வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (21.08.2026) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் திரு. க. நிகரில்காந்த் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இச் செயலமர்வில், வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் நலன்களைப் பாதுகாத்தல், அவர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தல், அத்துடன் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகளைக் குறைத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இச் செயலமர்வை ஆரம்பித்து உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், வெளிநாடுகளுக்குத் தொழில் வாய்ப்புக்காகச் செல்லும் பெண்களின் குடும்ப நலன்களைப் பாதுகாப்பதுடன், அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சமூக, பொருளாதார மற்றும் குடும்ப ரீதியான பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டம் ஐந்து ஆண்டு காலத் திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இத்திட்டம் முதன்முறையாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் ஊடாக பொருளாதார வலுப்படுத்தல், சிறுவர் நலன் மற்றும் பாதுகாப்பு, பெண்கள் வலுவூட்டல், சமூக ஆதரவு மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதே இச் செயலமர்வின் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், இத்திட்டத்தைச் சிறப்பாகவும் வினைத்திறனுடனும் நடைமுறைப்படுத்துவதற்காக உத்தியோகத்தர்களுக்கு பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

1.வெளிநாடு செல்லும் குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளுடன், குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தொழில்திறன் ஆகியவற்றையும் ஒருங்கிணைந்த முறையில் கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

2.வெளிநாடு செல்வோர் போலியான தகவல்களை வழங்குவதையும், பிறரின் பெயர்களைப் பயன்படுத்துவதையும் தவிர்த்து, உரிய மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

3.பெண்கள் அபிவிருத்தி, சிறுதொழில், திறன் விருத்தி, விதாதா உள்ளிட்ட அனைத்துத் துறைசார் உத்தியோகத்தர்களும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தேவையான சேவைகளை குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

4.ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவும் தமது பிரிவில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான மாதாந்த முன்னேற்ற அறிக்கைகளை மாவட்ட செயலகத்திற்கும் அமைச்சிற்கும் முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

5.திட்டத்தின் முன்னேற்றம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முறையாக மீளாய்வு செய்யப்பட்டு, தேவையான திருத்தங்களும் மேலதிக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

6.உதவி மற்றும் வழிகாட்டல் தேவைப்படும் குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

7.குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு துறைசார் ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்றி, சம்பந்தப்பட்ட அனைத்து திணைக்களங்களும் இணைந்து தீர்வுகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் .

மேலும், இத்திட்டத்தின் ஊடாக வெளிநாடு செல்லும் குடும்பங்களின் வாழ்க்கையில் நேர்மறையானதும் நிலையானதுமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அனைத்து உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என அரசாங்க அதிபர் அவர்கள் வலியுறுத்தினார். புலம்பெயர் குடும்பங்களுக்கான திறன் மேம்பாடு, சிறுதொழில் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி உத்திகள், சிறுவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள், பெண்கள் வலுவூட்டல் மற்றும் சமூக ஆதரவு ஆகிய விடயங்கள் தொடர்பில் கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் மாவட்ட இணைப்பாளர்களான திரு. ரி.டி.ஜி. பிராங்கிளின் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் திரு. எஸ். விபுஷன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம், நல்லூர், தெல்லிப்பழை, கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்த உதவி பிரதேச செயலாளர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுதொழில் முயற்சி உத்தியோகத்தர்கள், தொழில்துறை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விதாதா உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 63 பேர் இச்செயலமர்வில் கலந்து கொண்டனர். மேலும், இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன், உதவி மாவட்ட செயலாளர் உ. தர்ஷினி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வடமாகாண சிரேஷ்ட முகாமையாளர் திருமதி லக்ராணி மற்றும் பணியகத்தின் யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பதிகாரி திரு. கோடீஸ்வரன்,அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. கெனத் லங்கா, உள்ளிட்ட துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 11 12 13

