யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி இன்று ( 30.03.2020) காலை முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாகஇ நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் பணியை பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சிறப்பு அதிரடிப் படையினர் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியிருடன் இணைந்து பொலிஸார் உள்ளிட்டோர் முன்னெடுத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 1  2 4   

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஊடகவியலாளர் சந்திப்பு சனிக்கிழமை (28.03.2020) அன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சந்தின்போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள் கீழ்வரும் விடயங்களை கூறியிருந்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு , மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் அறிவித்தபடி தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மார்ச் 27ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) காலை 6:00 மணிக்கு நீக்கப்பட்டு அதே தினம் மதியம் 2:00 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த நான்கு மாவட்டங்களிலும் - மார்ச் 30ஆம் திகதி காலை 6:00 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அதே தினம் பிற்பகல் 2:00 மணிக்கு நடைமுறைக்கு வரும்.

அரசாங்கத்தினால் யாழ் மாவட்டத்திற்கான ஊரடங்குச்சட்ட உத்தரவானது மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது இச்சூழ்நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியமான தேவைகள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான ஒழுங்குகள் பின்வரும் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Emergency meeting was held on 25th of March with chamber of commerce, Cargills food city, Sathosa and other relevant heads of the Departments at Jaffna District Secretariat.    
 IMG 20200325 WA0006 IMG 20200325 WA0007 1