தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமை இன்றைய தினம் (27.06.2025 ) பி.ப 1.30 மணியளவில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் கலாநிதி சுனிமல் ஜெயக்கொடி அவர்கள் விசேடமாக கலந்து கொண்டு கருத்துதெரிவிக்கையில், தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கம் தொடர்பான பிரச்சினை ஒரு தேசிய பிரச்சினையாக உள்ளதாகவும் கிருமிநாசினி கொல்லிகளை பயன்படுத்தி இப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதுள்ளதாகவும், எனவே இப் பிரச்சினைக்கு தெளிகருவிகளைப் பயன்படுத்தி தென்னை மரங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இத் திட்டத்தை எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் இரு வாரங்களுக்கு யாழ் மாவட்டத்தில் வெள்ளை ஈ தாக்க ம் அதிகமாக இனங்காணப்பட்ட சாவகச்சேரி, கோப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம் மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் கூடியளவிலான அதிக வலுவுள்ள தெளிகருவிகள் மூலமாக தென்னை மரங்களை கழுவும் செயற்பாட்டை வினைத்திறனாக முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இப் பாரிய செயற்பாட்டை முன்னெடுக்க அனைத்து சமூகங்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த, அரசாங்க அதிபர் அவர்கள், இவ் வெள்ளை ஈ தாக்கம் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாகவும், வெள்ளை ஈ தாக்கம் அதிகமாக இனங்காணப்பட்ட சாவகச்சேரி, கோப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம் மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் - முதற்கட்டமாக சாவகச்சேரி மற்றும் கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இடங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக தென்னை பயிர்ச் செய்கை சபையின் ஒத்துழைப்புடன் குறைந்தளவிலான தெளிகருவிகள் மூலமாக தென்னை மரங்களை சுத்தப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மற்றைய பத்து பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இத் தாக்கம் தொடர்பான நிலமைகள் தொடர்பாக வும், தென்னைப் பயிர்ச் செய்கை சபையினால் எதிர் வரும் 14 ஆம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்படவுள்ள கட்டுப்படுத்தல் செயற்பாட்டிற்கு தேவையான ஆளணி மற்றும் இதர தேவைகள் தொடர்பான உரிய திணைக்களங்களுடன் கலந்துரையாடி விரைவான விபரங்களைஇரு வாரங்களுக்குள் அறிவிப்பதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.மேலும், தென்னை மரங்களை வெள்ளை ஈ தாக்கத்திலிருந்து பாதுகாக்க உரிய செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ள தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு தமது நன்றியினையும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் பிரதி பொதுமுகாமையாளர் திரு. என்.எஸ் .ஜெயலத், உதவிப் பொது மேலாளர் திரு. தே.வைகுந்தன், பிராந்திய முகாமையாளர் திரு ஈ.சற்குணன்,
மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், சாவகச்சேரி பிதேச செயலாளர்,கோப்பாய் மற்றும் யாழ்ப்பாண உதவிப் பிரதேச செயலாளர்கள், நல்லூர் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், மற்றும் விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7
 
போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.06.2025) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் நோக்கம் போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டங்களை கிராம மக்களுக்கு கொண்டு செல்வதன் ஊடாக சமூக மாற்றங்களை அளவிடுதல் தொடர்பாக முதலாம் கட்ட பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியின் முன்னாயத்தக் செயலமர்வாக அமைந்தது.
இச் செயலமர்வில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மாவட்ட இணைப்பாளர் திருமதி A.சியாமினி, ADIC நிறுவன நிகழ்ச்சித்திட்ட அதிகாாி திருமதி எஸ். நிதர்சனா, திட்ட அதிகாாி திரு. எம். சுசந்தன், இணைப்பாளர் திரு எஸ். குகதாசன், போதைப்பொருள் தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுதாயம் சாா் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7
மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (26.06.2025) பி.ப 02.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், மீள்குடியேற்ற மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கே 50% மேலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் இவ்வாண்டு இறுதிக்குள் வேலைத் திட்டங்களை நிதி திரும்பாதவகையில் பூர்த்தி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் மழை காலத்திற்கு முன்னராக வீடமைப்பு நிர்மாண வேலைகளை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியத்தினை எடுத்துக்கூறியதுடன், வீதிப் புனரமைப்பு, மின்சார இணைப்பு மற்றும் குடிநீர் விநியோக இணைப்பு போன்ற திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கியதுடன் அடுத்த முன்னேற்ற கூட்டத்தினை எதிர்வரும் யூலை மாதம் 31 ஆம் திகதி நடாத்த ஒழுங்கு செய்யுமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், பிரதேச செயலாளர்கள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சிற்குரிய மாவட்ட பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
1 2 3 4 5 6 7 8
போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.06.2025) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் நோக்கம் போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டங்களை கிராம மக்களுக்கு கொண்டு செல்வதன் ஊடாக சமூக மாற்றங்களை அளவிடுதல் தொடர்பாக முதலாம் கட்ட பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியின் முன்னாயத்தக் செயலமர்வாக அமைந்தது.
இச் செயலமர்வில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மாவட்ட இணைப்பாளர் திருமதி A.சியாமினி, ADIC நிறுவன நிகழ்ச்சித்திட்ட அதிகாாி திருமதி எஸ். நிதர்சனா, திட்ட அதிகாாி திரு. எம். சுசந்தன், இணைப்பாளர் திரு எஸ். குகதாசன், போதைப்பொருள் தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுதாயம் சாா் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7
பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்தல் செயலமர்வு உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.06.2025) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் முற்பகல் 9.00 தொடக்கம் 2.00 மணி வரை நடைபெற்றது
இச் செயலமர்வின் இறுதியில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு 2024 ஆண்டு பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களின் மதிப்பீட்டில் பங்கு பற்றிய பாடசாலைகளுக்கான சான்றிதழ்களை பாடசாலை அதிபர்களுக்கு வழங்கி வைத்தார்.
இதில் யாழ்ப்பாணம் வலயத்தில் 21 பாடசாலைகளும், வடமராட்சி வலயத்தில் 10 பாடசாலைகளும், தென்மராட்சி வலயத்தில் 16 பாடசாலைகளும், தீவக வலயத்தில் 06 பாடசாலை களுமாக மொத்தமாக 53 பாடசாலைகளுக்கு சான்றிதழ்கள் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது.
இச் செயலமர்வில் பாடசாலையில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோகங்களை அடையாளம் காணுதல் மற்றும் கையாளுதல் தொடர்பாகவும், பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வேலைப்படுத்துவதில் பாடசாலை அதிபர்களின் பொறுப்புகள் கடமைகளை தெளிவுபடுத்தல் தொடர்பாகவும் வளவாளர்களால் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் சட்ட வைத்திய நிபுணர் கே.வாசுதேவா, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணைப்பாளர் திரு. இ. செந்தூரன், பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5