அரசாங்க அதிபர் / மாவட்ட செயலாளர்

திரு.ம.பிரதீபன்
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், கௌரவ விருந்தினராக “கலைக்குரிசில்” திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கவிஞரும் மூத்த நாடகவியலாளருமான திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்கள் பங்கேற்றார். இவ்வாண்டின் பண்பாட்டுப் பெருவிழா “மாவைப் பண்டிதர்” அமரர் க. சச்சிதானந்தன் அரங்கு (மாவிட்டபுரம்) எனும் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள், தனது உரையில், ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனத் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பாரம்பரிய கலை வடிவங்கள் படிப்படியாக சுருக்கப்பட்டு இலத்திரனியல் வடிவங்களுக்கு மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அவற்றின் அசல் தன்மையையும் பாரம்பரிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.see more....Events
News
அரசு சேவை மையங்கள்
|
யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் ஆரம்பகட்ட செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் 2020 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு தேசியக் கொடி ஏற்றலுடன் காலை 9.30 (புதன் கிழமை) மணிக்கு ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் "வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம்" என்னும் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்ச தொலைநோக்கத்தின் கீழ் மாவட்ட செயலகத்தில் மரங்கள் நடுகின்ற நிகழ்வு நடைபெற்றதோடு மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்கள்.
|













31.10.2019 ம் திகதிய உதயன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 2020 ம் ஆண்டிற்கான ஒப்பந்தகாரர் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்தல் சம்பந்தமான அறிவித்தலில் தெரிவிக்கப்பட்ட பதிவிற்கான இறுதித் திகதி 24.12.2019 ம் திகதி வரை காலநீட்டிப்புச்