யாழ்ப்பாண மாவட்ட கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நூல்கள் வழங்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 09.02.2022 அன்று மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களும், ஸ்ரீபரமானந்தா சிறுவர், முதியோர் இல்லத்தின் தலைவரும், முன்னாள் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான, முன்னாள் வடமாகாண பிரதமசெயலாளருமான ஆ.சிவசாமி அவர்களும் கலந்துகொண்டதோடு, மேலதிக அரசாங்க அதிபர்(காணி)எஸ்.முரளிதரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நூலகர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பதினைந்து பிரதேச செயலகங்களிலும் உள்ள பின்தங்கிய பதினைந்து நூலகங்கள் தெரிவுசெய்யப்பட்டு ரூபா 15000 பெறுமதியான நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன. அடுத்த கட்டமாக பின்தங்கிய பாடசாலைகளுக்கு நூல்கள் வழங்கி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






