வட மாகாண சுற்றுலா அபிவிருத்தி திட்டம் தயாரித்தல் தொடர்பாக கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கிலான பயிற்சி பட்டறை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் ( 12.12.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக, வடமாகாண சுற்றுலாப் பணியகம் மாகாணத்திற்கான சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தினை வவுனியாப் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது இதனடிப்படையில் சுற்றுலாப் பணியகமும் தயாரிப்புக் குழுவும் மாவட்டம் தோறும் பயிற்சிப் பட்டறைகளை நடாத்தி அம் மாவட்டங்கள் தொடர்பான வளங்கள் சவால்கள் தொடர்பான உள்ளீடுகளைப் பெற்றுவருவதற்கு அமைவாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், யாழ் மாவட்டத்தினுடைய சுற்றுலாத்துறை பல்வேறுபட்ட சவால்களுக்கு மத்தியிலே அதனுடைய செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாகவும், அதன் அடிப்படையில், வட மாகாணத்திற்கான சுற்றுலா தொடர்பான அபிவிருத்தி திட்டம் ஒன்றினை தயாரிப்பதற்கு யாழ்ப்பாண மாவட்டம் மிக முக்கியமான சுற்றுலா மையமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், யாழ் மாவட்டத்தினுடைய சுற்றுலாவினை மேம்படுத்தும் வகையில் சிறந்த திட்டங்களை உருவாக்கி ஒழுங்குபடுத்தி, அதன் ஊடாக மாவட்டத்தினுடைய சுற்றுலாவினை மேம்படுத்துவதன் ஊடாக மக்களுடைய வாழ்க்கை தரத்தினையும், வாழ்வாதாரத்தினையும் அதிகரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும் எனவும் தெரிவித்தார். ஏனைய இடங்களில் இருந்து வருகின்றவர்களுக்கான ஒரு சிறப்பான ஒரு சுற்றுலா மையமாக யாழ் மாவட்டத்தினை மாற்றுவதற்கான ஒரு தந்திரோபாய திட்டத்தினை வகுக்கும் பயிற்சி பட்டறையாக இதனை பயன்படுத்த வேண்டும் எனவும், வட மாகாணத்திற்கான ஒரு சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தினை சிறந்த முறையில் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பயிற்சி பட்டறையின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், சுற்றுலாத்துறைக்கான 05 ஆண்டுத் திட்டங்கள் தயாரிக்கும் போது சமூகத்தின் பலதரப்பட்ட பங்குதாரர்கள் உள்ளடக்கி அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று தயாரிக்க வேண்டும் எனவும், இதன் மூலமே திட்டங்கள் வினைத்திறனாக அமையும் எனவும் தெரிவித்தார். மேலும் இன்றைய கலந்துரையாடலில் ஆராயப்பட்ட திட்டங்களை மாதிரித் திட்டங்களாக தயாரித்து, மீண்டும் பொருத்தமான பங்குதாரர்களுடன் சேர்ந்து ஆராய்ந்து இறுதி செய்வதே பொருத்தமாக அமையும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர கெளரவ முதல்வர், வடக்கு மாகாண சுற்றுலா பணியத்தின் தலைவர் திரு.அ. பத்திநாதன், வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளரா பேராசிரியர் திரு. நந்தகோபாலன் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சம்மிக்க லியனகே, உள்ளூராட்சி சபைகளின் கெளரவ தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர். மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உதவி மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், வடமாகாண சுற்றுலா பணியத்தினுடைய பணிப்பாளர், ஏனைய திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபையினுடைய செயலாளர்கள், யாழ் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களுடைய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 45 6 8
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ துரைராசா ரவிகரன் அவர்கள் இன்றைய தினம் (12.12.2025) மு. ப. 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக யாழ்ப்பாண மீனவர்களின் இன்றைய பேரணி மற்றும் கோரிக்கைகளை உரிய தரப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு அரசாங்க அதிபரைக் கேட்டுக்கொண்டார்.
