|
| யாழ்ப்பாண அரசர் காலத்தில் மட்டுமல்ல போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் பிரித்தானியர் ஆட்சிக் காலங்களில் வர்த்தகத்திலும் கடற்பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் பெரும் பங்களிப்புச் செய்திருந்தது. இத்துறைமுகம் பரப்பளவில் சிறியதாக இருப்பினும் இயற்கை துறைமுகத்துக்குரிய பண்புகள் பலவற்றைக் கொண்டுள்ளது. ஆழமான கடற்பரப்பைக் கொண்ட இத்துறைமுகம் சிறிய கப்பல்களின் போக்குவரத்துக்கும் அவை தங்கி இங்கு நிற்பதற்கும் ஏற்றதாகவுள்ளது. இலங்கைத் தீவினதும் யாழ்ப்பாண இராச்சியத்தினதும் வடநீர் பரப்பை பாதுகாக்கும் பொறுப்பை இத்துறைமுகம் பெற்றிருந்தது. போர்த்துக்கீசரால் இத்துறைமுகத்திற்கு (Fortaleza) எனப் பெயரிடப்பட்டள்ளது. இது இரண்டு உள்ளக ரீதியான பகுதியைக் கொண்டுள்ளது. இதில் உள்ள மதில்கள் யாவும் உயரம் 4½ மீற்றர் உயரமானது. இத்துறைமுகமானது 1658ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யாழ்ப்பாணத்தின் மீதான முற்றுகை காலத்தில் டச்சுக்காரரின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. | |
| இடத்தின் /பொருளின் பண்புகள் | |
| இத்துறைமுகத்திலிருந்து தற்போது காரைநகருக்கு கடற்பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது | |
| அமைவிடம் | |
| ஊர்காவற்றுறையில் கிராமசேவையாளர் பிரிவு J/49 | |
| செல்லும் முறை | |
| மோட்டார் வாகனம் | |
| ஒழுங்கு முறை | |
| நேரடியாக செல்ல முடியும் | |
| வரிவிதிப்புகள் | |
| இல்லை | |
| தூரம் | |
| ஊர்காவற்றுறையிலிருந்து நகரம் 100.மீ | |
| தொடர்பு கொள்ளல் | |
| பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை | |
|
புனித யாகப்பர் ஆலயம் (St James Church) |
|
|
|
|
| ஊர்காவற்றுறையில் அமைந்துள்ள ஆலயங்களுள் இவ்வாலயம் மிகவும் பழமையானதாகும். இலங்கையில் ஸ்பானியர் நாட்டுக் குருக்கள் தொண்டாற்றிய இடங்களில் தம் நாட்டின் பாதுகாவலரான புனித யாகப்பரின் பெயரால் ஆலயங்களை எழுப்பினர் எனத் தெரியவந்துள்ளது. இவ்வாலயத்துக்கான அடிக்கல் 1815ம் ஆண்டு தை மாதம் 01ம் திகதி கோவைக்குரவரான வண. டல்காடோ என்ற தியான சம்பிரதாய சபை குரவரால் அடிக்கல் நாட்டப்பட்டது. | |
| இடத்தின் /பொருளின் பண்புகள் | |
| இன்று இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் அழகிய தோற்றத்தில் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு பக்தர்களால் திருவிழா வழிபாடுகள் நடாத்தப்பட்டு வருகிறது. | |
| சான்று | |
| பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக கலாசார தேசிய மரபுரிமைகள் அமைச்சினால் ஒல்லாந்தர்பள்ளி என 2006.11.17 மற்றும் 2007.02.23ம் திகதிய அரச வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. | |
| அமைவிடம் | |
| ஊர்காவற்றுறையில் கிராமசேவையாளர் பிரிவு J/49 | |
| செல்லும் முறை | |
| மோட்டார் வாகனம் | |
| ஒழுங்கு முறை | |
| நேரடியாக செல்ல முடியும் | |
| வரிவிதிப்புகள் | |
| இல்லை | |
| தூரம் | |
| ஊர்காவற்றுறையிலிருந்து நகரம் 100.மீ | |
| தொடர்பு கொள்ளல் | |
| பங்குத்தந்தை புனித மரியாள் ஆலயம் ஊர்காவற்றுறை | |
| சிறப்புத்தினம் அல்லது காலம் | |
| ஆடிமாதம் 25ம் திகதி திருவிழா | |
|
ஐயனார் ஆலயம் (Iyanar Temple) |
|
|
|
|
| யாழ்ப்பாண தீபகற்பத்தின் தென்மேற்கு திசையிலுள்ள தீவுக்கூட்டங்களில் ஒன்றான அனலைதீவில் அருள்சுரக்கும் ஐயனார் ஆலயம் பிரமாண்டமான கட்டிடங்களைக் கொண்டு அமைப்பில் பெரியதாகவும் வரலாற்று பெருமையுடையதாகவும் அமையப் பெற்றுள்ளது. | |
| இடத்தின் /பொருளின் பண்புகள். | |
| அனலைதீவின் நயினாகுளம் என்னும் இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இங்குள்ள ஐயனாரின் திருவுருவம் முன்னொரு காலத்தில் இத்தீவின் மேற்கு சமுத்திரத்தில் தரையில் ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டு வந்தது. இற்றைக்கு 350 வருடங்களுக்கு முந்தைய காலத்தில் கண்டவர்கள் கடலின் கரைக்கு கொண்டு வரும் போது பாரம் தாங்க முடியாமல் பூமியில் வைத்தனர். அவ்வாறு வைத்த இடமே நயினாகுளம் எனும் திருப்பதியாகும். ஆலயத்தின் மேற்குப்பகுதியில் சமீபமாக உள்ள சமுத்திரத்தின் சங்கம் தீர்த்தம் அமைந்தள்ளது. இது சேதுசமுத்திரத் தீர்த்தம் கலக்கும் சிறப்புடையது. தீவின் வாயிற்பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ளபடியால் தீவின் காவல் தெய்வமாக விளங்கிறது. | |
| சான்று | |
|
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டள்ளது பதிவு இல :- HA/5/JA /15 பதிவு திகதி:- 30.12.1988 |
|
| அமைவிடம் | |
| அனலைதீவு தெற்கு கிராம சேவையாளர் பிரிவு J/37 | |
| செல்லும் முறை | |
| வள்ளம் மற்றும் பேரூந்து | |
|
ஒழுங்கு முறை |
|
| ஊர்காவற்றுறையிலிருந்து கண்ணகை அம்மன் இறங்கு துறையிலிருந்து பேருந்து மூலம் | |
| வரிவிதிப்புகள் | |
| இல்லை | |
|
சிறப்புக்கட்டுப்பாடுகள் |
|
| மது, மாமிசம் அருந்த முடியாது, ஆண்கள் மேல் சட்டையுடன் செல்ல முடியாது | |
| தூரம் | |
| ஊர்காவற்றுறையிலிருந்து நகரம் 13 கிமீ | |
| தொடர்பு கொள்ளல் | |
| பரிபாலனசபை ஜயனார் ஆலயம் அனலைதீவு | |
| சிறப்புத்தினம் அல்லது காலம் | |
| ஆடிமாதம் | |
|
புளியந்தீவு நாகேஸ்வரன் ஆலயம் (Pulianthivu Nagaeswaran temple) |
|
|
|
|
| சப்த தீவுகளில் ஒன்றான அனலைதீவுப் பகுதியில் உள்ள புளியந்தீவில் அமைந்துள்ள நாகேஸ்வரன் ஆலயத்தின் தோற்றம் பற்றி அறிந்தவர்கள் யாரும் இல்லை | |
| இடத்தின் /பொருளின் பண்புகள். | |
|
நயினாதீவு நாகேஸ்வரி ஆலய வரலாற்றில் காணப்படும் சம்பவங்கள் இவ்விரு ஆலயங்களுக்கு இடையேயான தொடர்புகளை எடுத்துக் காட்டுகின்றன. இவ்வாலயமானது தென்னிந்திய இராமேஸ்வர ஆலயப் பூசகரான ஸ்ரீ தாமோதர ஜயர் ஆதிப்பூசகராக கடமையாற்றினார். இவராலேயே இவ்வாலயம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வாலயச்சூழலில் பல்வேறு வகை மருந்து மூலிகை மரங்கள் காணப்படுவதோடு மட்டுமல்லாமல் ஆலயத்தின் தலவிருட்சமாக அரச மரம் காணப்படுகிறது. ஆதியில் சிதம்பரத்தை தரிசிக்க வியாக்கிரபாதர் தாம் மேற்கொண்ட தீர்த்த யாத்திரையின் போது இங்கு வந்த லிங்கத்தை வழிபட்ட தலம் புலியேந்தி என அழைக்கப்பட்டு பின்னர் புளியந்தீவானது. இங்கு தீர்த்த வாவியொன்று மேற்கு கடற்கரையோரத்தில் உள்ளது. இவ்வாலயம் புளியந்தீவு பிரதேசம் உள்ளடக்கிய ஊர்காவற்றுறையின் வரலாற்றுத் தொன்மைக்கு சிறப்பளிக்கின்றது.
