இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான மாவட்ட அலுவலகம்

ஊழலுக்கு எதிரான தேசிய செயற்பாட்டத்திட்டம் 2025-2029 அரச நிறுவனங்களில் உள்விவகார பிரிவினை ஆரம்பித்தல் என்னும் செயற்திடடத்தின் கீழ் 09.04.2025 ஆம் திகதி ஆரம்பவிழா கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 28.04.2025ம் திகதி அன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது. இப்பிரிவின் தலைவராக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளர் திரு.. சிவகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் சனாதிபதி அலுவலகமும் ஒன்றிணைந்து ஆரம்பித்து வைத்த குறித்த பிரிவின் ஊடாக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளையும் தீர்க்கப்படாத பிரச்சினைகளையும் முறையிட முடியும்.

தொலைபேசி: 0212222236

வாட்ஸ்அப்    : 0773868586

மின்னஞ்சல்  :  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தொலைநகல்: 0212222236

முகவரி

உள்ளக அலுவல்கள் பிரிவு
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு,
மாவட்டச் செயலகம்,
யாழ்ப்பாணம்.