யாழ்ப்பாணத்தின் டென்னிஸ் விளையாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், இலங்கை டென்னிஸ் சங்கம் (SLTA) ஏற்பாடு செய்யும் இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் (SLTPL) போட்டியில் பங்கேற்கும் எட்டு நகர அணிகளில் ஒன்றான யாழ் ஃபிளமிங்கோஸ் (Jaffna Flamingos) அணியின் உத்தியோகபூர்வ அறிமுக விழா இன்று (20.08.2026) வியாழக்கிழமை மாலை 04.00 மணிக்கு தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இந் நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக ஷங்கர் ஃபூட்ஸ் (UK) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், யாழ்ப்பாணம் சிட்டி ஹோட்டலின் உரிமையாளருமான சந்திரசேகரம் கேதீஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினராக அருட்தந்தை அ.பி. திருமகன் அவர்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்ட டெனிஸ் போட்டியில் பங்கேற்கும் ‘யாழ் ஃபிளமிங்கோஸ்’ அணி வெற்றிபெற வேண்டும் என தெரிவித்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 10 வயதுடைய ரோஹன் தேசிய மட்ட அணியில் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், சிறுவயதிலேயே தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது எனவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாண டெனிஸ் வீரர்களுக்கு உயர்மட்டப் பயிற்சிகளையும் போட்டி அனுபவங்களையும் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், இதனால் தேசிய மட்டத்திற்கு வீரர்கள் தெரிவாகுவதில் சவால்கள் காணப்படுவதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார். டெனிஸ் விளையாட்டு தற்போது விளையாட்டைத் தாண்டி பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் துறையாகவும் வளர்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டதுடன், மாணவர்களை கல்வியுடன் இணைந்து விளையாட்டுத் துறையிலும் ஈடுபடுத்த பெற்றோர்கள் வழங்கும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது எனத் தெரிவித்தார். எட்டு மாவட்ட அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் ‘யாழ் ஃபிளமிங்கோஸ்’ அணி தொடர்ச்சியான சுற்றுகளில் முன்னேறி வெற்றிபெற வேண்டும் எனவும் வாழ்த்துத் தெரிவித்தார்.
நிகழ்வுகள் :
அதிதிகளுக்கு வரவேற்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றப்பட்டது. இதன்போது, யாழ்ப்பாண மாணவர்களுக்கான டென்னிஸ் விளையாட்டின் எதிர்கால வாய்ப்புகள், இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் ஊடாகக் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் மற்றும் யாழ் ஃபிளமிங்கோஸ் அணியின் நோக்கங்கள், எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, யாழ் ஃபிளமிங்கோஸ் அணியின் முதலாவது உத்தியோகபூர்வ ஜெர்சி, மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் அணியின் உத்தியோகபூர்வ சீருடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மேலும், அணியின் வீரர், வீராங்கனைகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு உத்தியோகபூர்வ அணிச் சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் C.L. Synergy Limited நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரோஹணன் சில்வா, இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் நிறுவனர், வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உடற்கல்விப் பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆர். ராஜசீலன், யாழ்ப்பாண மாவட்டத்தில் டென்னிஸ் விளையாடும் பாடசாலைகளின் மாணவர்கள், பொறுப்பாசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 27 முதல் 30ஆம் திகதி வரை கொழும்பிலுள்ள இலங்கை டென்னிஸ் சங்கத்தின் கடினத் தரை மைதானங்களில் நடைபெறவுள்ளன. இத்தொழில்முறை லீக் போட்டியானது இலங்கையில் டென்னிஸ் விளையாட்டை மேம்படுத்துவதுடன், வணிக வருவாயை ஈட்டி, மீண்டும் டென்னிஸ் கட்டமைப்பு மற்றும் இளம் வீரர்களின் வளர்ச்சிக்காக முதலீடு செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. யாழ் ஃபிளமிங்கோஸ் அணியானது யாழ்ப்பாணத்தின் டென்னிஸ் பாரம்பரியத்தை மீட்டெடுத்து, இளம் வீரர்களுக்கு நிலையான வளர்ச்சிப் பாதையை உருவாக்குதல், டென்னிஸ் தொடர்பான பொது விழிப்புணர்வை அதிகரித்தல், சமூக டென்னிஸ் மைதானங்களை மேம்படுத்துதல், சிறுவர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சி வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு தேசிய, சர்வதேச மட்டங்களுக்கு வழிநடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுடன் செயற்படவுள்ளது.
 
