
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறுபட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை தொகுத்து வெளிவரும் "யாழ்.மாவட்டச் செயலக மடல்-2020" மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (25.11.2021) அன்று மாவட்டச் செயலகத்தில் வெளியீடு செய்யப்பட்டது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் "சுரகிமு கங்கா" சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் 26.11.2021 அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும், யாழ்.சமூக செயற்பாட்டு மையமும் இணைந்து UNHCR இன் நிதி அனுசரணையுடன் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் " பெண்களுக்கெதிரான வன்முறையை இப்போதே நிறுத்துவோம்" எனும் தொனிப்பொருளில் பால்நிலை வன்முறைக்கு எதிரான பதினாறுநாள் செயற்திட்டத்தின் (கார்த்திகை 25-மார்கழி10) ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (2021.11.25) காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் மதுசாரம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள் தடுப்பு தொடர்பில் யாழ்.மாவட்டத்தின் பங்களிப்பு தொடர்பான மாநாடு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (25.11.2021) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்திற்கான இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அப்தூர் ராகிம் சிட்டுஹி அவர்களும் அவரின் அதிகாரிகளும் யாழ்மாவட்ட செயலகத்திற்கு 23.11.2021 அன்று விஜயம் செய்து மாவட்ட அரசாங்க அதிபர் திரு கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பை மேற்கொண்டனர்.






