மாலைதீவில் 18.06.2026 ஆம் திகதி தொடக்கம் 20.06.2026 ஆம் திகதி வரை நடைபெற்ற South Asia Speed Skating Championship (ஸ்கேற்றிங் விரைவோட்டம்) போட்டியில் Dreamer United Sports Academy சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து ஒரே ஒரு மாணவியாக சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் ஆண்டு 09 இல் கல்வி கற்கும் மாணவி செல்வி ஷாருதி தர்மரூபன் அவர்கள் பங்குபற்றியிருந்தார். மாலைதீவில் நடைபெற்ற 2026 வேக ஸ்கேற்றிங் சாம்பியன்ஷிப் போட்டியில், Dreamers United Sports Academy சார்பில் பங்கேற்ற மாணவி செல்வி சாருதி இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று பெருமை சேர்த்துள்ளார்.100 மீட்டர் சாலைப் போட்டி மற்றும் 500 மீட்டர் சாலைப் போட்டிகளில் இரண்டாம் இடத்தையும், 500 மீட்டர் தடகளப் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனையொட்டி இன்றைய தினம் (26.06.2026) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை மாணவி சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார் மேலும் அரசாங்க அதிபர் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பெருமையை தேடிதந்தமைக்காக தனது மகிழ்ச்சியினைத் தெரிவித்ததுடன், போட்டியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றமைக்கு தமது வாழ்த்துக்களையும் மாணவிக்கு தெரிவித்துக்கொண்டதோடு பரிசிலும் வழங்கி கெளரவித்தார். இச் சந்திப்பில் தென்மராட்சி வலய கல்விப் பணிப்பாளர் திரு. கிரிஸ்தோபர் கமல்ராஜன், விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. எல். அநுரகாந்தன், டிறிபேக் கல்லூரி ஆசிரியர்களான திரு. எஸ்.ஜெபநேசன், கு.ராஜதீபன்,மாணவியின் தாயார் திருமதி சிவசங்கரி தர்மரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4