|
|
| சான்று | |
|
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு இல :- HA/5/JA/20 |
|
| அமைவிடம் | |
|
அனலைதீவு தெற்கு கிராமசேவையாளர் பிரிவு J/37 |
|
| செல்லும் முறை | |
| வள்ளத்திலிருந்து பேரூந்து | |
| ஒழுங்கு முறை | |
| ஊர்காவற்றுறையிலிருந்து கண்ணகை அம்மன் இறங்கு துறையிலிருந்து பேரூந்து | |
| வரிவிதிப்புகள் | |
| இல்லை | |
| சிறப்புக்கட்டுப்பாடுகள் | |
| மது, மாமிசம் அருந்த முடியாது, ஆண்கள் மேல் சட்டையுடன் செல்ல முடியாது | |
| தூரம் | |
| ஊர்காவற்றுறையிலிருந்து நகரம் 15 கிமீ | |
| தொடர்பு கொள்ளல் | |
| பரிபாலனசபை புளியந்தீவு நாகேஸ்வரன் ஆலயம் அனலைதீவு | |
| சிறப்புத்தினம் அல்லது காலம் | |
| மார்கழி மாத திருவெம்பாவை நிகழ்வு | |
|
சின்னமடுமாதா யாத்திரைத்தலம் (Our lady of Sinnamadhu shrine) |
|
| புகைப்படம் | |
| போர்த்துக்கீசர் காலத்தில் இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இது யாழ்ப்பாண நகருக்கு எதிர்ப்புறம் உள்ள தணத்தீவு மிலேச்ச அரசனால் 2ம் ஆண்டு புதுமை மாதா குழு (college)க்கு கொடுக்கப்பட்டது. இக்கொடை பற்றிய செப்பேடு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் பாதுகாக்கப்படுகிறது. | |
| இடத்தின் /பொருளின் பண்புகள். | |
| இன்று இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் அழகிய தோற்றத்தில் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு பக்தர்களால் திருவிழா வழிபாடுகள் நடாத்தப்பட்டு வருகிறது. | |
| சான்று | |
| யாழ் மாவட்டத்தின் யாத்திரை கட்டளைச் சட்டத்தின் கீழ் யாத்திரைத் தலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது | |
| அமைவிடம் | |
| புளியங்கூடலில் கிராம சேவையாளர் பிரிவு J/60 | |
| செல்லும் முறை | |
| 780 இலக்க பேரூந்து பாதை | |
| ஒழுங்கு முறை | |
| நேரடியாகச் செல்ல முடியும் | |
| வரிவிதிப்புகள் | |
| இல்லை | |
| சிறப்புக்கட்டுப்பாடுகள் | |
| மது மாமிசம் பயன்படுத்த முடியாது பொழுது போக்குச்சாதனங்கள் பயன்படுத்த முடியாது கேளிக்கைகள் இடம்பெறக்கூடாது | |
| தூரம் | |
| ஊர்காவற்றுறையிலிருந்து நகரம் 05 கிமீ | |
| தொடர்பு கொள்ளல் | |
| பங்குத்தந்தை புனித பேதுரு ஆலயம், நாரந்தனை | |
| சிறப்புத்தினம் அல்லது காலம் | |
| ஆடி மாதம் 27ம் திகதி இருந்து ஆவணி மாதம் 05ம் திகதி வரை திருவிழாக்காலம் | |
|
அனலைதீவு தெற்குக் கடற்கரைப்பகுதி |
|
| புகைப்படம் | |
| அனலைதீவு கடற்கரைப்பகுதி முருகைக்கற்பாறைகளால் அலங்கரிக்கப்பட்டு காணப்படுகிறது. இங்குள்ள பேரீந்து மரங்கள் அதற்கு அழகு சேர்க்கின்றன. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட வெளிச்சவீடு இங்கு கம்பீரமாக காட்சியளிக்கிறது. அப்பகுதி மக்களின் வீட்டுக்குரிய வேலி கல்வேலியாக முருகைக்கற்பாறைகளால் அமையப் பெற்றுள்ளது. | |
| இடத்தின் /பொருளின் பண்புகள். | |
| இங்கு ஓய்வு காலத்தினை மகிழ்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்த முடியும் இங்கு நாற்பது அடி மனிதனின் பாதச்சுவடுகள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. | |
| அமைவிடம் | |
| அனலைதீவு தெற்கில் கிராமசேவையாளர் பிரிவு J/37 | |
| செல்லும் முறை | |
| ஊர்காவற்றுறையிலிருந்து கண்ணகியம்மன் இறங்கு துறையில் இருந்து வள்ளம் மூலமாக செல்ல முடியும். | |
| ஒழுங்கு முறை | |
| நேரடியாகச் செல்ல முடியும் | |
| வரிவிதிப்புகள் | |
| இல்லை | |
| சிறப்புக்கட்டுப்பாடுகள் | |
| இல்லை | |
| தூரம் | |
| ஊர்காவற்றுறையிலிருந்து நகரம் 15 கிமீ | |
| தொடர்பு கொள்ளல் | |
|
உப அலுவலகம் பிரதேச சபை அனலைதீவு |
|
|
எழுவைதீவு தெற்கு கடற்கரைப்பகுதி |
|
| புகைப்படம் | |
| எழுவைதீவு கடற்கரைப்பகுதி முருகைக்கற்பாறைகளால் அலங்கரிக்கப்பட்டு காணப்படுகிறது. அங்குள்ள கற்றாலை மரங்கள் அதற்கு அழகு சேர்க்கின்றன. | |
| இடத்தின் /பொருளின் பண்புகள். | |
| இங்கு ஓய்வு காலத்தினை மகிழ்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்த முடியும் இங்கு நாற்பது அடி மனிதனின் பாதச்சுவடுகள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. | |
| அமைவிடம் | |
| எழுவைதீவில் கிராம சேவையாளர் பிரிவு J/39 ல் அமைந்துள்ளது | |
| செல்லும் முறை | |
| ஊர்காவற்றுறையிலிருந்து கண்ணகியம்மன் இறங்கு துறையில் இருந்து வள்ளம் மூலமாக செல்ல முடியும். | |
| ஒழுங்கு முறை | |
| நேரடியாக செல்ல முடியும் | |
| வரிவிதிப்புகள் | |
| இல்லை | |
| சிறப்புக்கட்டுப்பாடுகள் | |
| இல்லை | |
| தூரம் | |
|
ஊர்காவற்றுறையிலிருந்து நகரம் 15 கிமீ |
|
| தொடர்பு கொள்ளல் | |
| உப அலுவலகம்- பிரதேசசபை, எழுவைதீவு | |
காரைநகர்
| காரைநகர் சிவன் கோவில் | |
|
|
|
|