 
 
1 2 3
மீள்1குடியேற்றம் மற்றும் மீள்இணைவிற்கான நிலைத்து நிற்கக்கூடிய நீடித்த உதவித்திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கு தேசிய தொழிற்தகைமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாவட்ட திறன் அபிவிருத்தி இணைப்பாளர் திரு. ரி. நீலாம்பரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (12.12.2025) மு. ப. 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், தொழில் தகைமைச் சான்றிதழ் மிக முக்கியமானது எனவும், தாம் கற்ற கல்வியுடன் ஒரு மாணவன் தேசிய தொழில் தகைமைச் சான்றிதழை கட்டம் கட்டமாக இறுதிவரை பூர்த்தி செய்தால் அச் சான்றிதழ் பட்டதாரிச் சான்றிதழுக்கு சமனாக அமையும் எனத் தெரிவித்தார். மேலும், இக் கற்கை நெறிமூலம் கற்றதைக் கொண்டு மேலும் ஆற்றலுடன், முன்னோக்கி முன்னேற்றம் அடைய வேண்டும் எனவும், போட்டி உலகில் போட்டித் தன்மையுடன் எதிர்காலத்தில் சிறக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கடந்த முறை கடற்றொழி்ல் படகு பயிற்சி 42 பேருக்கு வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அரசாங்க அதிபர் அவர்கள், திறமைகளை மேன்மேலும் வளர்த்து ஒளிமயமான வாழ்க்கை வாழ வாழ்த்துவதாக தெரிவித்தார். IOM நிறுவனத்தின் அனுசரனையில் தொழில் பயிற்சி அதிகார சபையினால், கணினி வன்பொருள் 01 பேரும், மர கைவினைப்பொருட்கள் 02 பேரும், இலத்திரனியல் 04 பேரும், தையல் 10 பேருமாக பயிற்சிகளை நிறைவு செய்த 17 பயிற்சியாளர்களுக்கு தொழிற் தகைமைச் சான்றிதழ் (NVQ level 111 & IV) அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, தொழில் பயிற்சி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் திரு. கே. நிறஞ்சன், IOM நிறுவன திட்ட இணைப்பாளர் திரு. எஸ். சுசிதரன் மற்றும் பிரதேச திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.
மீள்குடியேற்றம் மற்றும் மீள்இணைவிற்கான நிலைத்து நிற்கக்கூடிய நீடித்த உதவித்திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கு தேசிய தொழிற்தகைமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாவட்ட திறன் அபிவிருத்தி இணைப்பாளர் திரு. ரி. நீலாம்பரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (12.12.2025) மு. ப. 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், தொழில் தகைமைச் சான்றிதழ் மிக முக்கியமானது எனவும், தாம் கற்ற கல்வியுடன் ஒரு மாணவன் தேசிய தொழில் தகைமைச் சான்றிதழை கட்டம் கட்டமாக இறுதிவரை பூர்த்தி செய்தால் அச் சான்றிதழ் பட்டதாரிச் சான்றிதழுக்கு சமனாக அமையும் எனத் தெரிவித்தார். மேலும், இக் கற்கை நெறிமூலம் கற்றதைக் கொண்டு மேலும் ஆற்றலுடன், முன்னோக்கி முன்னேற்றம் அடைய வேண்டும் எனவும், போட்டி உலகில் போட்டித் தன்மையுடன் எதிர்காலத்தில் சிறக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கடந்த முறை கடற்றொழி்ல் படகு பயிற்சி 42 பேருக்கு வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அரசாங்க அதிபர் அவர்கள், திறமைகளை மேன்மேலும் வளர்த்து ஒளிமயமான வாழ்க்கை வாழ வாழ்த்துவதாக தெரிவித்தார். IOM நிறுவனத்தின் அனுசரனையில் தொழில் பயிற்சி அதிகார சபையினால், கணினி வன்பொருள் 01 பேரும், மர கைவினைப்பொருட்கள் 02 பேரும், இலத்திரனியல் 04 பேரும், தையல் 10 பேருமாக பயிற்சிகளை நிறைவு செய்த 17 பயிற்சியாளர்களுக்கு தொழிற் தகைமைச் சான்றிதழ் (NVQ level 111 & IV) அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, தொழில் பயிற்சி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் திரு. கே. நிறஞ்சன், IOM நிறுவன திட்ட இணைப்பாளர் திரு. எஸ். சுசிதரன் மற்றும் பிரதேச திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.
