Nallur kandaswamy Temple
Nallur Temple
Jaffna District Secretariat
Jaffna Tourism Places
78வது சுதந்திர தின மாவட்ட நிகழ்வு - 2025
சுற்றுலா வழிகாட்டி நூல்
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா - 2025
60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியீடு

දිසාපති / දිස්ත්‍රික් ලේකම්

GA Piiratheepan

Mr.M.Piiratheepan

  18                                                                                                                                                                                    வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், கௌரவ விருந்தினராக “கலைக்குரிசில்” திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கவிஞரும் மூத்த நாடகவியலாளருமான திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்கள் பங்கேற்றார். இவ்வாண்டின் பண்பாட்டுப் பெருவிழா “மாவைப் பண்டிதர்” அமரர் க. சச்சிதானந்தன் அரங்கு (மாவிட்டபுரம்) எனும் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள், தனது உரையில், ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனத் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பாரம்பரிய கலை வடிவங்கள் படிப்படியாக சுருக்கப்பட்டு இலத்திரனியல் வடிவங்களுக்கு மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அவற்றின் அசல் தன்மையையும் பாரம்பரிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.see more....

පුවත් සහ සිදුවීම්

News

பெற்றோரின் கனவுகளை நனவாக்க கல்வியில் அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் – மாணவர்களுக்கு அரசாங்க அதிபர் அறிவுரை

සැප්තැම්බර් 08 2026

பெரெண்டினா நிறுவனத்தின் அனுசரணையில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு, பெரெண்டினா நிறுவனத்தின் வடக்கு மாகாண வலய முகாமையாளர் திரு. ஆர். இராஜேஸ்வரன் தலைமையில் நேற்று (07.09.2026) மாலை 5.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் உரையாற்றுகையில், நீண்டகாலமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு சமூக நலச் செயற்பாடுகளில் தனது...

செப்டெம்பர் 26 தொழிற்சந்தை: தொழில் தேடுவோர்–தொழில் வழங்குநர்களை இணைக்க முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல்

සැප්තැම්බර් 08 2026

மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் இணைந்து நடாத்தும் விசேட தொழிற் சந்தை தொடர்பாக பங்குதாரர்களுடனான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (07.09.2026) பிற்பகல் 03.30 மணிக்கு மாவட்ட செயலக செயலமர்வு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாணத்தில் செப்டெம்பர் 26ஆம் திகதி தொழில் சந்தை யாழ்ப்பாண மாவட்டத்தில்...

கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்!

සැප්තැම්බර් 08 2026

யாழ்ப்பாண மாவட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில், சமாசப் பிரதிநிதிகளுக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (07.09.2026) காலை 9.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. சமாசத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைத்துத் தருதல், யாழ். மாவட்ட கால்நடை வளர்ப்போருக்கு நல்லினப் பசுக்கள் மற்றும் கன்றுகளை மானிய அடிப்படையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல்...

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மத்தியிலும் பாரம்பரிய கலைகளைப் பாதுகாப்பது அவசியம் – அரசாங்க அதிபர்

සැප්තැම්බර් 06 2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம...

துல்லியமான தரவுகளே சிறந்த தீர்மானங்களுக்கு அடிப்படை – விவசாயத் தொகைமதிப்பு தொழில்நுட்ப உத்தியோகத்தர்களிடம் அரசாங்க அதிபர் வலியுறுத்தல்

සැප්තැම්බර් 06 2026

விவசாயத் தொகைமதிப்பு நடவடிக்கைகளுக்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான (Tablet Technical Officers) ஒரு நாள் பயிற்சி நெறி மாவட்ட புள்ளிவிபரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திரு. எம். வித்தியானந்தனேசன் அவர்கள் தலைமையில், இன்றைய தினம் (04.09.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தொகைமதிப்பு ஆணையாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்...

யாழ்ப்பாணத்தின் புத்தாக்க ஆற்றல்களுக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

සැප්තැම්බර් 06 2026

யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு பிராந்திய புத்தாக்கச் சூழலமைப்பை (Regional Innovation Ecosystem) வலுப்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் இலங்கை தேசிய புத்தாக்க முகவராண்மையும் (NIA) இணைந்து ஏற்பாடு செய்த திறந்த கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில், இன்றைய தினம் (04.09.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்தில் காணப்படும்...

காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் வருடாந்த விளையாட்டு விழா – 2026

සැප්තැම්බර් 04 2026

காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா இன்று (03.09.2026) வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு காரை சலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. காரைநகர் பிரதேச செயலாளர் செல்வி நவரத்தினம் ரஞ்சனா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின்...

யாழ். மாவட்ட செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம்

සැප්තැම්බර් 04 2026

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (01.09.2026) காலை 9.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, அலுவலகக் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் 30.08.2026 அன்று உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மின்சார விபத்தில் உயிரிழந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்...

சிறுபோக நெல் கொள்வனவுக்கு ரூ.25 மில்லியன் வரை வட்டியில்லா கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை - அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

සැප්තැම්බර් 01 2026

2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக (யல பருவகால) நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்கான துரித வேலைத்திட்டம் தொடர்பாக,நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் ஆலைகளை இயக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினருடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் ( 31.08.2026) காலை 09.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், 2026 யல...

தொழில் சந்தைக்கான இணையவழிப் பதிவுகளை பின்வரும் இணைப்பின் ஊடாக மேற்கொள்ளலாம் – அரசாங்க அதிபர் கோரிக்கை

අගෝස්තු 31 2026

தொழில் சந்தைக்கான இணையவழிப் பதிவுகளை பின்வரும் இணைப்பின் ஊடாக மேற்கொள்ளலாம் – அரசாங்க அதிபர் கோரிக்கை https://docs.google.com/.../1FAIpQLSfnCnmUWsz6uI.../viewform யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள தொழில் சந்தையில் கலந்துகொள்ள விரும்பும் தொழில் நாடும் இளைஞர், யுவதிகள், தங்களது பதிவுகளை மேலே வழங்கப்பட்டுள்ள இணையவழி இணைப்பின் ஊடாகவும் மேற்கொள்ள முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, தொழில் வாய்ப்புகளை நாடும் இளைஞர், யுவதிகள் இந்த...

« »

Related Links

==> Requesting copies of Birth, Marriage and Death certificates Online
==> Vehicle Revenue Licence Service  Online
==> Bus Seat Booking Online
==>
Train Seat Booking Online

 

பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பிற்கு உள்ளான காணி உரிமையாளர்களிற்கான அறிவித்தல்

பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பிற்கு உள்ளான காணி உரிமையாளர்களின் விபரங்கள்   

  pdfic2 
   

 பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பிற்கு உள்ளான காணி உரிமையாளர்களின் விபரங்கள் (மேலதிக விபரங்களுடன்  திருத்தப்பட்ட பட்டியல் - Updated On Sep 11,2021 )

pdfic2
   

படிவம்    

  pdfic2

                                                                    

 

Letter