7socialsec2இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திரு.எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (07.12.2021) காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய தொழில் வழிகாட்டல் வார போட்டி நிகழ்ச்சிகளிற்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன் அவர்களின் தலைமையில்  06.12.2021 அன்று மாலை மூன்று மணிக்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

யாழ்.மாவட்டத்தின் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவில் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் ஏற்பாட்டில் யுத்தம் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் முகமாக தொழில்நுட்ப மற்றும் அறிவு பரிமாற்ற நிகழ்ச்சித்திட்ட ஆரம்ப நிகழ்வு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (2021.12.03) தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

Covid-19 வைரஸ் தொற்று நோயை யாழ்ப்பாண குடாநாட்டில் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பணியாற்றிய வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகஸ்தர்கள் ஆகியோரின் சேவையினைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (04.12.2021) மதியம் ஒரு மணியளவில் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்கு தலைமையில் தல்செவன இராணுவ விடுதியில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் இன்று (02.12.2021) காலை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வாரிசௌபாக்கியா வேலைத்திட்டம செயற்பாடுகள் , குளங்கள் வாய்க்கால்கள் புனரமைப்பு கோரிக்கைகள், விவசாய செய்கைக்கான உரமானிய வழங்கல் நடவடிக்கைகள் ,களஞ்சிய வசதிகள், விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்ட நடவடிக்கைகள், உருளைக்கிழங்கு மானிய செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.