ஈழத்துச்சிதம்பரம் எனப் போற்றப்படும் காரைநகர் திண்ணபுரச் சிவன்கோவில் இந்தியாவிலுள்ள சிதம்பரக் கோவிலில் நடைபெறும் கிரியை மரபுகளை பாரம்பரியமாகச் செய்து வருவதாலும் மார்கழித் திருவாதிரை உற்சவமும் ஒத்து விளங்குகின்ற காரணத்தாலும் ஈழத்துச் சிதம்பரம் எனச் சைவச் சான்றோர்களால் போற்றப்பட்டு வருகின்றது. இது மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூவகைச் சிறப்பும் அமைந்த பெருங்கோயிலாகும். இத்திருக் கோயிலில் அருவுருவத் திருமேனியாக விளங்கும் சிவலிங்கப் பெருமானுக்கும், பூரணை புட்கலை சமேத ஐயனார் பெருமானுக்கும் அடுத்தடுத்து இரு கோபுரங்கள் வானை ஓங்கி நிற்கின்றன. இவ்வாலயத்தில் அருள் பாலிக்கும் நடராஜப் பெருமானின் திருவுருவம் அற்புதமானது. வியாக்கிரபாத முனிவரும் பதஞ்சலி முனிவரும் திருவடியின் இரு மருங்கிலும் தொழுதேத்த முயலகன் மேல் ஊன்றிய வலத்திருப்பாதமும் தூக்கி வளர்த்த இடப்பாகமும் கொண்ட எம்பெருமான் சிவகாமியம்மையாருடன் குனித்த புருவமும் கொவ்வைச்செவ்வாயும் குமிழ் சிரிப்புடன் அருள்பாலிக்கும் காட்சி அற்புதமானது. தேரடியில் வன்னி மரத்தின் கீழ் ஐந்து கரம் கொண்ட ஆனைமுகனின் திருக்கோலமும் விசேடமானதாகும். இத்தலத்தில் பங்குனி, ஆடி, மார்கழி ஆகிய மாதங்களில் பெருந்திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
|
|
| இடத்தின்/ பொருளின் பண்புகள் | |
| 1790 ம் ஆண்டளவில் ஆண்டி முனிவர் வைரவர் சூலத்தையும், ஐயனார் விக்கிரகத்தையும் வைத்து வழிபட்டதாகக் கூறப்படுகின்றது. முதலாவது கும்பாபிடேகம் 1848ல் நடைபெற்றது |
|
|
வரலாற்றுப் புகைப்படம் |
|
|
|
|
| அமைவிடம் | |
| J/47, திண்ணபுரம், காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் எனப் போற்றப்படும் திண்ணபுரச் சிவன் கோவில் |
|
| செல்லும் முறை | |
| மானிப்பாய் வீதியின் வழி பொன்னாலைப் பாலத்தினூடாக வலந்தலைச்சந்தியை வந்தடைந்நு காரைநகர் மேற்கு வீதியினூடாக புதுவீதி வழியாக வடக்கு நோக்கி 3கிமீ வரை செல்லுதல் | |
| வரி விதிப்புக்கள் | |
| இல்லை | |
| சிறப்புக் கட்டுப்பாடுகள் | |
| ஆலயத்திற்குள் தொலைபேசி பேசுதல், ஒளிப்படம், (Video) புகைப்படம் (Photo) பிடித்தல், காலணி, தொப்பி அணிதல், ஆண்கள் மேலங்கி அணிதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளது. மது மாமிசம் பயன்படுத்த முடியாது. | |
| தூரம் | |
| காரைநகர் பிரதேச செயலகத்திலிருந்து 3 ½ கிமீ | |
| பராமரிப்பு | |
| ஆதீன கர்த்ததாக்கள் ஆ. அம்பலவிமுருகன் மு. சுந்தரலிங்கம் |
|
| தொடர்பு கொள்ளல் | |
| 0213215363, 0772832703 | |
| சிறப்புத்தினம்/ காலம் | |
| இத்தலத்தில் பங்குனி, ஆடி, மார்கழி ஆகிய மாதங்களில் பெருந்திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் மார்கழி திருவாதிரை உற்சவம் சிறப்புடையது. பத்து நாட்களும் காலையும் மாலையும் திருவெம்பாவை ஓதல் நடைபெறும். ஒன்பதாம் நாள் ஆடல் வல்லான் ஆகிய நடராசப் பெருமான் செவ்வந்திப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிவகாமசுந்தரியோடு ஆனந்த நர்த்தனம் புரிந்த வண்ணம் தேரில் ஆரோகணமாவர். மூன்றாம் வீதியில் பஞ்ச ரதங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பவனி வரும். அன்று இரவு இரண்டு மணியிலிருந்து ஆனந்தக் கூத்தனுக்கு அபிடேக ஆராதனைகள் நடைபெற்று அதிகாலை 6 மணிக்கு ஆருத்திரா தரிசனக் காட்சி நடைபெறும். சிவராத்திரி தினத்தில் நான்கு சாமங்களும் விசேட அபிடேக ஆராதனை இடம்பெறுகிறது. அதிகாலை சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமான் துர்வாசக சாகரம் எனப்படும் தீர்த்தக் கரைக்கு தீர்த்தமாடச் செல்வார். பிரதி வெள்ளி தோறும் காலையில் மணிவாசகர் சபையால் திருவாசகமுற்றோதல் நடைபெற்று வருகிறது. நாயன்மார் நால்வரின் குருபூசைகள் நடைபெற்று வருகின்றது. பிரதோச விரதம் மாதந்தோறும் சிறப்பாக நடைபெற்று பிரதோச நாயனார் உள்வீதி வலம் வரும் நிகழ்வும் இடம் பெறுகிறது. | |
|
கோவளம் வெளிச்ச வீடு |
|
|
|
|
| 1916ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலத்திலிருந்து உச்சி வரை 33மீ உயரமுடைய காரைநகர் கோவளம் எனும் இடத்தில் அமைக்கப்பட்ட இவ் வெளிச்சவீடு பல்லாண்டு காலமாக கடற்கலங்களுக்கு இரவு வேளைகளில் திசைகாட்டியாக மிளிர்ந்துள்ளது. 100 வருடங்கள் பழைமை வாய்ந்த இவ் வெளிச்ச வீடு எதிர்கால சந்ததியினருக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் சுற்றுலாத்தலமாகவும்; விளங்குகின்றது. | |
|
இடத்தின் பொருளின் பண்புகள் |
|
| 1916ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட இவ் வெளிச்ச வீடு காரைநகர், ஊர்காவற்றுறை துறைமுகங்களுக்கு இந்தியாவின் துறைமுகங்களிலிருந்து போக்குவரத்துச் செய்த சரக்குக் கப்பல், பயணிகள் கப்பல்களுக்கு திசைகாட்டியாக விளங்கியது. மேலும் காரைநகர், ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, வலிகாமம் ஆகிய இடங்களிலிருந்து கடலில் பயணம் செய்த மீனவர்களுக்கும் திசைகாட்டியாக விளங்கியது. முருகைக்கல்லினால் உருவாக்கப்பட்டது. வைரமான கற்பாங்கான பிரதேசமாக விளங்குகின்றது. | |
| சான்று | |
|
தொல்லியல் சின்னம் வர்த்தமானி இல:- 1716 திகதி:- 2011.07.22 |
|
| அமைவிடம் | |
| கிராம சேவையாளர் பிரிவு J/41, கோவளம், காரைநகர் | |