1 2 3 8 9 10 11 12 15 16 17
 
அரச திணைக்களங்களுக்கிடையிலான பூப்பந்தாட்டச் சுற்று தொடரில் யாழ்.மாவட்டச் செயலக அணி இரண்டாம் இடம். வடமாகாண ரீதியில் அரச திணைக்களங்களுக்கு இடையில் நடைபெற்ற பூப்பந்தாட்டச் (Badminton) சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி 16.08.2026 அன்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணியும் கல்வித் திணைக்கள அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கல்வித் திணைக்கள அணி சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டது. இதன்போது, சிறப்பாகப் போட்டியிட்ட யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி இரண்டாம் இடத்தைப் பெற்று வெற்றியீட்டியது. இதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் (21.08.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணியினர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனைச் சந்தித்து கலந்துரையாடியதுடன், தாம் பெற்ற வெற்றிக் கிண்ணத்தை அரசாங்க அதிபர் முன்னிலையில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

இதன்போது அணியினரின் சாதனையைப் பாராட்டிய அரசாங்க அதிபர், எதிர்காலத்திலும் இவ்வாறான போட்டித் தொடர்களில் ஆர்வத்துடன் பங்குபற்றி மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துத் தெரிவித்தார். இப்போட்டித் தொடரை வலிகாமம் மேற்கு பிரதேச சபையும், வாழ்வோதயம் (மாற்றத்திற்கான சமூக அமைப்பு – CFFC) அமைப்பும் இணைந்து நடத்தியமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ. தர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.

1

சமூக சக்தி தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பன்முக வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (20.08.2026) பிற்பகல் 2.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் திரு. எம்.ஏ.எல்.எஸ்.என்.கே. சம்பத் மந்திரிநாயக்க ஆகியோர் நிகழ்நிலை ஊடாகக் கலந்து கொண்டனர்.
கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், நெடுந்தீவு மக்களின் நீண்டகால கடற்போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், புதிய படகொன்றைக் கொள்வனவு செய்வதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். குறித்த திட்டத்தை விரைவாக ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனுமதிகள், தொழில்நுட்ப நடவடிக்கைகள் மற்றும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் தொடர்பில் ஆராய்வதற்காகவே இக் கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். நெடுந்தீவிற்கான புதிய படகு கொள்வனவு செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படுவதன் மூலம், அப்பகுதி மக்களின் பயணிகள் கடற்போக்குவரத்து மேலும் இலகுபடுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், நெடுந்தீவு மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் கூடிய கவனம் செலுத்தி, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் கருத்துத் தெரிவிக்கையில், இன்றைய கலந்துரையாடலின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நிதி ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ரூ.235 மில்லியன் சிறப்பு ஒதுக்கீடு கிடைத்துள்ளதாகவும், சமூக சக்தி திட்டத்தின் கீழ் ஏற்கனவே யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ரூ.652 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தற்போது யாழ்ப்பாண மாவட்டம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்து பிரச்சினை காணப்படுவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். குறிக்கட்டுவான் – நெடுந்தீவு இடையே சேவையில் ஈடுபட்டு வரும் ‘வடதாரகை’ மற்றும் ‘நெடுந்தாரகை’ ஆகிய இரு படகுகளும் தற்போது பழுதுபார்க்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, ‘குமுதினி’ படகு திருத்தப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக நெடுந்தீவு மக்கள் மட்டுமன்றி, நெடுந்தீவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் கடற்போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டார். கடற்போக்குவரத்து சேவையில் கடற்படைத் தளபதி முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர், புதிய குளிரூட்டப்பட்ட படகு சேவையை கட்டணம் செலுத்திப் பயன்படுத்துவதன் மூலம் நெடுந்தீவு மக்களும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் பயனடைவார்கள் எனக் குறிப்பிட்டார். இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்போக்குவரத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களை கணிசமாகக் குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் பணிப்பாளர் (திட்டமிடல்) நிலந்த விக்ரமசிங்க, பிரதிப் பணிப்பாளர் ஆயிஷா சுபசிங்க, திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு எஸ். கபிலன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் திரு எஸ். ஸ்ரீவாகீசன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ். சிவகுமாரன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு. என். பிரபாகர், இலங்கை இராணுவ யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையக நிர்வாக அதிகாரி கேர்ணல் MACP மொறசிங்க, இலங்கை கடற்படை நெடுந்தீவு முகாம் பொறுப்பதிகாரி கப்டன் என். ரணவீர, 51ஆவது படைப்பிரிவின் நிர்வாக அதிகாரி லெப். கேர்ணல் விஜயவர்தன, மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், உள்ளிட்ட துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 8 9