யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் 27.09.2023 காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தின் மீள்குடியேற்றம், வீடமைப்புக்களை வழங்குதல், காணிவிடுவிப்பு, தேசியவீடமைப்பு அதிகார சபையின் மூலம் புதிய வீடமைப்பு சோலர் மின்சக்தி சகிதம் வீடற்றவர்களுக்கு வீடு வழங்குவதற்கான மாவட்டத்திற்கான தேவைப்பாடு, வனவளத்திணைக்களம் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் உள்ள குடியிருப்புத் தேவை, பயிர்ச்செய்கைத்தேவைக்கு பயன்படுத்தப்பட்ட மற்றும் விடுபடவேண்டிய காடுகள் வரையறுக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட ஆலோசனைகள் அதற்கு மேலதிகமாக எடுக்கப்பட வேண்டிய முடிவுகள், யாழ் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கான முடிவுகள், வடக்கு மாகாணத்துக்கான புனர்வாழ்வு மையம் அமைப்பதற்கான கட்டடம் தொடர்பான முன்னேற்பாடு, வறட்சி காரணமாக குடிநீர்ப்பிரச்சினை , குடிநீரைச் சேமிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கை குளங்களை தூர்வாா்தல் வேலைக்கான உணவு உதவித்திட்ட கோரிக்கைக்கான திட்ட முன்மொழிவுகள், குடிநீர் விநியோக திட்ட முன்மொழிவுகள், மாவட்ட டெங்கு கட்டுப்பாடு சம்பந்தமாக எடுக்க வேண்டிய முன்னாயத்த, எதிர்கால நடடிக்கைகள், இளம் தொழில் முனைவோருக்கான காணி வழங்கல் தொடர்பாக பிரதேச செயலாளர்களால் எடுக்கப்பட்ட முடிவுகள், தொண்டைமானாறு அணைக்கதவு இயக்கம் மற்றும் தொண்டைமானாறு கடல்நீரேரி நீரேந்துப் பிரதேசங்கள் மற்றும் பொது விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
யாழ் மாவட்டத்தின் மீள் குடியேற்றம் கலந்துரையாடப்பட்டதோடு, காணியற்றவர்களுக்கு அரச காணிகள் அளவீடு செய்யப்பட்டு காணிகள் வழங்குதல் முகாம்களில் வசிப்பவர்களில் தகுதியானவர்ளுக்கு வீடுகள் வழங்கும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ் மாவட்டத்தில் 20934 வீடுகளின் தேவைப்பாடு காணப்படுவதாதவும் இவ்வருடம் 696 வீடுகள் பல்வேறு நிதிஅமைப்புக்களின் உதவியுடன் புதிதாக கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வறட்சி காரணமாக குடிநீர்ப்பிரச்சினையால் பாதிக்கப்படும் இடங்களுக்கு மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் பிரிவினரால் 9539 குடும்பங்களுக்கு ஏறத்தாழ 10 இலட்சம் லீற்றர் வரையில் குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
அத்தோடு நன்நீர் மீன்வளர்ப்பு, உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையில் கடலுணவு எதிர்காலத்தில் குறைந்துவருமென குறிப்பிட்டுள்ளது இதனால் நீர்வேளாண்மையை முன்னெடுத்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
வன பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுவிக்கப்படவேண்டிய பகுதிகள், சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டுசெல்லல் தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும்,மக்களின் ஒத்துழைப்புடன் மணலை கட்டுமாணத்தேவைகளுக்கு எடுத்தல் தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு போதைப் பொருள் பாவனையினை கட்டுப்படுத்துதல் தொடர்பாக கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக புனர்வாழ்வு மையத்தினை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கனகராயன்குளத்தில் அமைத்தல் தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கீழ் பாலியாறிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டுவருதல் தொடர்பாக ஜனாதிபதி செயலகமட்டத்தில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சாதகமான முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டுக் குழு அறிக்கை தொடர்பாக ஆராயப்பட்டதோடு, நேற்றைய தினத்திலிருந்து எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு டெங்கு கட்டுபாட்டு வாரம் பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வருடாந்த அபிவிருத்தி திட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் ஒவ்வொரு அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இதில் கௌரவ வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த.சித்தார்த்தன், ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன், முன்னாள் வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்கள், மத்திய மற்றும் மாகாண சபையின் திணைக்களத்தலைவர்கள், வடக்கு மாகாணசபை அமைச்சின செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள், பிரதிப் பொலீஸ்மா அதிபர், வட பிராந்திய கடற்படையின் பிரதி கடற்படைத்தளபதி, விஷேட பொலிஸ் அதிரடிப்படை அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தரகள், பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் அரசாா்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தரகளும் கலந்து கொண்டனர்
 
