அரசாங்க அதிபர் / மாவட்ட செயலாளர்

திரு.ம.பிரதீபன்
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், கௌரவ விருந்தினராக “கலைக்குரிசில்” திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கவிஞரும் மூத்த நாடகவியலாளருமான திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்கள் பங்கேற்றார். இவ்வாண்டின் பண்பாட்டுப் பெருவிழா “மாவைப் பண்டிதர்” அமரர் க. சச்சிதானந்தன் அரங்கு (மாவிட்டபுரம்) எனும் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள், தனது உரையில், ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனத் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பாரம்பரிய கலை வடிவங்கள் படிப்படியாக சுருக்கப்பட்டு இலத்திரனியல் வடிவங்களுக்கு மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அவற்றின் அசல் தன்மையையும் பாரம்பரிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.see more....Events
News
அரசு சேவை மையங்கள்
யாழ் மாவட்ட செயலக மற்றும் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களினதும் இணையத்தளங்கள் மேம்படுத்தல் காரணமாக பெப்ரவரி மாதம் 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் தற்காலிகமாகத் தொழிற்படமாட்டாது என்பதனை அறியத்தருகிறேன்.
நா. வேதநாயகன்,
அரசாங்க அதிபர் .
யாழ்.மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் M. பிரதீபன் அவர்களின் தலைமையில் கிராம உத்தியோகத்தர்களிற்கான அரச காணி, தனியார் காணி தொடர்பான நடைமுறைகள், நகர அபிவிருத்தி அதிகார சபை, வனவள திணைக்களம் , சுற்றுப்புறச்சூழல் தொடர்பான நடைமுறைகள் மற்றும் கனியவளத் திணைக்களம் பற்றியதான பயிற்சி நெறி இன்று (10.02.2020) காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி நெறியின் வளவாளராக யாழ்.மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் C. பத்மநாதன் அவர்கள் கலந்துகொண்டார்.
வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் யாழ்.மாவட்ட செயலகம் இணைந்து நடாத்திய தொழிற் சந்தை நிகழ்வு 08.02.2020 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகவளாகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் செயலாளர் திரு.டி.எம்.எஸ்.அபேகுணவர்தன , வட மாகாண திட்டமிடல் பிரதி பிரதம செயலாளர் திரு சு.உமாகாந்தன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு. நா.வேதநாயகன்,மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன், மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்கள பணிப்பாளர் Mr.லால் சமரசேகர,முன்னாள் பணிப்பாளர் திரு. E.L.K.திஸ்ஸநாயக்க , உதவிப் பணிப்பாளர் மற்றும் Ms.யசஸ்மி ஹிக்குருதுவ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இலங்கையின் 72 வது சுதந்திரதினம் இன்று (04-02-2020) "பாதுகாப்பான தேசம் சுபீட்சமான நாடு" என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டது. இந்தவகையில் யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் அவர்களின் தலைமையில் காலை 8.00 மணிக்கு தேசியக்கொடி ஏற்றலுடன் சுதந்திர தின வைபவம் ஆரம்பமானது.











