Nallur kandaswamy Temple
Nallur Temple
Jaffna District Secretariat
Jaffna Tourism Places
78வது சுதந்திர தின மாவட்ட நிகழ்வு - 2025
சுற்றுலா வழிகாட்டி நூல்
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா - 2025
60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியீடு

அரசாங்க அதிபர் / மாவட்ட செயலாளர்

GA Piiratheepan

 

திரு.ம.பிரதீபன்  

  18                                                                                                                                                                                    வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், கௌரவ விருந்தினராக “கலைக்குரிசில்” திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கவிஞரும் மூத்த நாடகவியலாளருமான திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்கள் பங்கேற்றார். இவ்வாண்டின் பண்பாட்டுப் பெருவிழா “மாவைப் பண்டிதர்” அமரர் க. சச்சிதானந்தன் அரங்கு (மாவிட்டபுரம்) எனும் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள், தனது உரையில், ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனத் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பாரம்பரிய கலை வடிவங்கள் படிப்படியாக சுருக்கப்பட்டு இலத்திரனியல் வடிவங்களுக்கு மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அவற்றின் அசல் தன்மையையும் பாரம்பரிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.see more....

Events

News

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மத்தியிலும் பாரம்பரிய கலைகளைப் பாதுகாப்பது அவசியம் – அரசாங்க அதிபர்

06 செப்டம்பர் 2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம...

துல்லியமான தரவுகளே சிறந்த தீர்மானங்களுக்கு அடிப்படை – விவசாயத் தொகைமதிப்பு தொழில்நுட்ப உத்தியோகத்தர்களிடம் அரசாங்க அதிபர் வலியுறுத்தல்

06 செப்டம்பர் 2026

விவசாயத் தொகைமதிப்பு நடவடிக்கைகளுக்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான (Tablet Technical Officers) ஒரு நாள் பயிற்சி நெறி மாவட்ட புள்ளிவிபரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திரு. எம். வித்தியானந்தனேசன் அவர்கள் தலைமையில், இன்றைய தினம் (04.09.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தொகைமதிப்பு ஆணையாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்...

யாழ்ப்பாணத்தின் புத்தாக்க ஆற்றல்களுக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

06 செப்டம்பர் 2026

யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு பிராந்திய புத்தாக்கச் சூழலமைப்பை (Regional Innovation Ecosystem) வலுப்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் இலங்கை தேசிய புத்தாக்க முகவராண்மையும் (NIA) இணைந்து ஏற்பாடு செய்த திறந்த கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில், இன்றைய தினம் (04.09.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்தில் காணப்படும்...

காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் வருடாந்த விளையாட்டு விழா – 2026

04 செப்டம்பர் 2026

காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா இன்று (03.09.2026) வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு காரை சலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. காரைநகர் பிரதேச செயலாளர் செல்வி நவரத்தினம் ரஞ்சனா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின்...

யாழ். மாவட்ட செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம்

04 செப்டம்பர் 2026

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (01.09.2026) காலை 9.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, அலுவலகக் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் 30.08.2026 அன்று உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மின்சார விபத்தில் உயிரிழந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்...

சிறுபோக நெல் கொள்வனவுக்கு ரூ.25 மில்லியன் வரை வட்டியில்லா கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை - அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

01 செப்டம்பர் 2026

2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக (யல பருவகால) நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்கான துரித வேலைத்திட்டம் தொடர்பாக,நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் ஆலைகளை இயக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினருடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் ( 31.08.2026) காலை 09.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், 2026 யல...

தொழில் சந்தைக்கான இணையவழிப் பதிவுகளை பின்வரும் இணைப்பின் ஊடாக மேற்கொள்ளலாம் – அரசாங்க அதிபர் கோரிக்கை

31 ஆகஸ்ட் 2026

தொழில் சந்தைக்கான இணையவழிப் பதிவுகளை பின்வரும் இணைப்பின் ஊடாக மேற்கொள்ளலாம் – அரசாங்க அதிபர் கோரிக்கை https://docs.google.com/.../1FAIpQLSfnCnmUWsz6uI.../viewform யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள தொழில் சந்தையில் கலந்துகொள்ள விரும்பும் தொழில் நாடும் இளைஞர், யுவதிகள், தங்களது பதிவுகளை மேலே வழங்கப்பட்டுள்ள இணையவழி இணைப்பின் ஊடாகவும் மேற்கொள்ள முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, தொழில் வாய்ப்புகளை நாடும் இளைஞர், யுவதிகள் இந்த...

