15 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 15 இளங்கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கௌரவிப்பு யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (23.10.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கலை, இலக்கியம், கூத்து, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமது சிறந்த பங்களிப்பை வழங்கிய யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேசச் செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு ‘இளங்கலைஞர் விருது’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இளங்கலைஞர் விருது பெற்றவர்கள் மற்றும் அவர்களின் விபரங்கள் பின்வருமாறு:
1. ஊர்காவற்றுறை – திரு. சிவந்தன் தாரணி – நாடகம்
2. உடுவில் – திரு. குகேந்திரன் அனுஷன் – இசை
3. காரைநகர் – செல்வி தர்மலிங்கம் யஜந்தினி – நடனம்
4. வேலணை – திரு. பத்மநாதன் குகராஜ் – வாத்தியக்கலை
5. தெல்லிப்பழை – திரு. பிரான்சிஸ் சகாயநாதன் அன்ரனிறோய் – வாத்தியக்கலை
6. நெடுந்தீவு – திரு. ஜோன் லாசரஸ் – கூத்து
7. கோப்பாய் – திருமதி. ஹவிக்குமார் சித்திரா – இசை
8. சண்டிலிப்பாய் – திருமதி. கங்கைகோபாலன் செல்வப்பிரியா – நடனம்
9. யாழ்ப்பாணம் – திரு. காராளசிங்கம் சுரேன் – நாடகம்
10. சங்கானை – திரு. தவபாலசிங்கம் துலக்க்ஷன் – நாடகம்
11. சாவகச்சேரி – திரு. சிறி விஜயகாந் யதுர்ஷன் – வாத்தியக்கலை
12. கரவெட்டி – திரு. மதியூகநாதன் மனுசங்கர் – வாத்தியக்கலை
13. நல்லூர் – திரு. மனோகரன் கஜகிருஷ்னா – நாடகம்
14. பருத்தித்துறை – திரு. மதுஷன் கார்த்திகா – நடனம்
15. மருதங்கேணி – திரு. தேவதாஸ் யூலிடெனீஸ் – கூத்து







