யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 15.03.2022 அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இவ் விவசாயக் குழுக் கூட்டத்தில் யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்துகொண்டார். மேலும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வங்கி முகாமையாளர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
மேலும், வங்கிகள் விவசாயிகளுக்கு கடனுதவிகளை வழங்குகின்றபோது இறுக்கமாக விதிமுறைகளை பின்பற்றாது பொருத்தமான விவசாயிகளை இனங்கண்டு கடனுதவிகளை வழங்குதல் வேண்டுமென தெரிவிக்கப்பட்டதோடு, யாழ்ப்பாண மாவட்டத்தில் 840042 வீட்டுத் தோட்டப் பயனாளிகளுக்கு தலா 5000 ரூபா பணமாகவும், உள்ளீடாகவும் வழங்கப்படவுள்ளதெனவும் குறிப்பிடப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளரும்,கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் 15.03.2022 அன்று யாழ்.மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளனமும் இணைந்து நடாத்தும் சைகைமொழி பயிற்சி நெறியானது மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம்(14) காலை ஒன்பது மணிதொடக்கம் மாலை நான்கு மணிவரை மாவட்டச்செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இப் பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும் "சமூகத்தில் செவிப்புலனற்றோர் அதிகளவில் காணப்படுவதோடு, இவர்களின் தொடர்பாடல், கல்வி, தொழில் செயற்பாடுகள் அனைத்தும் சைகைமொழி ஊடாக நிகழ்கின்றது. இச் சைகைமொழியானது சமூகம் மற்றும் நாடுகளுக்கிடையில் வேறுபடுகிறது. இந்தியாவில் 14 சைகைமொழிகள் காணப்படுகிறது.
எமது நாட்டில் தமிழ், சிங்கள, ஆங்கில சைகைமொழிகள் காணப்படுகிறது. இச் சைகைமொழியின் வேறுபாடுகளால் செவிப்புலனற்றோர் பல்வேறு பாதிப்பிற்குட்படுகிறார்கள். எனவே இச் சைகைமொழியில் காணப்படுகின்ற குறைபாடுகளை இனங்கண்டு நிவர்த்தி செய்வதன் மூலம் அவர்களுடைய நாளாந்த வாழ்வு, கல்வி, தொழில் மற்றும் ஏனைய விடயங்களில் நிலவும் குறைபாடுகளையும் இழிவளவாக்கமுடியும்" எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலக மனிதவள வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மொபிட்டல் தொலைத்தொடர்பு நிறுவனத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்சந்தை நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 15.03.2022 காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்சந்தை ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்துகொண்டதோடு, "மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்சந்தையை மொபிட்டல் நிறுவனத்துடன் இணைந்து இன்றையதினம் மேற்கொள்கிறோம். கடந்த வருடமும் பல தொழிற்சந்தைகளை நடாத்தி தொழில் தேடுவோருக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்துள்ளோம். அந்தவகையில் இத் தொழில்சந்தையை பயன்படுத்தி உங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளுதல் வேண்டும். உங்கள் தொடர்பாடல் திறனை விருத்திசெய்து தொழில் வழங்குநராகவும் மாறவேண்டும் இதனூடாக நீங்கள் சமூகத்தில் முன்னுதாரணமாக திகழமுடியும்" எனவும் குறிப்பிட்டார்.
யாழ் மாவட்ட மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய காலாண்டுக்கான தொழிற்சந்தை நிகழ்வு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்அவர்களின் தலைமையில் இன்று (10.03.2022) காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இச்தொழிற்சந்தை நிகழ்வில் 12 தொழில் தருநர்கள் தங்களிடமிருந்த 175 வேலைவாய்ப்புக்களுடன் பங்குபற்றியிருந்ததோடு தொழிலொன்றை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் 212 தொழில் தேடுவோரும் பங்குபற்றியிருந்தனர்.
இந நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள்,யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் அற்றவர்களுடைய வீதம் சராசரியாக ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும்போது சற்று அதிகமாக காணப்படுகின்றது.





