சனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று கண்காணிப்பு நடவடிக்கைக்கு செல்லும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (02.09.2024) காலை 9.00 மணிக்கும் 10.30 மணிக்கும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள்
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 04 ஆம் திகதி பொலிஸ், மாவட்டச் செயலகம் மற்றும் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் கடமையாற்றுபவர்களுக்கும், 05 ஆம் திகதி பிற அரச நிறுவனங்களில் கடமை யாற்றுபவர்களுக்கும் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் 06 ஆம் திகதி பிற அரச நிறுவனங்களில் கடமை யாற்றுபவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் மற்றும் பொலிசாருக்கும் அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதாகவும், இவ் அஞ்சல் வாக்களிப்பானது ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்கள் போலவே செயற்பட்டு, இட ஒழுங்கமைப்பு, முகவர்களுக்குரிய ஏற்பாடுகள் போன்றவற்றை முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா போன்ற விடயங்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் அலுவலகர்கள் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டு தேர்தல் சுதந்திரமாகவும், நீதியாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதன்போது சனாதிபதி தேர்தலில் அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று கண்காணிப்பு நடவடிக்கைக்கு செல்லும் அலுவலகர்களுக்கான
கடமைகள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயமலர்வில் அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று கண்காணிப்பு நடவடிக்கைக்கு செல்லும் அலுவலர்களாக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் (02.09.2024) யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு .மருதலிங்கம் பிரதீபன் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இச் சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தின் தேர்தல் செயற்பாடுகள் தொடர்பாகவும் இதுவரையில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இச் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் நீண்டகால மேற்பார்வையாளர்களான திரு. நிக்கோலஸ் குகூலிஸ் மற்றும் திரு. ஜோஹான்னா வான் சம்பீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
1 2
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (29.08.2024) காலை 09.00 மணிக்கும் பி.ப 02.00 மணிக்கும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள்
ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்படும் உத்தியோகத்தர்கள் தேர்தல் சுதந்திரமாகவும், நீதியாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டதுடன், அந்த வகையில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் பங்களிப்பானது மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். வாக்களிப்பு நிலையங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்படும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் ஒவ்வொருவரும் வாக்களிப்பு நிலையங்களுக்குரிய பொறுப்பு மற்றும் அதிகாரத்துடன் எடுக்கக் கூடிய தீர்மானங்களைக் கொண்டவர்களாகவிருப்பதால் இத் தேர்தலில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் பிரதான பங்காளிகளாக விளங்குவதனால், இவர்களின் பங்கானது மிகக் காத்திரமானது எனத் தெரிவித்து, ஐனநாயக ரீதியில் வினைத்திறமையாக தேர்தலை நாடத்துவதற்கான ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டுக்கொண்டார்.
சனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயலமர்வில் சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலகர்களாக நியமிக்கப்படவுள்ள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (30.08.2024) பி.ப 02.00 மணிக்கு நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள்
ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்படும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் பங்களிப்பானது மிகவும் காத்திரமானது. சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கான பொறுப்புக்கள், கடமைகள் மற்றும் அதிகாரத்துடன் எடுக்கக் கூடிய தீர்மானங்களைக் கொண்டவர்களாக விளங்குகின்றார்கள் எனவும், இத் தேர்தலில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களின் பங்கானது மிக முக்கியத்துவமானது எனக்குறிப்பிட்டு, தேர்தல் சுதந்தரமாகவும், நீதியாகவும் நடைபெற ஒத்துழைப்பு ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டுக்கொண்டார்.
சனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயலமர்வில் சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலகர்களாக நியமிக்கப்படவுள்ள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5
மாவட்ட சுற்றாடல் குழு கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (28.08.2024) மதியம் 12 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் நகர்புறங்களில் காணப்படும் கழிவகற்றல் பிரச்சினைகள், திண்ம கழிவு முகாமைத்துவம், வைத்திய கழிவு முகாமைத்துவம் மற்றும் மரநடுகை திட்டத்தில் ஏற்படும் சவால்கள் குறித்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) , திட்டமிடல் பணிப்பாளர் ,உதவி மாவட்ட செயலாளர் , பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் , வன பரிபாலன திணைக்கள உதவிப்பணிப்பாளர், மாநகர சபை ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உதவி ஆணையாளர், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அகழ்வுப் பொறியியலாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள பொறியியலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5