15புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் தீபாவளி இலக்கியக் கூடல் நிகழ்வு புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களது பங்குபற்றுதலுடன் இன்றையதினம் (18.10.2025)காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாசார நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களால் புத்தக கண்காட்சி சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது .தொடர்ந்து பேராசிரியர் லியனகே அமரகீர்தி அவர்கள் ஆற்றிய அரச இலக்கிய பேருரையின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்வெளியீடு இடம்பெற்றது. தொடர்ந்து கலைஞர்களுக்கான
அடையாள அட்டைகளை
கௌரவ அமைச்சர் மற்றும் இலக்கிய குழுவினர் வழங்கி வைத்தனர். தொடர்ந்து புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ கலாநிதி ஹினிதும சுனில் செனவி, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ம. பிரதீபன் மற்றும் இலக்கிய குழுவினர் ஆகியோர் பிரதேச நூலகங்களுக்கான நூல் தொகுதிகளை வழங்கி வைத்தனர். தொடர்ந்து ,வடக்கு தெற்கு கலைஞர்களுடனான சினேகபூர்வ கலந்துரையாடல் மற்றும்
நடனநிகழ்வுகள் இடம்பெற்றது.
புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்கள் கருத்துதெரிவிக்கையில் யாழ்ப்பாண மாவட்டம்
சிறந்த பாரம்பரிய விடயங்களை கொண்ட இடம் எனவும் அடுத்த வருடத்திற்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பெருமளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,அத்துடன்
சர்வதேச திரைப்பட விழா இவ்வருடம் நடைபெறவுள்ளதாகவும் அது தொடர்பாக நேற்றைய தினம் கலந்துரையாடப்பட்டதாகவும்,சர்வதேச மட்டத்திலான மொழிபெயர்ப்பு நிறுவனம் உருவாக்குவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், பல இலக்கிய படைப்புக்களின் மொழிபெயர்ப்பு மக்களுக்கு கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன்,
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் ,
இலங்கை கலைக்கழக தலைவர் திரு. கீர்த்தி வலிசரகே, இலக்கிய துணைக்குழு தலைவர் திரு. கமல் பெரேரா, யாழ்ப்பாண பல்கலைக்கழக மொழித்துறைசிரேஷ்ட விரிவுரையாளர் திரு.சாமிநாதன் விமல் ,லேக்வுஸ் ஆசிரியர் குழு பணிப்பாளர் திரு.சிசிர யாப்பா, தினகரன் பிரதம ஆசிரியர் திரு.செந்தில்வேல் ,யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புகுழு அலுவலக இணைப்பாளர் திரு.எஸ்.கபிலன், மாவட்ட செயலக ,பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள்,சிரேஷ்ட எழுத்தாளர்கள், தென்னிலங்கை எழுத்தாளர் குழு,லேக்ஹவுஸ் நிறுவன பிரதிநிதிகள்,கலைஞர்கள்,கலை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15