| செல்லும் முறை | |
| மானிப்பாய் வீதியின் வழி பொன்னாலை வந்தடைந்து பொன்னாலைப் பாலத்தினூடாக வலந்தலைச்சந்தியை அடைந்நு காரைநகர் மேற்காக திரும்பி மேற்கு வீதியினூடாக ஆலடிச்சந்தியை சென்றடைந்து அங்கிருந்து வடக்காக திரும்பி கோவளம் நோக்கி 3.2 கி.மீ வரை செல்லுதல். | |
| தூரம் | |
|
காரைநகர் பிரதேச செயலகத்திலிருந்து 5 கி.மீ |
|
| பராமரிப்பு | |
| தொல்லியல் திணைக்களம் | |
|
கசூரினா கடற்கரை |
|
|
|
|
| இயற்கையாக அமைந்த கடல் அலைகள் குறைந்த கடல். இயற்கையழகுடன் கூடிய சவுக்கு மரம் நிறைந்த வெண்ணிற மணற்பாங்குடன் கூடிய அமைதியான சூழல் நிறைந்த சுற்றுலா மையம். | |
| இடத்தின் பொருளின் பண்புகள் | |
| இயற்கையழகுடன் கூடிய கடற்கரை மற்றும் சவுக்கு மரம் நிறைந்த வெண்ணிற மணற்பிட்டிகளுடன் கூடிய அமைதியான பிரதேசம். | |
| அமைவிடம் | |
|
கிராமசேவையாளர் பிரிவு-J/46, காரைநகர் வடக்கு, காரைநகர் |
|
| செல்லும் முறை | |
| மானிப்பாய் வீதியின் வழியாகப் பொன்னாலை வந்தடைந்து பொன்னாலைப் பாலத்தினூடாக வலந்தலைச்சந்தியை வந்தடைந்நு காரைநகர் மேற்கு வீதியினூடாக புதுவீதிச் சந்தியை சென்றடைந்து வடக்காக திரும்பி புதுவீதி ஊடாக 2 கி.மீ வரை செல்லுதல். | |
| வரி விதிப்புக்கள் | |
| வாகனங்களுக்கு தரிப்பிட கட்டண அறவீடு உண்டு | |
| சிறப்புக் கட்டுப்பாடுகள் | |
|
கொந்தளிப்பான கடலில் நீந்துவதைத் தவிர்த்தல் வேண்டும். கடற்சூழலின் தூய்மையினைப் பாதுகாத்தல் வேண்டும். பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றாடலைப் பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும். மதுபாவனை தடை செய்யப்பட்டுள்ளது. |
|
| தூரம் | |
| காரைநகர் பிரதேச செயலகத்திலிருந்து 2.5 கி.மீ | |
| பராமரிப்பு | |
| பிரதேச சபை, காரைநகர் | |
| தொடர்பு கொள்ளல் | |
| காரைநகர் பிரதேச சபை 0213216447 |
தென்மராட்சி(சாவகச்சேரி)
| கச்சாய் துறைமுகம் | |
|
|
|
| கச்சாய் துறைமுகம் ஊடாக தமிழகத்திற்கும் வட இலங்கைக்கும் இடையிலான படையெடுப்புக்கள்,அரசியல் தொடர்புகள், வணிக பண்பாடு, சமய தொடர்புகள் முதலானவை இடம்பெற்றுள்ளது. இன்றும் துறைமுக கடற்பரப்பில் மரக்கலங்கள் நங்கூரமிட்டு கட்டுவதற்கான கற்தூண்கள் கடலினுள் காணப்படுகின்றன. | |
| இடத்தின்பண்புகள் | |
| இப்பகுதியின் மையத்தில் வெளிச்சவீடு, வாடிவீடு, பழமையான செங்கல் கட்டிடங்கள், சதுரவடிவில் அமைந்த கிணறு என்பன காணப்பட்டன. | |
| தற்போது பழமையான கிணறு தவிர்ந்த அனைத்து கட்டிடங்களும் வெளிச்சவீடும் இடித்து அழிக்கப்பட்டுவிட்டன. | |
| சான்று | |
| கச்சாய் துறைமுகப்பகுதியினைச் சூழ ஆரம்பகாலங்களில் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. ஆவுரஞ்சிக்கல், எறியால்பிட்டிசுடலை, பிரதான நீர்ப்பாசனக்கால்வாய், நெல்வயல்கள், கேணிகள், வழிபாட்டுத்தலங்கள் என்பனதுறை முகப்பகுதியினைச் சூழ்ந்து அமைந்துள்ளன.கி.பி. நான்காம் நூற்றாண்டிற்குரிய மட்பாண்ட மற்றும் தொல்லியல் எச்சங்கள் என்பவற்றை சேகரித்ததன் ஊடாக இங்கு துறைமுகக் குடியிருப்பு ஒன்று காணப்பட்டிருந்தமையை உறுதிப்படுத்துவதாக உள்ளது. | |
| அமைவிடம் | |
| கச்சாய்துறைமுகம் பாலாவி பிரதேசத்திற்கும் புங்கடி பிரதேசத்திற்கும் இடையே J/324 கிராம பிரிவில் அமைந்துள்ளது. | |
| செல்லும்முறை | |
| சாவகச்சேரி நகரத்தில் இருந்து கச்சாய் வீதி ஊடாக இத்துறைமுகத்திற்கு செல்ல முடியும். | |
| ஒழுங்குமுறை | |
| தனியார் வாகனங்களில் செல்ல முடியும். | |
| வரிவிதிப்புக்கள் | |
| இல்லை | |
| சிறப்புக்கட்டுப்பாடுகள் | |
| இல்லை | |
| தூரம் | |
| சாவகச்சேரி பஸ் தரிப்பிடத்தில் இருந்து 8.5 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. | |
| பராமரிப்பு | |
| இல்லை | |
| தொடர்புகளுக்கு | |
| சாவகச்சேரி பிரதேச செயலகம். | |
|
சாளம்பன்தீவு |
|
|
|
|
| கச்சாய் துறை முகத்தின் இயற்கை அம்சங்களில் ஒன்றாக சாளம்பன் தீவு விளங்குகின்றது. இது துறைமுகத்தில் இருந்து கடலின் உள்ளே அமைந்துள்ளது. | |
| இடத்தின்பண்புகள் | |
| இத் தீவில் எவரும் வசிக்கவில்லை. சென்று பார்வையிடுவர். | |
| சான்று | |
| இங்கு ஓர் இந்து கோவில் அமைந்துள்ளது. ஆடி மாதத்தில் அப்பிரதேச மக்கள் பொங்கள் வைத்து இறைவனை வழிபடுவது வழக்கம். | |
| அமைவிடம் | |
| கச்சாய் துறைமுகத்திலிருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர் தூரத்தில் கடலின் நடுவே அமைந்துள்ளது. J/324 கிராம பிரிவில் அமைந்துள்ளது. | |
| செல்லும்முறை | |
| சாவகச்சேரி நகரத்தில் இருந்து கச்சாய் வீதி ஊடாக கச்சாய் துறைமுகத்திற்கு சென்று பின்னர்1.5 கிலோ மீற்றர் கடலில் வள்ளத்தில் பயணிக்க முடியும். | |
| ஒழுங்குமுறை | |
| தனியார் வாகனங்களில் செல்ல முடியும். மீனவர்களின் உதவி கிடைக்கும். | |
| வரிவிதிப்புக்கள் | |
| இல்லை | |
| தூரம் | |
| சாவகச்சேரி பஸ் தரிப்பிடத்தில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. | |
| தொடர்புகளுக்கு | |
|
சாவகச்சேரி பிரதேச செயலகம்.