DCC01 DCC02 DCC03 DCC04
IOM நிறுவன நிதி உதவியுடன் OFERR CEYLON மற்றும் CFCD நிறுவனங்களினால் யாழ்ப்பாண மாவட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் , புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் இந்தியாவிலிருந்து மீளத்தாயகம் திரும்பியவர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பயனாளிகளுக்கு 02 இலட்சம் ரூபா வீதம் தொழில் உபகரணங்களை வழங்கும் செயற்திட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 21.09.2023 மாலை 3.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் நல்லூா், யாழ்ப்பாணம் , வேலணை , நெடுந்தீவு, சாவகச்சேரி, உடுவில் ஆகிய பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 11 பயனாளிகளுக்கு ரூபா 02 இலட்சம் வீதம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
 
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தார்கள்
IOM 01  IOM 02  IOM 03  IOM 04  IOM 05  IOM 06  IOM 07  IOM 08 
சட்ட விரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல்  தொடர்பான கலந்துரையாடல்    கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் (15) காலை பத்து  மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
 
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோதமாக  கால்நடைகளை கடத்தல்  முதலானவற்றை கட்டுப்படுத்துதல் தொடர்பாக பிரதேச செயலாளர்கள், பொலிஸார், படைத்தரப்பினர், பொது சுகாதார பரிசோதகர்ளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
 
இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பாதுகாப்பு கட்டளைத்தளபதி, பிரதிப்  பொலிஸ்மா அதிபர், விசேட அதிரடிப்படை, சுகாதார சேவைகள் பணிப்பாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்,  பொறியியலாளர் புவிச்சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகம்,சிரேஷ்ட 
பொது சுகாதார பரிசோதகர்கள், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.
 
illegal activity 1 illegal activity 2

யாழ்ப்பாண மாவட்ட சுகாதார மேம்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 15.09.2023 பிற்பகல் 3.00.மணிக்கு யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில்,யாழ் மாவட்டத்தில் தற்போதைய டெங்கு நிலவரம் தொடர்பாகவும் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வரை 1829 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

மேலும், மழை ஆரம்பிப்பதற்கு முன்பாக டெங்குநோய் தொடர்பான விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்படுதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, செப் 18- செப் 22 ஆம் திகதிகளில் பிரதேச மட்டத்தில் டெங்கு தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டு விழிப்புணர்வு செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு செப் 25- ஒக் 06 ஆம் திகதி வரை டெங்கு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு சிரமதானப்பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டன.

பிரதேச ரீதியாக கொள்கலன்களை அப்புறப்படுத்தல் , பாடசாலைகளில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பிரதேச மட்டத்தில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக் கூட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன், பிராந்திய தொற்று நோய் தடுப்பு அதிகாரி தாரணி குருபரன் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், வைத்தியர்கள் , பிரதேச செயலாளர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை மற்றும் நகரசபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் துறை சாா் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

Health1  Health2  Health3  Health4

ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி Marc Andre Franche அவர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களுக்கும் இடையிலான யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பான விரிவான கலந்துரையாடல் 05.09.2023 காலை 9.45 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
 
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
un1   un2   un3   un4  un5