சங்கானை பிரதேச செயலர் பிரிவில் சதுப்புநில மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கண்டல் தாவரங்கள் (Mangroves) நடுகை செய்யும் திட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு இன்றைய தினம் (20.05.2026) நடைபெற்றது. குறித்த ஆரம்ப நிகழ்வு சங்கானை பிரதேச செயலாளர் திருமதி. கவிதா உதயகுமார் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற்ற இந் நிகழ்வில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு குறித்த செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், Child Fund நிறுவனத்தின் அனுசரணையோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் தன்னுடைய சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகளை மிக சிறப்பாக மேற்கொண்டுவரும் Save a life நிறுவனத்திற்கு அரசாங்க அதிபர் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டதுடன், இந்தப் பிரதேசத்தில் கண்டல் தாவர வளர்ப்பு தொடர்பான செயற்பாடுகளை ஆரம்பித்து மேற்கொண்டுவரும் பொதுமக்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார். மேலும், கண்டல் தாவரத்தின் விதைகள் வழங்கப்பட்டு தாவரங்களின் உற்பத்தி ஊடாக ஒரு வருமானத்தை பெறக்கூடிய வழியினை இந்த நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இதே வேளை கண்டால் தாவரங்களை கடற்கரை ஓரங்களில் நடுகின்ற போது பருவ சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க முடியும் என்பதுடன், கண்டல் தாவரங்களை சரியான முறையில் வளர்ப்பதன் மூலம் அப்பிரதேசத்தினுடைய வளர்ச்சியை மேம்படுத்தி ஒரு சுற்றுலா சார்ந்த தளமாகவும் மாற்ற முடியும் எனவும், பொதுமக்கள் கண்டல் தாவரங்களை தங்களுடைய பிரதேசங்களில் வளர்க்கின்ற போது அதற்கான உதவித் திட்டங்களை வழங்குவதற்கும் இவ் நிறுவனங்கள் தயாராக உள்ளனர் எனவும் தெரிவித்தார். மேலும், இவ்வாறான நிறுவனங்கள் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் ஊடாக வாழ்வாதார திட்டங்களை வழங்குகின்ற போது சிறிய பிள்ளைகளுடைய வளர்ச்சியிலும் மற்றும் அவர்களின் கல்வியிலும் அக்கறை காட்டி உதவிகளை வழங்குகிறார்கள். மேலும், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தில் நல்ல முறையில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்றால் அவர்களுக்கு பெற்றோர்கள் சிறந்த கல்வியை வழங்க வேண்டு எனவும், இதற்காக பல்வேறுபட்ட வாழ்வாதார உதவிகளை நிறுவனங்கள் வழங்குகின்றன எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
சங்கானை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் திட்ட அறிமுகக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, அராலி கடற்கரையோரத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கண்டல் தாவரத்தினை நாட்டி வைத்து குறித்த செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்தார். பசுமையான கடற்கரை, வலுவான சமூகங்கள் மற்றும் வருங்கால சந்ததியினருக்கான நிலையான எதிர்காலத்திற்காக நாம் ஒன்றிணையும் இந் நிகழ்வில் ChildFund நிறுவனத்தின் நாட்டு பணிப்பாளர் Aditi Ghosh, Child Fund நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் திரு. R.தவசீலன், Save a Life நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.கே. ராகுலன், வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன், சங்கானை பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள், அராலி கிராம மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (19.05.2026) மு.ப 11.30 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், சுற்றாடல் குழு கூட்டம் வினைத்திறனாக நடைபெறுமாக இருந்தால் மாவட்டத்தில் இருக்கின்ற பல சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளை தீர்வுக்கு கொண்டு வர முடியும் என்றும், இக் கூட்டத்தை வினைத்திறனாகக் கொண்டு நடாத்துகின்ற பொறுப்பு கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரையும் சார்ந்து நிற்கும் என்றும் தெரிவித்தார். மேலும், சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விடயங்களை முழுமையாக கவனம் எடுத்து ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக நடவடிக்கை எடுப்போமாக இருந்தால் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பெரும் பங்காக இருக்கும் எனவும் தெரிவித்ததோடு மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை கெளரவ முதல்வர் மற்றும் கௌரவ தவிசாளர்கள் பொறுப்பேற்றதன் பின்னர் கழிவு முகாமைத்துவத்தை அவர்களின் கொள்ளளவுக்கு ஏற்ற வகையில் சிறப்பாக மேற்கொள்வதாக கூறி அவர்களுக்கு நன்றிகளை அரசாங்க அதிபர் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், அரச நிறுவனங்கள் கழிவு முகாமைத்துவத்தை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும்,
