img10.jpgயாழ் மாவட்டத்தில் தற்போதைய அனர்த்தத்தினை  மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட கோரோணா ஒழிப்பு செயலணி கூட்டம் இடம்பெற்றது கூட்ட நிறைவில் கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்கஅதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் தொடர்பாடலும் ஊடக கற்கையும் பாடநெறியினை கற்றுக்கொண்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கான வெகுசன ஊடக செயலமர்வு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று ( 02.10.2020)  இடம்பெற்றது.ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் குறித்த செயலமர்வு இடம்பெற்றது.

img6.jpgகிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு நேற்று (14.09.2020) மாலை விஜயம் செய்து மீள்குடியேற்றம் மற்றும் வீடமைப்பு திட்ட தொடர்பிலான விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

img3மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் ஊடக கற்கை நெறியை கற்று வருகின்ற சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கருத்தமர்வு ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் 02.10.2020 அன்று இடம்பெற்றது.ஊடக கற்கை நெறியை மேம்படுத்தும் நோக்கில் மாணவர்களுக்கு குறித்த செயலமர்வு இடம்பெற்றது. இதில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்களை ஊடகத்துறை அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல,  தபால்‌ சேவைகள்‌ மற்றும்‌ வெகுசன ஊடக, தொழில்‌ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும்,  யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன்,அமைச்சுக்களின் செயலாளர்கள்,மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட குழுவினர்,  14.09.2020 அன்று வடக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.