ஹெல்ப் ஏஜ் ஸ்ரீலங்கா (Help Age Srilanka) நிறுவனத்தினால் வெள்ளம் மற்றும் கோவிட்- 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கென ஒரு தொகுதி உணவு பொருட்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்கள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் 28.12.2021 பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்.மாவட்டச்செயலகத்தில் கையளிக்கப்பட்டது .
இவ் நிவாரணப் பொதிகள் சங்கானை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலகங்களுக்காக வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

27dcdc15தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் சிறுவர் வியாபாரம் மற்றும் சிறுவர் ஆட்கடத்தலை அடையாளம் காணல் மற்றும் அறிக்கையிடல் தொடர்பான பயிற்சிநெறி யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (2021.12.27) காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 
இப் பயிற்சிநெறியில் மாவட்ட அரசாங்க அதிபர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது "சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல், போதைப்பொருள் பாவனை, போதைப் பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் சிறுவர்களை ஈடுபடுத்தப்படுதால் இலகுவில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் எண்ணத்துடன், அதிகளவில் சிறுவர்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படுத்தப்படுவதுடன், சிறுவர்கள் தமது நெருங்கிய உறவினர்களாலேயே அதிகளவில் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவதாக அண்மைய தரவுகளை கோடிட்டு தெரிவித்தார். இதனை தடுப்பதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள். ஆசிரியர்கள் என அனைவரும் கூட்டாக இணைந்து செயற்படுதல் அவசியமானதென எனத் தெரிவித்தார்.

24disastermedia1யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல் அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் திரு.என்.சூரியராஜா தலைமையில் 24.12.2021 ன்று காலை 9.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் அனர்த்த நடவடிக்கைகளின் போது மேற்கொள்ள வேண்டிய அனர்த்த குறைப்பு நடவடிக்கை மற்றும் முன்னேற்பாடுகள் அவற்றுக்கான பயிற்சி மற்றும் விழிப்புர்வுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

26nationalday1யாழ்.மாவட்டச் செயலக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சி.என். சூரியராஜா தலைமையில் "தேசிய பாதுகாப்பு தின" நிகழ்வு 26.12.2021 அன்று காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். இத் தேசிய பாதுகாப்பு தினத்தில் 2004.12.26 ஆம் திகதி சுனாமி ஆழிப்பேரலையால் மரணமடைந்த உறவுகளுக்காக ஆத்மசாந்திப் பிரார்த்தனை செலுத்தப்பட்டதோடு, சர்வ மததலைவர்களின் உரைகள் இடம்பெற்றது.

22RTI22016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு அமைவாக வடமாகாணத்தில் இருந்து தகவல் அறியும் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளை விசாரணை செய்வதற்காக புதிய தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் இளைப்பாறிய நீதியரசர் உபாலி அபேரத்ன மற்றும் ஆணைக்குழு உறுப்பினர்களான இளைப்பாறிய நீதியரசர் ரோகிணி வெல்கம மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி பின்ரே ஜயவர்த்தன ஆகியோர் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.