தொழில் சந்தைக்கான இணையவழிப் பதிவுகளை பின்வரும் இணைப்பின் ஊடாக மேற்கொள்ளலாம் – அரசாங்க அதிபர் கோரிக்கை

31 ஆகஸ்ட் 2026

தொழில் சந்தைக்கான இணையவழிப் பதிவுகளை பின்வரும் இணைப்பின் ஊடாக மேற்கொள்ளலாம் – அரசாங்க அதிபர் கோரிக்கை https://docs.google.com/.../1FAIpQLSfnCnmUWsz6uI.../viewform யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள தொழில் சந்தையில் கலந்துகொள்ள விரும்பும் தொழில் நாடும் இளைஞர், யுவதிகள், தங்களது பதிவுகளை மேலே வழங்கப்பட்டுள்ள இணையவழி இணைப்பின் ஊடாகவும் மேற்கொள்ள முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, தொழில் வாய்ப்புகளை நாடும் இளைஞர், யுவதிகள் இந்த...

தொழில் நாடும் இளைஞர்கள் யுவதிகளுக்கானதொழிற்சந்தை : இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணையவழி இணைப்பிலும் பதிவுகள் மேற்கொள்ள முடியும் என அரசாங்க அதிபர் கோரிக்கை :

31 ஆகஸ்ட் 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகளை நாடும் இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்சந்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளது என அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்தார். இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் இன்று (28.08.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, தொழிற்சந்தையை சிறப்பாக நடத்துவதற்கான ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு...

மூத்த வயதிலும் கல்வியையும், நூல் வெளியீட்டுப் பணியையும் தொடரும் கலாநிதி நா. தணிகாசலம்பிள்ளை அவர்கள் பாராட்டுக்குரியவர் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்

31 ஆகஸ்ட் 2026

மூத்த வயதிலும் கல்வியையும், நூல் வெளியீட்டுப் பணியையும் தொடரும் கலாநிதி நா. தணிகாசலம்பிள்ளை அவர்கள் பாராட்டுக்குரியவர் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளரும் மத்திய கல்வி அமைச்சின் கல்வி அபிவிருத்தி ஆலோசகருமான கலாநிதி நா. தணிகாசலம் பிள்ளை அவர்கள் எழுதிய “குழந்தமைக் கல்வியும் ஆரம்பக் கல்விச் செயற்பாடுகளும்” மற்றும் “புலம்பெயர் நாடுகளில் இலகுதமிழ்” எனும் “இருநூல்கள் வெளியீட்டு விழா 26.08.2026 அன்று யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின்...

« »

Manthri Manai
 manthiri manai
Manthri Manai stands majestically in Nallur and reveals us about the past history of Nallur. It is situated about 900m, north to Nallur temple and about 90m, north to Chankilliantoppu and on the left of the Point Pedro road. This is the site where the Royal administrative activities of Kings of Nallur took place earlier. To confirm the fact that there are evidences of ruins within this building attached belonging to the Kingdom of Jaffna and the architecture and the wooden structures with beautiful monuments and its designs and decorations reflect a particular art of tradition prevailed at the period.
 
  • Government Gazette No & Date 1486 2007-02-23
  • G.N division:- J/107, Nallur Rajathani
  • Distance from Nallur Kanthaswamy Kovil :- 0.9 km
Sangillian Thorana Vasal (Court Entrance)
sangili thorana
This is the only evidence still in site that has to be considered as the remaining of the Jaffna Kingdom, Nallur. It is located at a few yards towards the North from Muthirai Santhi junction. The entrance of structure has some special architectural features regarding its period of origin. Some say it is the main entrance of the Palace of King of Sangillian. But some of others say it is a monument of slavery life of Jaffna people. However it is seen as monument of the foreign dominant in Jaffna.
 
  • Government Gazette No & Date 1486 2007-02-23
  • G.N division:- J/109, Sangilian Thoppu
  • Distance from Nallur Kanthaswamy Kovil 0.7 km
Sangillian Thoppu
 
sangili thoppu
This is an important evidence of the remaining of Nallur Rajadhani located in the East side of Point Pedro road in Nallur. The ruins of this belong to Portuguese parish school and Christian school of Dutch period. The buildings exist in here were built in small by woods and sand. According to the research done by Dr. P. Raguphathy some vessels made of sand belonging to the period of 10th and 13thcentuary were indentified. later in 1984 the above ruins were reconstructed and are being protected by Archeological Department at present.
 
  • Government Gazette No & Date 1739 2011-12-30
  • G.N division:- J/109, Sangilian Thoppu
  • Distance from Nallur Kanthaswamy Kovil 2.1 km
 
Yamuna Aeri
 yamuna aeri
Yamuna Aeri is considered as one of the significant remaining of Nallur Kingdom and it is situated to East of stone entrance of Changillian Toppu and some distance for the present Christian Church. It is said the former Kings built underground tunnel at this pond for their defense. It is said one of such tunnels was connected to “Manthiri Manai”. There is no wonder that the former Kings of Jaffna built tunnels for their defense as they did not have any natural defense in their region. The discovery of the bricks, decorated pillars made of lime stone and Potteries around this area are suggesting that there might have been a building complex in and around of this area in the past.
 
  • Government Gazette No & Date 9886 1948-07-16
  • G.N division:- J/109, Sangilian Thoppu
  • Distance from Nallur Kanthaswamy Kovil -1.9 km