78வது சுதந்திர தின மாவட்ட நிகழ்வு - 2025
சுற்றுலா வழிகாட்டி நூல்
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா - 2025
60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியீடு

அரசாங்க அதிபர் / மாவட்ட செயலாளர்

திரு.ம.பிரதீபன்
திரு.ம.பிரதீபன்
மாவட்டச் செயலகம்
SLAS விசேட தரம் ( I )
 

 

1

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகமும் (கரவெட்டி) பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய “பிரதேச பண்பாட்டு விழா 2026”, இன்று (06.10.2026) செவ்வாய்க்கிழமை பி.ப. 1.30 மணிக்கு கரணவாய் மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில், “எழுத்து சீர்காழி சங்கீதபூஷணம்” செல்லத்துறை குமாரசாமி அரங்கில் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலாளரும் பிரதேச பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான திருவாட்டி. உமாமகள் மணிவண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர். கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருவாட்டி. மாலினி கிருஷ்ணானந்தன், கரவெட்டி கிழக்கு இசைநாடகக் கலைஞர் “கலாபூஷணம்” காசியன் வீரபுத்திரன் மற்றும் அல்வாய் நாடகக் கலைஞர் “கலாபூஷணம்” மாணிக்கம் அனந்தராசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். see more...
 

Events

News

மாவட்டச் செயலகத்தில் நவராத்திரி பூஜை ஆரம்பம்!

12 அக்டோபர் 2026

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நவராத்திரி விழாவின் முதல் நாள் பூஜை இன்றைய தினம் (11.10.2026) காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.இப் பூஜை நிகழ்வில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.  

யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஊடக அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்பு செயலமர்வு

10 அக்டோபர் 2026

“முழு நாடும் ஒன்றாக” போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான “ஊடக அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு மேலதிக அரசாங்க அதிபர் கை. சிவகரன் தலைமையில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்கேற்புடன் இன்று (09.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. தலைமையுரை : யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க...

புதிதாக பதவியேற்ற 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

10 அக்டோபர் 2026

யாழ்ப்பாண மாவட்டத்தின் 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக 07.10.2026 அன்று புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் WMPWNDB வீரக்கோன் (Major General WMPWNDB Weerakoon RSP Usp ndu) அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (09.10.2026) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக...

புவிசார் வளங்கள் அகழ்வு தொடர்பான மாவட்டக் கண்காணிப்புக் குழுக் கூட்டம்

10 அக்டோபர் 2026

புவிசார் வளங்களான கருங்கல், சரளைக் கல், மண், மணல் மற்றும் களிமண் ஆகியவற்றை அகழ்தல், கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது குறித்த யாழ்ப்பாண மாவட்டக் கண்காணிப்புக் குழுக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (09.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தலைமையுரை : புவிசார் வளங்கள் அகழ்வைக் கண்காணிக்க மாவட்ட மட்டத்தில்...

யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் இறப்பு கண்காணிப்பை வலுப்படுத்தும் பயிற்சிச் செயலமர்வு

10 அக்டோபர் 2026

யாழ்ப்பாண மாவட்ட இறப்பு பதிவாளர்களுக்கான புற்றுநோய் இறப்பு கண்காணிப்பு தொடர்பான பயிற்சிச் செயலமர்வு, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தலைமையில் இன்று (09.10.2026) காலை 09.00 மணிக்கு நடைபெற்றது. தொடக்கவுரை : இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். புற்றுநோய் மரணங்கள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் - அரசாங்க அதிபர் அரசாங்க அதிபர்...

1,540 கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள்

09 அக்டோபர் 2026

"எமது அபிவிருத்திப் பாதை என்பது, கிராமிய மக்களை நகர்ப்புறங்களுக்கு அழைத்து வருவதல்ல, மாறாக கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதும் வசதிகளை வழங்குவதும் ஆகும். அதற்காக கிராம உத்தியோகத்தர்களுக்கு பாரிய பொறுப்புகள் உள்ளன – அதிமேதகு ஜனாதிபதி கிராம உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட 1,540 அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில், இன்று (08.10.2026) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. கிராம உத்தியோகத்தர் சேவைக்கு புதிய பிரமாணக்...

அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்ட முன்னேற்றம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்தாய்வு!

08 அக்டோபர் 2026

அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு இடையிலான கலந்தாய்வு அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (07.10.2026) காலை 9.00 மணி தொடக்கம் 01.00 மணி வரை தனியார் விடுதியில் நடைபெற்றது. இக் கலந்தாய்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தலைமையுரை : அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் மாவட்ட அபிவிருத்தி முன்னெடுக்கப்பட வேண்டும் – அரசாங்க...

கலைப் பாரம்பரியங்களைப் பாதுகாக்கும் நோக்கில் வடமராட்சி தெற்கு மேற்கு பண்பாட்டு விழா!

07 அக்டோபர் 2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகமும் (கரவெட்டி) பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய “பிரதேச பண்பாட்டு விழா 2026”, இன்று (06.10.2026) செவ்வாய்க்கிழமை பி.ப. 1.30 மணிக்கு கரணவாய் மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில், “எழுத்து சீர்காழி சங்கீதபூஷணம்” செல்லத்துறை குமாரசாமி அரங்கில் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலாளரும் பிரதேச பண்பாட்டுப் பேரவைத்...

பால்நிலை சமத்துவம் தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

07 அக்டோபர் 2026

பால்நிலை சமத்துவம் தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச சட்டங்கள், கொள்கை ரீதியான கடப்பாடுகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்று (06.10.2026) மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. பால்நிலை சமத்துவத்தை மேம்படுத்துதல், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்தல் மற்றும் அவற்றினால் ஏற்படும் பிரச்சினைகளை உரிய முறையில் கையாள்வதற்கான அறிவையும் புரிதலையும்...

ஒரு சிறந்த ஆசிரியரால் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் – அரசாங்க அதிபர்

06 அக்டோபர் 2026

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஆசிரியர் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின விழா கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் 'செந்தமிழ்ச் சொல்லருவி' எஸ். லலீசன் அவர்களின் தலைமையில் இன்று(06.10.2026) செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டச் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளர் திருமதி பரமேஸ்வரி நாகரத்தினம் சிறப்பு விருந்தினராகக்...

« »