இத் தீவு சுற்றுலா மையமாக அமைவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் கச்சாய் துறைமுகத்தின் வரலாற்று முக்கியத்துவமும் வெளிச்சத்துக்கு வரும். |
நெடுந்தீவு
|
புறாக்கூட்டுடனான கட்டடம் மற்றும் அதன் அருகாைமயிலுள்ள
|
|
|
|
|
| டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது. |
|
|
இடத்தின் /பொருளின் பண்புகள் |
|
| இலங்கையை ஆண்ட டச்சுக்காரர்களால் புறாக்கள் தங்குவதற்காக இக்கட்டடம் (கூடு) அமைக்கப்பட்டதுடன் இக்கட்டடத்தில் தங்கியுள்ள புறாக்கள் உளவு வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்டது. |
|
| அமைவிடம் |
|
| நெடுந்தீவு மத்தி J/004 | |
| புராதன வெடியரசன் கோட்டை | |
|
|
|
| நெடுந்தீவை ஆண்ட தமிழ் மன்னனாகிய வெடியரசனால் இக் கோட்டை கட்டப்பட்டது. | |
| இடத்தின் /பொருளின் பண்புகள் | |
| நெடுந்தீவை ஆண்ட தமிழ் மன்னனாகிய வெடியரசனால் இக் கோட்டை கட்டப்பட்டது. தற்போது இக் கோட்டை சிதைவடைந்த நிலையில் உள்ளது | |
| அமைவிடம் | |
| நெடுந்தீவு மேற்கு J/001 | |
| மீகாமன் கோட்டை | |
|
|
|
| ஒல்லாந்தர் ஆட்சிக்கால சிறைச்சாலை | |
| இடத்தின் /பொருளின் பண்புகள் | |
| இக் கோட்டையானது ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் சிறைச்சாலையாகப் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு சிறை்க்கூடத்திற்குமென சுவர்கள் 2.5 அடி தடிப்பைக் கொண்டதாகும். இக்கோட்டையின் கீழ் பகுதியில் வெடிபொருட்கள் வைப்பதற்கும் குற்றவாளிகளை அடைத்து வைப்பதற்குமாகப் பாவிக்கப்பட்டது | |
| அமைவிடம் | |
| நெடுந்தீவு மத்தி மேற்கு J/003 | |
| பழைய இந்து ஆலயம் | |
![]() |
|
| சோழர் கால ஆலயம் | |
| இடத்தின் /பொருளின் பண்புகள் | |
| சோழர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்து ஆலயம். தற்போது சிதைவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன | |
| அமைவிடம் | |
| நெடுந்தீவு தெற்கு J/002 | |
| ஒல்லாந்தர் வைத்தியசாலை | |
|
|
|
| டச்சுக்காரரின் வைத்தியசாலை | |
| இடத்தின் /பொருளின் பண்புகள் | |
| டச்சுக்காரரின் ஆட்சியின் போது பயன்படுத்தப்பட்ட வைத்தியசாலை. இது ஒல்லாந்தர் வைத்தியசாலை என அழைக்கப்படுகிறது | |
| அமைவிடம் | |
| நெடுந்தீவு மத்தி மேற்கு J/003 | |
| 40 அடி மனிதனின் பாதச்சுவடு | |
|
|
|
| 40 அடி உயரமான மனிதனின் 2 1/2 அடி நீளமான காலடையாளம் | |
| இடத்தின் /பொருளின் பண்புகள் | |
| ஒரு பாறையில் 40 அடி உயரமான மனிதனின் காலடையாளத்தைக் காணக்கூடியதாக உள்ளது. இப்பாதம் அனுமானின் பாதம் எனவும் நம்பப்படுகிறது. |
|
| அமைவிடம் | |
| நெடுந்தீவு தெற்கு J/002 | |
| குதிரைகள் லயம் | |
|
|
|
|
ஒல்லாந்தர் கால லயம் |
|
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
| ஒல்லாந்தார் காலத்தைச் சேர்ந்த்து. இந்த லயத்தில் ஒல்லாந்தர்கள் குதிரைகளை வளர்ப்ப்தற்கும், கட்டி பராமரிப்பதற்கும் உபயோகித்தனர்.இக்கட்டடம் 300 மீற்றர் நீளத்திலும் 50 மீற்றர் அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தூண்கள் மட்டுமே எஞ்சியுள்ளன | |
| அமைவிடம் | |
| நெடுந்தீவு தெற்கு J/002 | |
| கலங்கைர விளக்கம் (அரசித்தூணி) | |
![]() |
|
| ஒல்லாந்தர் காலத்தில் சுண்ணாம்பு, முருகைக்கல்லினால் அமைக்கப்பட்ட இக்கட்டடம் குவிந்தா என அழைக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒல்லாந்தரினால் இது ஒரு வௌிச்ச வீடாகக் கட்டப்பட்டது. |
|
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
| அடித்தளத்தில் மூட்டப்பட்ட நெருப்பின் காரணமாக மேற்புறத்தில் தெரியும் வௌிச்சமானது கப்பல் ஓட்டுபவருக்கும் மீன்பிடியாளருக்கும் ஏற்றதாக உள்ளது. ஒல்லாந்தரைத் தொடர்ந்து பிரித்தானியரால் மீண்டும் புனரமைக்கப்பட்டு குயின்ஸ்ரவர் என அழைக்கப்படுகிறது. இது தமது கடற் பாதுகாப்பிற்காக கட்டப்பட்ட வெளிச்சவீடு. | |
| அமைவிடம் | |
| நெடுந்தீவு கிழக்கு J/006 | |
| பெருக்கு மரம் (பயோப் மரம்) | |
|
|
|
| யாழ்ப்பாணத்திலுள்ள மிகப் பெரிய மரமாகும். இது 7ம் நூற்றாண்டில் அரேபியர்களால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது. |
|
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
| இலங்கையை ஆண்ட டச்சுக்காரர்களால் குதிரைகளுக்குத் தீனி போடுவதற்காக நாட்டப்பட்ட மரம். இம்மரம் 100,000 லீற்றர் தண்ணீரைச் சேமித்து வைத்திருக்கக் கூடியதாக உள்ளது. இம்மரத்தின் இலை, வேர், பட்டை என்பன மருத்துவக் குணம் உடையது | |
| அமைவிடம் | |
| நெடுந்தீவு கிழக்கு J/006 | |
| நெடுந்தீவுக் கடற்கரைகள் | |
![]() |
|
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
| சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் அமைந்த வெள்ளை மணலைக் கொண்ட கடற்கரைகள் | |
| அமைவிடம் | |
| நெடுந்தீவைச்சூழ அமைந்துள்ளது. J/001-J/006 | |
| விழுதுகள் கொண்ட ஆலமரம் | |
|
|
|
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
| இது 25 மீற்றர் உயரமுள்ளது. இதன் கிளைகளிலிருந்து வருகின்ற விழுதுகள் பிரதான வேர் கொண்ட மரத்தின் அளவுகளை விடக் கூடியதாக காணப்படுவது சிறப்பம்சமாகும்.இம்மரத்தின் மூல மரத்தினை அடையாளம் காண முடியாதவாறு கிளைவிட்டுப் பரந்துள்ளது | |
| அமைவிடம் | |
| நெடுந்தீவு கிழக்கு J/006 | |
| குதிரைகள் | |
|
|
|
