கைதடி அரசினர் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற முதியோர் தின விழா அத்தியட்சகர் திரு இராஜமனோகரன் தலைமையில் 04.10.2025 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அவர்களும் பங்குபற்றினார்கள்.
இந் நிகழ்வில் கருத்து பிரதம விருந்தினர் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், மூத்தவர்களை பராமரிப்பது எமது தலையால கடமை எனவும், அவர்கள் எங்களின் சொத்து எனவும் குறிப்பிட்டார். மேலும், மூத்தவர்கள் மகிழ்வடைந்தால் எமது வாழ்க்கை பிரகாசமாகவிருக்கும் எனவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டு, இவ் இல்லத்தில் மூத்தவர்களை பராமரிக்கும் கடமையினை சிறப்பாக ஆற்றும் அத்தியட்சகர், உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களை வாழ்த்தினார்.
இறுதியில் மூத்தவர்கள் மற்றும் சிறுவர்கள் அரசாங்க அதிபர் மற்றும் விருந்தினர்களால் கெளரவிக்கப்பட்டார்கள்.
 
 
 
1 2 3 4 5 6 7 9 10 11 12 13 14
4தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வாண்டு ஓவ்வொரு 10 இலட்சம் பெறுமதியான 88 வீடுகளில் 80 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வுகள் இன்றைய தினம் (05.10.2025) அந்தந்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பயனாளிகளிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அந்தவகையில், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் கோண்டாவில் நாகபூசணி அம்மன் கோவிலடியில் பயனாளிக்கு ஒருவருக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர், தேசிய மக்கள் சக்தியின் நல்லூர் பிரதேச சபை கெளரவ உறுப்பினர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 4 6 7
212025 ஆண்டிற்கானசிறுவர் தினமானது "உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்" என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கயிலாசபிள்ளை சிவகரன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் 04.10.2025 ஆம் திகதி சனிக்கிழமை மு. ப 10.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், வாழ்நாள் பேராசிரியருமான பொன். பாலசுந்தரம்பிள்ளை அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.ந.ஸ்ரீசரவணபவானநந்தன் (யாழ் போதனா வைத்தியசாலை குழந்தை நல வைத்திய நிபுணர்) அவர்களும் பங்குபற்றி சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் வரவேற்பு நடனம், பாட்டு (தெல்லிப்பழை முதியோர் சங்கம்) மொழிப்புலமை திறனை வெளிப்படுதத்தல், நடனம், ஒயிலாட்டம் (உதயதாரகை சிறுவர் இல்லம்) நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
மேலும், விருந்தினர்களுடன் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் இணைந்து முதியோர் சுயதொழில் பயனாளிகள் மற்றும் வெற்றி பெற்ற முதியோர் சங்கங்கள் கௌரவிக்கப்பட்டதுடன்
சிறுவர்கள், முதியோா்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மாவட்ட பிரதம கணக்காளர்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், மனித உரிமைகள் ஆணையாளர், பிரதேச செயலாளர்கள் உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட, பிரதேச செயலக சிறுவர், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர்கள், முதியோா்கள் கலந்துகொண்டனர்.
 
7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
3தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இலங்கை இளைஞர்கள் கழக சம்மேளனம் ஆகின இணைந்து ஏற்பாடு செய்த 35 ஆவது தேசிய இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகள், யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் 04.10.2025 அன்று 03.30 மணிக்கு நடைபெற்றது.
பிரதம விருந்தினராக கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுப்புன் விஜரத்ன மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சார்பில் யாழ்ப்பாண மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்சினி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு.சு.கபிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஓட்டம், குண்டெறிதல், தட்டெறிதல், உதைபந்தாட்டம் ,கயிறுழுத்தல், உட்பட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதனையடுத்து, போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு வெற்றிக்கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி விருந்தினர்களால் கெளரவிக்கப்பட்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 1413 14
2குறிகட்டுவான் இறங்குதுறைக்கு முன்னரான நடைபாதையுடன் கூடிய வீதிப் புனரமைப்பு 299.80 மில்லியன் ரூபாவில் - பெருந் திட்டத்திற்கு அமைய (Master Plan) அபிவிருத்தி செய்வதற்கான அங்குரார்ப்பணநிகழ்வு இன்றைய தினம் (04.10.2025) காலை 09.00 மணிக்கு குறிகட்டுவான் இறங்குதுறையில் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் மற்றும் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்குபற்றுதல்களுடன் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் வட மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கெளரவ கருணநாதன் இளங்குமரன், கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், யாழ்ப்பாண மாவட்ட அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் திரு. T. பாஸ்கரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் திரு குரூஸ், வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7