22samurdipgm 1யாழ்ப்பாண மாவட்டச் செயலக சமுர்த்தி கிளையின் ஏற்பாட்டில் High Tech Lanka International vacational and Technical Training Institute( PVT) Ltd நிறுவனத்தினால் பத்தொன்பது பயனாளி மாணவர்களுக்கு கனரக வாகனப்பயிற்சி வழங்கப்பட்டு பயிற்சி முடிவில் குறித்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

22villagebudget1கிராமிய மக்களின் வாழ்வாதாரங்களுக்கு புத்துயிரளித்து கிராமிய உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் ஊடாக தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 2022ஆம்ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் அபிவிருத்தியின் பலன்கள் மக்களுக்கு சென்றடையும் வகையில் செயல்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல் 22.12.2021 அன்று பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

20parlibudget3பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட முன்மொழிவு - 2022 தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைவரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (20.12.2021) மதியம் 1 மணிக்கு தீவகம் வடக்கு, ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் 2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆராயப்பட்டதோடு, அத் திட்டங்களை கால அவகாசத்தின் அடிப்படையில் காலாண்டு மற்றும் அரையாண்டு திட்டங்களென வகைப்படுத்தி அதற்கேற்ப முற்கூட்டியே நிதிகளை விடுவித்தல் மற்றும் செயற்திட்டங்களின் பௌதீக ரீதியான முன்னேற்றங்களை பார்த்து நிதிகளை விடுவித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கிராம உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டி மற்றும் கடமைகளைப்பரிசீலனை செய்தல். பிரதேச மட்டத்தில் நடைபெற்று முடிந்த கிராம அலுவலர் அலுவலக முகாமைத்துவ போட்டி முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதினைந்து பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 50 கிராம அலுவலர் அலுவலகங்கள் பரிசீலிக்கப்பட்டன.அவற்றில் முதல் மூன்று இடங்களை பெற்ற உத்தியோகத்தர்களது விபரங்கள் வருமாறு. 

21disascentre3தீவகம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அனர்த்த கால அவசர செயற்பாட்டு மையம் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உருப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதனால் நேற்றைய தினம் (2021.12.21) மதியம் 12.30 மணிக்கு தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.