மாவட்ட மட்டத்தில் இருக்கும் உள்ளூர் அதிகார சபைகள் கழிவு முகாமைத்துவம் மட்டுமின்றி சுற்றாடல் சார்ந்த, சூழல் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும், அடுத்த சுற்றாடல் குழு கூட்டத்தினை ஜூலை இறுதி வாரத்தில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அக் கூட்டத்தில் ஆக்கபூர்வமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக, பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி அதிகார சபை கௌரவ தவிசாளர்கள் ஆகியோர் தங்களுடைய சுற்றாடல் குழு கூட்ட முன்மொழிவுகளை மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் பின்வரும் விடயங்கள் பிரதானமாக கலந்துரையாடப்பட்டன.வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பாவிக்கப்படும் ஒலிபெருக்கிகள் அனுமதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் மீறி பொதுமக்களுக்கு குறிப்பாக மாணவர்கள், நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பெரும் ஒலி எழுப்பப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், அதிக ஒலி எழுப்பப்பட்டால் கிராம அலுவலர் ஊடாக அதனை கட்டுப்படுத்தும் பொறுப்பினை பிரதேச செயலாளர்கள் ஏற்க்க வேண்டும் எனவும், மீறுவோர்கள் மீது கிராம அலுவலர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியதுடன், வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும், பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் மூலம் தெரியப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனைகளை கட்டுப்படுத்தல், குப்பைகளை எரிவூட்டுவதனால் வளி மாசடைதல் மற்றும் வாணவேடிக்கைகளைல் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், பொது மக்களுக்கு உரிய விழிப்புணர்வுகளை வழங்க நடவடிக்கைகள் எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.இக் கலந்துரையாடலில் மாநகர கெளரவ பிரதி முதல்வர், கெளரவ தவிசாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.எஸ்.சிவகுமாரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை வைத்திய அதிகாரி, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உதவி ஆணையாளர், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அகழ்வுப் பொறியியலாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

யாழ். மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(19.05.2026) மு.ப 10.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச மற்றும் பாரம்பரியமாக வைத்தியம் செய்பவர்களாக பதிவு செய்யப்பட்ட 90 சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் கடமையாற்றுவதாகவும், நெடுந்தீவில் நிரந்தரமாக வைத்தியர் இல்லை எனவும், மருதங்கேணியில் ஒருவரும், காரைநகரில் ஒருவரும், அதேவேளை நல்லூர் பிரதேச செயலக பிரிவில் அதிகபட்சமாக அரச பாரம்பரிய வைத்தியர்களாக 27 வைத்தியர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், சித்த ஆயுர்வேத வைத்திய முறைகள் மீதான உலகளாவிய நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த மக்கள் நாட்டிற்கு வருகை தரும் நிலை அதிகரித்துள்ளது எனவும், மேலும் சங்கீதம், பரதநாட்டியம் உட்பட்ட கலைகளில் நாம் கொடிகட்டிப் பறந்ததாகவும், தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் எம்மவர்கள் இக் கலைகளில் ஆர்வம் காட்டி கலைகளை வளர்த்துவருவதாகவும், புலம்பெயர்ந்த மக்கள் தமது பாரம்பரிய மருத்துவம் மற்றும் கலைகளில் காட்டிவரும் அக்கறை மகிழ்ச்சியளிப்பதாகவும்தெரிவித்தார். மேலும், சித்த ஆயுர்வேதம் நீண்டகாலத்தில் நோய்களை குணப்படுத்தும் என்றாலும், உள்ளார்ந்த ரீதியாக ஆர்வத்தோடு மக்கள் மருத்துவ சேவையினை நாடுவதாகவும் தெரிவித்ததுடன், 12 பிரதேச செயலகங்களில் பிரதேச ஆயுர்வேத பாதுகாப்புச் சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்புச் சபை இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படுவது மகிழ்ச்சியான விடயம் எனவும், யாப்பில் சங்கத்தின் நோக்கம், கடமைகள் விபரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்புச் சபை” அமைப்பதன் நோக்கமானது நமது பாரம்பரிய மருத்துவ மரபையும், மக்களின் ஆரோக்கிய பாதுகாப்பையும், இயற்கை சார்ந்த வாழ்வியலையும் காக்கும் ஒரு பொறுப்புணர்வான சமூக முயற்சியாக காணப்படுகின்றது. மேலும், சுதேச மருத்துவம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களின் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனைக் காக்கும் பாரம்பரிய அறிவுக் களஞ்சியமாக இருக்கின்றது. இயற்கை மூலிகைகள், உணவு ஒழுங்கு, உடல் சமநிலை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை முன்னிறுத்தும் இந்த மருத்துவ முறை, இன்று உலகளவில் மீண்டும் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், மாவட்ட மட்டத்தில் ஒரு பாதுகாப்புச் சபையை அமைப்பது மூலம் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தப்படும்.
1.ஆயுள்வேத மரபுகளைப் பாதுகாத்தல்.
2.தரமான சிகிச்சை சேவைகளை ஊக்குவித்தல்.
3.பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல்.
4.போலியான மற்றும் தரமற்ற மருந்துகள் குறித்து கண்காணித்தல்.
5.மூலிகை வளங்களை பாதுகாத்து வளர்த்தல் போன்ற முக்கிய பணிகளை ஒருங்கிணைத்தல்.
6.இந்த சபை அரச உத்தியோகத்தர்கள், மருத்துவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கிடையே ஒரு பாலமாக ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க உதவும்.
இறுதியாக மாவட்டச் சபையின் தலைவராக கைதடி சித்த போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் பா.பிரபாகரன் அவர்களும், செயலாளராக டாக்டர் இ. தில்லைவாசன் அவர்களும், பொருளாளராக டாக்டர் இ.கஜன் அவர்களும், உப தலைவராக டாக்டர் T.சபேசன் அவர்களும் மற்றும் 12 நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள். இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி ஆயுர்வேத வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் K.நடேசராஜன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, சுதேச மருத்துவ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.செ.சுகுணன், பிரதேச செயலாளர்கள், பிரதேச ஆயுர்வேத பாதுகாப்புச் சபை வைத்தியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.