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
|
இப்பிரதேசத்தில் அதிகளவான குதிரைகள் காணப்படுகின்றன.சோழ மன்னர் போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் தங்களது வாகனமாக இவற்றைப் பயன்படுத்திய பின்னர் விட்டுச் சென்றனர்.இக்குதிரைகளை வெளியில் எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. தற்காலத்தில் சிலர் தங்களது சொந்தத் தேவைகளுக்காக வீடுகளில் பராமரித்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. குதிரை வண்டில் சவாரிக்கும், குதிரை ஓட்டம், மாடுகைளப் பிடிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. |
|
| கல்வேலி | |
|
|
|
| முருகைக்கல்வேலி | |
|
இடத்தின் / பொருளின் பண்புகள்
|
|
| முருகை கற்கைளக் கொண்டு அமைக்கப்படும் வேலியானது குடியிருப்பாளார்களின் காணிகளது எல்லைகளை நிர்ணயிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. எந்தவொரு இயந்திரங்களினையும் பயன்படுத்தாமல் அமைப்பது இதன் சிறப்பம்சமாகும். | |
| அமைவிடம் | |
| நெடுந்தீவின் காணி எல்லைகளில் அமைந்துள்ளது. J/001-J/006 | |
| பலகிளைகளைக் கொண்ட பனை மரம் | |
|
|
|
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
|
பனை மரமானது பல கிளைகளைக் கொண்டமைந்துள்ளது வெட்டாக்காடு எனும் கிராமத்தில் வளர்ந்துள்ள பனை மரமானது பல கிளைகளைக் கொண்டமைந்துள்ளது. |
|
| அமைவிடம் | |
| நெடுந்தீவு தெற்கு J/002 | |
| மருந்துகேணி | |
|
|
|
| ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட மருத்துவக்கேணி | |
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
| அரேபியர்களினால் கொண்டு வரப்பட்டு ஒல்லாந்தரால் பராமரித்து வளர்க்கப்பட்ட குதிரைகள் நோய்வாய்ப்படும் பொழுது குணப்படுத்தும் நோக்குடன் மருத்துவக்கேணி அமைக்கப்பட்டது. | |
| அமைவிடம் | |
| நெடுந்தீவு கிழக்கு J/006 | |
|
ஒல்லாந்தர் ஆட்சிக் கால நிர்வாக அலுவலகம் |
|
![]() |
|
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
|
ஒல்லாந்தர் ஆட்சிக் கால நிர்வாக அலுவலமாக இயங்கி வந்த்து. பிற்காலத்தில் பிரித்தானியாவின் நிர்வாக காரியாலயமாகவும் பயன்படுத்தப்பட்டது. பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கிடைக்கப் பெற்ற பின்னர் இதைன நிர்வகிக்க பிரதேசவாசி ஒருவர் உடையார் எனும் பதவி பெற்று நிர்வகித்து வந்தார். இதன் பின்னர் உதவி அரசாங்க அதிபர் பணி மனையாக்கப்பட்டது. 14.10.2014 வரை இயங்கி வந்த்து. புதிய பிரதேச செயலகம் அமைக்கப் பெற்றதும் இன்று இக்கட்டடமானது அரச காரியங்களை நிறைவேற்றப் பயன்படுத்தப்படும் இடமாக மாற்றப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. |
|
| அமைவிடம் | |
|
நெடுந்தீவு மத்தி J/004 |
|
| கிராம கோட் | |
![]() |
|
| பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த யூரிமார் சபை | |
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
|
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த யூரிமார் சபை நீதிமன்றமாக செயற்பட்டு வந்துள்ளது. பிரித்தானிய மன்னர்கள் பயன்படுத்தும் முடிக்குரிய சின்னங்கள் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. பிற்பட்ட காலத்தில் இந்தியாவின் பஞ்சாயத்து முறையிலான நடவடிக்கைகயில் இயங்கி வந்துள்ளது. இதன் முன் பக்கத்தில் காணப்படும் கட்டடமானத்து வெளிநோயாளர் பிரிவிற்கான வைத்திய நிலையமாகவும் இயங்கி வந்துள்ளது. |
|
| அமைவிடம் | |
| நெடுந்தீவு மத்தி J/004 | |
| வளரும் கல் | |
![]() |
|
| நாக பாம்பினுடைய தலை போன்று வளர்ந்த வண்ணம் உள்ள கல் | |
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
| 1964ம் ஆண்டளவில் 1 அடியளவில் இருந்து தற்காலத்தில் 4 அடி உயரமாக இக்கல் வளர்ந்துள்ளது. இக்கல்லானது நாக பாம்பினுடைய தலை போன்று வளர்ந்த வண்ணம் உள்ளது. பாம்பை வழிபடும் மரபு கொண்ட இந்துக்கள் இக்கல்லை பூசித்து வணங்கி வருகின்றனர். | |
| அமைவிடம் | |
| நெடுந்தீவு கிழக்கு J/006 | |
| கச்சதீவு அந்தோனியர் ஆலயம் | |
![]() |
|
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
|
இந்தியாவின் பாம்பன் இராமேஸ்வரத்திற்கு வடக்கே தலைமன்னாரிற்கும், நெடுந்தீவிற்கும் இடையில் பாக்கு நீரிணையின் மையப்பகுதியில் இந்த அழகிய தீவு காணப்படுகின்றது. இங்கு வறண்ட வலயத்திற்குரிய பற்றை புதர்களும் சிறிய புற்றரைகளும் கடேலார தாவரங்களும் பரந்த காணப்படுன்றன. 1913ம் ஆண்டு நம்புதான் என்னும் சிற்றூரைச் சார்ந்த தமிழர்கள் புயல்காற்றில் சிக்கியபோது அந்தோனியரை நம்பிக்கையோடு வேண்டிக் கொண்டபோது அந்த அபாயத்திலிருந்து தப்பியதால் இவ் ஆலயம் கட்டப்பட்டது என கூறப்படுகின்றது. வருடத்திற்தகு ஒரு தடவை நடைபெறும் திரிவிழாவில் இலங்கை இந்திய மக்கள் கலந்துகொள்வது வழமை |
|
| அமைவிடம் | |
| நெடுந்தீவு தெற்கு J/002 | |
| செல்லும் முறை | |
| குறிகட்டுவான் இறங்கு துறையில் இருந்து படகு மூலம் நான்கு மணிநேர பிரயாணம் அல்லது நெடுந்தீவில் இருந்து 3 மணி நேர பிரயாணம் |
கரவெட்டி
|
மாயக்கைக்குளம் |
குகை |
![]() |
|
| 1979ம் ஆண்டு முதன் முதலாக அடையாளப்படுத்தப்பட்டது. இது 60.0000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.இங்கு Homo –Erectus இனத்தைச் சேர்ந்த மனிதர்களது வாழ்வியல் தடயங்கள் காணப்பட்டன என்றும பேராசியர் எஸ்.கிருஸ்ணராசா அவர்கள் வரைந்த கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.பாரிய கற்கள் கொண்ட குகை. | |
