யாழ்ப்பாண மாவட்டச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு யுனிலிவர் நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய "சன்லைட் மனுதம் வியமன" திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில்  06 முயற்சியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். அவற்றுள் இரண்டு முயற்சியாளர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரினால் இருபதாயிரம் ரூபா  காசோலைகள் இன்று(12.09.2022) அரச அதிபர் அலுவலகத்தில் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும், நான்கு முயற்சியாளர்களுக்கும் அவர்களுடைய பிரதேச செயலகங்களில் இருபதாயிரம் ரூபா காசோலைகள் வழங்கிவைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.இதில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவிப்பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
12meet1  12meet2