தொழில் முயற்சியாளர்கள் வங்கிக் கடன் பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகாணும் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே.சிவகரன் அவர்களின் தலைமையில்
இன்றைய தினம் (10.09.2025) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் சிறு தொழில் முயற்சியாளர்கள் வங்கிக் கடன்களை பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் வங்கிகளில் சிறு தொழில் முயற்சியாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடன் திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், வங்கி முகாமையாயாளர்கள், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.
 
  1 2 3 4 5 6 7 8 
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி (சாவகச்சேரி) பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து கொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (10.09.2025) புதன்கிழமை காலை 09.00 மணிக்கு தென்மராட்சி கலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் திரு. பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதிஅவர்களது தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் திரு. தங்கராசா காண்டீபன் அவர்களும் , கெளரவ விருந்தினர்களாக மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. சுகுணலினி விஜயரத்தினம் அவர்களும் கலாபூசணம் சின்னக்குட்டி காசிப்பிள்ளை மற்றும் தென்மராட்சி கலை கலாசார மண்டப தலைவர் திரு. அருள்நிதி அருள்தாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
பிரபல நாதஸ்வர வித்துவான் கலாபூஷணம் கே.எம்.பஞ்சாபிகேசன் அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டு விழாவானது பல்வேறுபட்ட கலை இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆலய முன்றலில் இருந்து பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து ,வரவேற்பு நடனம், குறத்தி நடனம் , முருகன் நடனம் , இசைச்சங்கமம் , பொம்மலாட்டம் , கதாப்பிரசங்கம் , கோலாட்டம், நாட்டிய நாடகம் என்பன சிறப்பாக நடைபெற்றது.
கலைஞர்களுக்கான " கலைச்சாகரம் விருது", "இளம்கலைஞர் விருது " அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 16 17 19
 
20வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்துகொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (09.09.2025) செவ்வாய்க்கிழமை மாலை 02.30 மணிக்கு சூரியமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் திரு. நடராசா திருலிங்கநாதன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் திருமதி லாகினி நிரூபராஷ் அவர்களும் , மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. சுகுணலினி விஜயரத்தினம் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக மூத்த கலைஞர்களான திரு.வெ. முத்துச்சாமி மற்றும் திரு.மு. ஜெகநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
கலாபூஷணம் இளையமுத்து துரைமுத்து அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டு விழாவானது பல்வேறுபட்ட கலை இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதேச செயலக முன்றலில் இருந்து பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் உடுக்கிஇசை (வடமராட்சி வடக்கு வாழ் கஞைர்கள்), வரவேற்பு நடனம் (தொண்டைமானாறு அபிநயசுரபி நடன மன்றம்), கீர்த்தனை (ஞான சம்பந்தர் மன்றம்), காளிங்க நர்த்தனம் (பரத சிவாலய கலைமன்றம்), வில்லிசை (வள்ளி திருமணம்-வேணுகான சபாமன்றம்) நாடகம் (நட்பின் பரிசு வெ. முத்தச்சாமி குழுவினர்), பாரதியின் நடனம் (பரதசுரபி கலாமன்றம) என்பன சிறப்பாக நடைபெற்றது.
கலைஞர்களுக்கான " கலைப்பரிதி" "இளங் கலைஞர்" "இளங் கலைப்பரிதி"விருதுகள் அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டதுடன், தேசிய கலை இலக்கியப் போட்டிகளின் பரிசில் வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
 
2 3 4 5 6 7 8 2 8 912 10 11  13 15 16 18 19 20
 
2இந்தியத் துணைத் தூதரகமும், போலோ ஆய்வகமும் இணைந்து 'போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு – ஒரு குழந்தையின் எதிர்காலத்துக்கான இணைப்பு' என்னும் தலைப்பில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்றைய தினம் (09.09.2025) இந்தியாவிலிருந்து வருகை தந்த கல்வி உளவியாளரும் சிறுவர் உரிமைக்கான நிபுணருமான கலாநிதி சரண்யா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக் கருத்தரங்கில் குழந்தைகளின் எதிர்காலம் வளமானதாக மாற்றுவதற்கான பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்பில் கருத்தரங்கு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வட மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், இந்திய துணைத் தூதுவர் கெளரவ சாய் முரளி மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்,இந்திய துணை தூதரகமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக சமூகத்திற்கு பல ஆரோக்கியமானசெயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும், அதன் ஒரு அங்கமாக இந் நிகழ்வு நடைபெறுவதாகவும் அதற்காக தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அவர்களின் எதிர்கால போக்கு தொடர்பாக எவ்வாறு செயற்பட வேண்டும் என்று வைத்திய கலாநிதி சரண்யா ஜெயக்குமார் அவர்கள் எடுத்துக் கூறினார் எனவும் சிறுவர்களோடு தொடர்பு கொள்வதற்கு குடும்ப உறவுகள் மற்றும் அது தொடர்பில் பணி புரியும் உத்தியோகத்தர்கள் அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுவதாகவும் அதற்கு அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்து, சூழல் போக்கு மாற்றத்திற்கு ஏற்ப அவர்களை ஆற்றுப் படுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கம் பல தொடர்ச்சியான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பாக அரசாங்கம் ஒரு குழந்தை கருவில் உருவாகியது முதல் முதியோர் ஆகும் வரை பல வழிமுறைகளில் உத்தியோகத்ர்களை நியமித்து அவர்களை வழிப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இதில் ஆசிரியர்களின் பங்கும் காணப்படுவதாகவும் மாணவர்களை ஆற்றுப்படுத்த வேண்டிய கடமை உணர்வு ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் இருக்க வேண்டும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தேசியக் கல்வியற் கல்லூரி முகிழ்நிலை ஆசிரியர்கள், மாணவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
 
1 2 3 4 5 6 9 7 8 11