| அல்வாய் கிழக்கு கிராம அலுவலர் பிரிவு J/380 , மாயக்கை | |
|
நெல்லியடி கிழக்கு மடத்துவாசல் பிள்ளையார் கோவில் பழைய கேணி மற்றும் கற்றூண் புராதன மற்றும் மதம் சார் தலம் |
|
|
கற்றூண்புராதன மற்றும் மதம் சார் தலம் |
பழைய கேணி |
![]() |
![]() |
|
1639 இலக்க 2011.12.30ம் திகதிய சுற்றுநிருபத்தில் பாதுகாக்கப்பட்ட விடயமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. J/377 நெல்லியடி கிழக்கு |
|
|
|
|
| உடுப்பிட்டி தெற்கு வீரபத்திரர் கோவில் | |
![]() |
![]() |
| 1639 இலக்க 2011.12.30ம் திகதிய சுற்றுநிருபத்தில் பாதுகாக்கப்பட்ட விடயமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது | |
|
உடுப்பிட்டி தெற்கு J/354 |
|
| அந்தணன்திடல் பறவைகள் தங்கிச் செல்லும் இடம் | |
![]() |
![]() |
| பருவ காலங்களில் பறவைகள் வந்து தங்கிச் செல்லும் இடம் பசுமையான இட அமைவினைக் கொண்டுள்ளது | |
| கப்பூது J/382 | |
பருத்தித்துறை
| தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயம் | |
![]() |
|
| புராணகாலப் பழைமை வாய்ந்த இவ்வாலயமானது அசுரன் ஒருவன் தவம் செய்து முத்தியடைந்த கல்லாற்றங்கரையின் பூவரச மரத்தை தலவிருட்சமாகக் கொண்டது. மூர்த்தி, தலம் தீர்த்தம் முதலான சிறப்புக்களையுடைய இவ்வாலயமானது பக்தர்களுக்கு பல அற்புதங்களையும் அனுக்கிரகங்களையும் வழங்கி வரும் புனிதத் தலமாக இருந்து வருகின்றது. இங்கு கதிர்காம மரபை ஒட்டிப் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. சிறப்பான இயற்கைச் சூழலில் அமைந்து மக்கள் மனங்களைக் குளிர்விக்கும் சிறப்பு யாத்திரைத் தலமாக காணப்படுகின்றது. | |
| பொருளின் பண்புகள் | |
| புராண இதிகாச கால தொடர்புகளையுடைய வழிபாட்டுத் தலம். | |
| சான்று | |
| அரச வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்ட யாத்திரைத் தலமாகவுள்ளது. | |
| அமைவிடம் | |
| J/383, தொண்டைமானாறு தெற்கு. | |
| செல்லும்முறை | |
| பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இருந்து 15 கி.மீற்றர் தொலைவிலுள்ள இவ்வழிபாட்டுத் தலத்திற்கு பலவழிகளில் செல்ல முடியும். 750 போக்குவரத்துப் பாதையில் உள்ள உப்பு வல்லைச் சந்தியில் இருந்து தொண்டைமானாறு வீதியூடாகவும் வல்லை – உடுப்பிட்டி வீதியில் வந்து முதலாவது சந்தியிற் திரும்பியும் பருத்தித்துறை – காங்கேசன்துறை வீதியில் தொண்டைமானாறு பாலத்திற்கு அருகேயுள்ள சிறுவீதியிற் திரும்பியும் அச்சுவேலி – சந்நிதி வீதியூடாகவும் வாகனங்களில் செல்வது மிகவும் இலகுவான மார்க்கங்களாக காணப்படுகின்றது. | |
| ஒழுங்கு முறை | |
| புனிதப் பிரதேசமாகவும் வழிபாட்டிடமாகவும் இருப்பதால் நல்லொழுக்க நியமங்களோடு ஆசாரம் பேணப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. | |
| வரி/ அறிவீடுகள் | |
| திருவிழாக் காலங்களில் வாகனத் தரிப்பு அறவீடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. வழிபாடுகளில் குறிப்பிட்ட சிலவற்றுக்கு நியமிக்கப்பட்ட தட்சணை/ காணிக்கை அறவிடப்படுகின்றது. | |
| ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம் | |
![]() |
|
| வடமராட்சியில் மக்கள் ஆதிக்குடியிருப்பை நிறுவி வாழ்ந்த ஓரிடமாக இப்பிரதேசம் காணப்படுகின்றமையால் வல்லிபுரக் கோயிலும் அதனோடு தொடர்புடைய வரலாற்றுப் புகழ் உடையதாக காணப்படுகின்றது. இது யாழ்மாவட்டத்தில் காணப்படுகின்ற கிருஸ்ணர் ஆலயங்களில் முக்கியமான ஒன்றாக காணப்படுவதோடு அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட யாத்திரைத் தலமாகவும் காணப்படுகின்றது. உற்சவ காலத்தில் அலையெனத் திரளும் பத்தர்கள் கூட்டத்தினைப் பார்க்கின்றபோது இதன் சிறப்பும் பெருமையும் புலப்படும் | |
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
| வரலாற்றுக்கால தொடர்புகளையுடைய ஓர் வழிபாட்டுத் தலம். | |
| சான்று | |
| அரச வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்ட யாத்திரைத் தலமாகவுள்ளது. | |
|
:
|
|
|
: |
|
|
அமைவிடம்: J/406, வல்லிபுரம் |
|
|
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இருந்து 4.5கி.மீற்றர் தொலைவிலுள்ள இவ்வழிபாட்டுத் தலத்திற்கு பலவழிகளில் செல்ல முடியும். மந்திகை உபய கதிர்காமம் ஊடாகவும் பருத்தித்துறை – மருதங்கேணி வீதியூடாகவும் இவ்வாலயத்திற்கு வாகனங்கள் மூலம் எளிதாகச் செல்ல முடியும். |
|
|
ஒழுங்குமுறை: வழிபாட்டுத்தலம,; புனிதப் பிரதேசங்களுக்கு செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்க நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது பொதுவான நடைமுறையாகவுள்ளது. |
|
|
உற்சவ காலங்களில் வாகனத் தரிப்புக்கும் விசேட வழிபாட்டு நடைமுறைகளுக்கும் அர்ச்சனை முதலானவற்றுக்கும் நியமிக்கப்பட்ட கட்டணங்கள் அறவிடப்படுகின்றது. |
|
| கிளைப் பனை | |
|
|
|
| வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் ஆலய வளாகத்தின் நுழைவாயிலுக்கு எதிர்ப்புறமாக இத் தாவரம் காணப்படுகின்றது. இலங்கையில் அரிதாகக் காணப்படும் தாவர வகைகளில் ஒன்றான இத்தாவரம் பெருமளவான பனைகளுக்கு மத்தியில் காணப்படும் பல கிளைகளைக் கொண்ட ஒன்றாதலால் “கிளைப்பனை” எனப் பலராலும் அழைக்கப்பட்டு வருகின்றது. | |