 
1.jpg 2 3 4 5 6 7 8 9 10
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி இன்றைய தினம் (12.12.2025) யாழ்ப்பாண மீனவர்கள் ஒன்றிணைந்து பண்ணை பகுதியில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அலுவலகத்தின் முன்னால் இருந்து பேரணியாக ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்துடன், அதிமேதகு சனாதிபதி அவர்களுக்கான மகஜர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், மீனவர்களின் நியாயபூர்வமான கோரிக்கையினை அதிமேதகு சனாதிபதி அவர்களின் கவனத்திற்கும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
 
1 2 3 4 5
12025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை 2026 ஆண்டு அமுலாக்குவது தொடர்பான சாத்திய நிலைமைகள் அவற்றின் நிலையான தன்மை போன்றவை தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (11.12.2025) பி.ப 02.00 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளாக காரைநகர் ஊர்காவற்றை மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலப் பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 9 செயற்றிட்டங்கள் சுற்றுலா அமைச்சிற்கு மாவட்டச் செயலகத்தால் பிரேரிக்கப்பட்டு, அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்டிருந்த பொழுதிலும், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிதியின் மூலமே இதற்கான நிதி விடுவிப்பு வழங்கப்படவுள்ளதனால், இத் திட்டங்களின் அமுலாக்கலின் சாத்திய நிலைமைகள் மற்றும் நிலையான தன்மை போன்றவை தொடர்பாக இக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இத் திட்டங்களுக்காக 130 மில்லியன் ரூபா நிதி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாவிகளை கவரும் வகையில் மேலும் யாழ்ப்பாணத்தின் சுற்றுலா இடங்களை மேலும் மெருகூட்ட வேண்டும் எனவும், திட்டங்கள் நிலைத்திருக்கக்கூடியவகையில் அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், திட்டங்களின் சாத்தியப்பாடுகளுடன் வினைத்திறனாக நிறைவேற்ற வேண்டும் எனவும், மக்களின் வரிப்பணத்தில் அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதால், சரியான வினைத்திறனான திட்டங்களை அனைவரும் ஒருங்கிணைந்த வகையில் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், திட்டங்களை அமுல்படுத்திய பின்னர் அதனை சரியான முறையில் பாராமரிப்பதனையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்கள்இ எமது பிரதேசம் சுற்றுலாத்துறையில் தென்பகுதியை விட பின் தங்கியுள்ளதாகவும், யாழ்ப்பாண சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு அரசியல் பேதமின்றி அனைவரும் கருத்து ஒற்றுமையுடன் திட்டங்களை அடையாளம் கண்டு செயற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், எமது அரசாங்கம் அடிப்படை உட்கட்டுமான அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் எனவும், முதலீட்டாளர்களை ஈர்க்கவல்ல திட்டங்களை இனங்கான வேண்டும் எனவும், குறிப்பாக இயற்கையோடு இணைந்த வகையிலான திட்டங்களை முன்னேடுக்குமாறும் அத் திட்டங்களேயே வெளிநாட்டவர்கள் அதிகம் விரும்புவார்கள் எனவும் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் தெல்லிப்பளை, காரைநகர் மற்றும் ஊர்காவற்றுறை கெளரவ தவிசாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினருமான கெளரவ எஸ். கபிலன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ. சுரேந்திரநாதன், தெல்லிப்பளை, காரைநகர், மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7