பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை நடாத்தும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் சிற்றூர்தி உரிமையாளர்களுடான கலந்துரையாடலானது அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16.01.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
1.கொழும்புத்துறையிலிருந்து யாழ்ப்பாண நகருக்கு வரும் பாடசாலை மாணவர்களுக்கான இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் சிற்றூர்தியின் நேர ஒழுங்குகள் சீர் செய்யப்பட்டது.
2.மருதங்கேணி கட்டைக்காட்டிலிருந்து உடுத்துறைக்கு வரும் பாடசாலை மாணவர்களுக்கான இலங்கைப் போக்குவரத்து சபையின் பேரூந்துச் சேவை மற்றும் உசன் கெற்பெலி பகுதிகளிலிருந்து சாவகச்சேரி நகருக்கு வரும் பாடசாலை மாணவர்களுக்கான இலங்கைப் போக்குவரத்து சபையின் பேரூந்துச் சேவைகள் தொடர்பாக பாடசாலை மாணவர்களின் பாடசாலை நேரத்திற்கு அமைவாக நேர ஒழுங்குகள் சீர்செய்யப்பட்டுள்ளது.
3.அச்சுவேலி இராசபாதை ஊடாக யாழ்ப்பாண நகருக்கு வரும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரூந்தில் பாடசாலை மாணவர்களுக்கான இடையூறு ஏற்படாதவகையில் பேரூந்து சேவை நடைபெறுவதனை சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களைக் கொண்டு உறுதிசெய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர், இலங்கை போக்குவரத்துச் சபையின் முகாமையாளர் மற்றும் சாலை முகாமையாளர், தனியார் சிற்றூர்தியின் சங்கத் தலைவர் மற்றும் உரிமையாளர்கள், சிறுவர் மேம்பாட்டு மாவட்ட இணைப்பாளர் மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


யாழ்ப்பாண மாவட்டச் செயலக வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு (15.01.2024) காலை 08.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக முன்றலில் மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க.ஸ்ரீமோகனன் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

யாழ் மாவட்ட செயலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வும் " Clean Sri Lanka " பிரசைகள் சத்தியப் பிரமாணம் எடுத்தல் நிகழ்வும்
மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2025.01.01) காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகம் முன்றலில் நடைபெற்றது.
Clean Sri Lanka திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (2025.01.09) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பி.ப 01.00 மணிக்கு நடைபெற்றது.
இந் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், 2025 ஆம் ஆண்டு அறிமுகத்துடன் - தேசிய நிகழ்ச்சித் திட்டமானது டியிற்றல் மயப்படுத்தல், வறுமை ஒழித்தல் மற்றும் க்ளீன் ஸ்ரீலங்கா என வகைப்படுத்தப்பட்டு முக்கியத்துவம் பெறுகின்றது எனவும், "செழுமையான நாடு - அழகான வாழ்க்கை" என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கமைய, அரசாங்க உத்தியோகத்தர்கள் அனைவரும் பொது மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் வினைத்திறனாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இவ் விழிப்புணர்வு நிகழ்வில், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் செல்வி சாரதாஞ்சலி மனோகரன் அவர்கள் கலந்து கொண்டு "க்ளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் நோக்கம் மற்றும் மாற்றங்களை உருவாக்குதல் தொடர்பாக விளக்கமளித்தார். மேலும், சிரேஷ்ட உதவிச் செயலாளர் தெரிவிக்கையில், தனிமனித மனப்பாங்கிலிருந்து மாற்றம் வரவேண்டும் எனவும், அதற்கான விழிப்புணர்வு களை ஏற்படுத்த வேண்டும் எனவும், சிறிய சிறிய மாற்றங்கள் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார். மேலும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது "க்ளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத் திட்ட நிகழ்வில் எடுத்துக் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியதுடன்,
ஏனைய உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுகளை சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் எதிர்வரும் 22.01.2025 ஆம் திகதிக்கு முன்னர் நடாத்தி முடிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இந் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட மாவட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் கிளைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்கள், கணக்காளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக் கழகம் நடாத்தும் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும் உதவி மாவட்ட செயலாளருமான செல்வி உ.தர்சினி அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் 30.12.2024 ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப 04.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் உத்தியோகத்தர்களின் - புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகள், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற பிள்ளைகள் மற்றும் உயர்தரத்தில் சிறப்புச் சித்தி பெற்று பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகள் கெளரவிக்கப்பட்டார்கள்.
இந் நிகழ்வில் உத்தியோகத்தர்களுக்கிடையிலான போட்டிகள், உத்தியோகத்தர்களின் கவிதை மற்றும் பாடல் இசை நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.








