யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இன்றைய தினம்
இதன் போது அரசாங்க அதிபர் அவர்கள் கட்டளைத் தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார்.
இச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க. ஸ்ரீமோகனன், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட உள்ளகக் கணக்காய்வாளர் ஆகியோா் கலந்து கொண்டனர்.


யாழ்ப்பாணத்திற்கும் மாத்தளைக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தல் நிகழ்விற்காக மாத்தளையிலிருந்து வருகைதந்த இளைஞர் யுவதிகள் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு இன்று பி.ப 01.00 மணிக்கு வருகை தந்தனர்.
வருகை தந்தவர்களுக்கான அறிமுக நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ் விஜயம் மொழிமூலம் கலாசார ஒருங்கிணைப்பை வளர்த்து மக்கள் குழுக்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்துவதை நோக்காக கொண்டு அமைந்தது.
இவ் நல்லிணக்க விஜயத்தில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் (தேசிய மொழிகள்) மேலதிகச் செயலாளர் திரு.எம்.எல். கம்மம்பில மற்றும் நிர்வாக அலுவலர் திருமதி.ஏ.ஏ. எப். நதிமியா, யாழ்ப்பாண உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்சினி, தேசிய மொழிகள் மாகாணப் பொறுப்பதிகாரி திரு. ந. உமாநாத், அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண மற்றும் மாத்தளை மாவட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டார்கள்.

மூளாய் முங்கோடை மற்றும் வேரம் ஆகிய கிராமங்கள் வெள்ள அனர்த்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டமைக்கு மழை நீரோட்டமானது மூளாய் நெடுங்குளத்திற்கு போகாமைக்கான காரணத்தினை அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்று (30.11.2024) நேரில் ஆய்வு செய்தார்.
சாவகச்சேரியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (01.12.2024) பல்வேறு நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார்.
சாவகச்சேரி யில் அமைந்துள்ள பாதுகாப்பு நிலையங்களுக்கு அரசாங்க அதிபர் சென்று அங்குள்ள மக்களுக்கான உணவு மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை கேட்றிந்து கொண்டார். மேலும், இதுவரை தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலும், தனிநபர்களாலும் உணவுகள் வழங்கப்பட்டதனை கேட்டறிந்த அரசாங்க அதிபர் அவர்கள், நாளையிலிருந்து அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 03 தினங்களுக்கு சமைத்த உணவு வழங்குமாறு சாவகச்சேரி பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.


அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக 2024.11.28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி விடயம் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கெளரவ போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன அவர்களினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கெளரவ அமைச்சர் அவர்களுக்கு முகவரியிடப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரதியிடப்பட்ட 2024.11.28 ஆம் திகதிய கடிதம் மூலம் அறியத்தரப்பட்டுள்ளது.