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
| பனைவகைத் தாவரங்களில் ஒன்றான இது, பல கிளைகளைக் கொண்டிருப்பதால் பார்ப்பவர்கள் பலரையும் கவரத்தக்கதாக உள்ளது. | |
| அமைவிடம் | |
| J/406, வல்லிபுரம். | |
| செல்லும்முறை | |
| வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு செல்லும் பாதை வழியையே பின்பற்ற வேண்டும். | |
| ஒழுங்குமுறை | |
| புனிதப் பிரதேச எல்லையில் இருப்பதால் பொதுவான ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுதல் நன்று. | |
| வரி/ அறிவீடுகள் | |
| உற்சவ காலங்களில் வாகனத் தரிப்பிட (போக்குவரத்து கட்டணங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. | |
| பருத்தித்துறை தெருமூடி மடம் | |
![]() |
|
| மடங்கள், கிணறு மற்றும் கேணிகள் ஆவுரஞ்சிக் கற்கள் என்பன யாழ்ப்பாணப் பண்பாட்டில் எந்தக் காலகட்டத்திலிருந்து தோன்றி வளர்ந்தன என்பதை தெளிவாக சொல்ல முடியாவிட்டாலும் மேற்படி அம்சங்கள் ஒருங்கிசைவு பெற்ற நிலையை டச்சு வீதிகள் பிரதான வீதிகளுடன் இணையும் முக்கிய தரிப்பு மையங்களில் அமைந்திருப்பதை காணமுடியும் இந்த வகையில் அமைந்த மடங்கள் குடாநாட்டில் பல இடங்களில் காணப்படுகின்றபோதும் அவை தெருமூடி மடங்களாக அமைந்திருப்பது அரிதாகவே காணப்படுகின்றது. இவ்வரிய மடங்களில் ஒன்று இன்றும் உருச்சிதையாது பருத்தித்துறை – தும்பளை வீதியில் சிவன்கோயிலுக்கு சமீபமாக காணப்படுகின்றது. இது சுமார் 150 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். |
|
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
| வழிப்போக்கர்கள் தங்கி இளைப்பாறும் பொருட்டு. | |
| அமைவிடம் | |
| J/401, தெருமூடி மடத்தடி, பருத்தித்துறை | |
| செல்லும்முறை | |
| பருத்தித்துறை நகரத்தில் பிரதான வீதி – தும்பளை சந்திக்கு சமீபமாக இருப்பதால் எந்த வேளையிலும் எந்த வாகனத்திலும் வந்து செல்வதற்கு ஒருவித தடையும் இல்லை. | |
| ஒழுங்குமுறை | |
| புனிதப் பிரதேசங்கள் மரபுரிமைச் சொத்துக்களை பார்வையிடச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. | |
|
: |
|
|
: . |
|
|
: |
|
|
|
|
| வெளிச்ச வீடு |
|
![]() |
|
| இது பருத்தித்துறை பஸ் நிலையத்திலிருந்து கடற்கரை வீதியின் ஊடாக முனை நோக்கி செல்லும்போது சுமார் 1.75 கி.மீற்றர் தூரத்தில் காணப்படுகின்றது. 75அடி உயரமான, நூற்றாண்டுகளுக்கு மேலான பழைமை வாய்ந்த இக் கட்டடம் மீனவர்களுக்கும் மாலுமிகளுக்கும் வழிகாட்டியாக பயன்பட்டுவந்துள்ளது. இது புராதன இலங்கையின் வடக்கு முனையான பேதுறு முனையில் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. | |
| இடத்தின் / பொருளின் பண்புகள் | |
| வெளிச்சவீடு –கட்டடம் | |
| அமைவிடம் | |
| J/403, பருத்தித்துறை கிழக்கு. | |
| செல்லும்முறை | |
| போக்குவரத்து பாதையில் இல்லாதமையால் பிரத்தியோக வாகன வசதியிருப்பின்; செல்ல முடியும். | |
| ஒழுங்குமுறை | |
| மரபுரிமைச் சொத்து, மற்றும் பாதுகாப்பு விடயங்களை அனுசரித்து செயற்பட வேண்டும். | |
|
|
|
| ஊறணி ஊற்று | |
![]() |
|
வல்வெட்டித்துறை நகரப் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்கையில் ஊறணி வைத்திய சாலைக்கு அருகே எதிர்ப்புறமாகவுள்ளது. வல்வெட்டித்துறை ஊறணிப் பகுதியில் காணப்படும் சுண்ணாம்புக்கல் பிரதேச நிலவுருவாக்கமாக காணப்படும் ஊற்றுக் கேணி இதுவாகும். இந்நிலவுருவம் கடற்கரையில் கடல் நீருக்கு மிகச் சமீபமாகக் காணப்படுகின்றபோதிலும் இதிலுள்ள நீர் ஒப்பீட்டளவில் உப்புத்தன்மை குறைந்ததாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. |
|
|
இடத்தின் / பொருளின் பண்புகள்: சுண்ணம்புக்கல் நிலவுருவங்களில் ஒன்று. |
|
|
அமைவிடம் : J/393, பொலிகண்டி மேற்கு. |
|
|
751 போக்குவரத்துப் பாதையில் (ஊறணி வைத்தியசாலைக்கு முன்பாக)இருப்பதால் விசேட ஏற்பாடுகள் தேவையில்லை. |
|
|
ஒழுங்குமுறை: மரபுரிமைச் சொத்து, பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகள் பின்பற்றப்படுதல் நன்று. |
|
| மண்டபக்காடு குகை | |
![]() |
|
|
இடம் : மண்டபக்காடு குகை, கெருடாவில். |
|
| இது யாழ்ப்பாணத்தில் இருந்து 751 பஸ் போக்குவரத்து வீதியூடாக சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது(மேற்படி வீதியில் இவ்விடத்திற்கு தொண்டைமானாறு – கெருடாவில் வீதியூடாக சுமார் 3கி.மீ உள்ளே செல்லவேண்டியுள்ளது. இது யாழ்ப்பாணத்தில் காணப்படும் மிக முக்கியமான சுண்ணாம்புக்கல் பிரதேச நிலவுருவங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இனங்காணப்பட்ட குகைகளில் இது மிகமுக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. இக்குகை தொடர்பாக பலகதைகள் செர்லலப்பட்டு வருகின்றது. அவை ஆய்வுசெய்யப்பட வேண்டியனவாக உள்ளன. | |
|
இடத்தின் / பொருளின் பண்புகள்: சுண்ணாம்புக் கற்பாறை வழியமைந்த குகை. |
|
|
அமைவிடம் : J/385, கெருடாவில் தெற்கு. |
|
|
செல்லும்முறை : தொண்டைமானாறு கெருடாவில் வீதியின் ஊடாக(3.கி.மீ) பிரத்தியேக வாகனத்தைப் பயன்படுத்திச் செல்ல முடியும். |
|
|
மரபுரிமைச் சொத்து, பாதுகாப்பு அணுகு முறைகள் பொதுவாகப் பின்பற்றப்படுதல் நன்று. |
|






































































































































