29மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் இணைந்து நடாத்திய விசேட தொழிற்சந்தை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (22.09.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் கெளரவ மஹிந்த ஜெயசிங்ஹ அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. கே. ஜி. எச். எச். ஆர். கிரியல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இந் நிகழ்விற்கு வருகைதந்த கெளரவ பிரதி அமைச்சர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், வேலை வாய்ப்பு இன்றியிருக்கும் இளைஞர் யுவதிகளை தொழில் வழங்குனர்களையும் இணைக்கும் சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாகவும், இன்றைய இளைஞர்கள் அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கு வளர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், தற்போது போட்டித் தன்மையுள்ள சமூகம் எனவும், தொழில் வழங்குனர்களின் எதிர்பார்க்கைக்கு அமைய தொழிலிற் திறமையினை வெளிப்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, மாவட்டச் செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் என்றும் துணைநிற்கும் எனவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் உரையாற்றுகையில், எமது அரசாங்கம் வடக்கில் தொழிற்சாலைகளை உருவாக்க நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும், பலாலியில் முதலீட்டு வலயம் உருவாக்கப்படவுள்ளதாகவும், வடக்கின் சுற்றுலாத்துறையிலும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதால் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகவாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட கெளரவ பிரதி அமைச்சர் தமதுரையில், அரசாங்கம் பொறுப்பேற்று ஒரு வருட பூர்த்தியினைத் தொடர்ந்து தமது அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட முதலாவது நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறுவது மகிழ்ச்சி யானது எனவும், அதிகளவானோர் வருகைதந்துள்ளதாகவும் அதில் குறிப்பாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் வருகைதந்தமை வரவேற்க்கத்தக்கவிடயம் எனவும் தெரிவித்தார். மேலும், இன்றைய நிகழ்வின் நோக்கம் வேலைவாய்ப்பினை வழங்குவதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் பயிற்சி வழங்குதலேயாகும் எனவும், இன்றைய நிகழ்வினை சந்தர்ப்பமாக எடுத்து முன்னோக்கி பயணிக்க வேண்டும் எனவும், பொருத்தமான தொழில் கிடைக்க பயிற்சி அவசியம் எனவும் தெரிவித்தார். மேலும், தற்போது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதாகவும், மேன்மேலும் பொருளாதாரம், கலாசாரம் மற்றும் சமுதாயம் முன்னேற்றகரமாக பயணித்து அனைவரதும் வாழ்க்கை அழகாக மாற்றமடைய தமது அரசாங்கம் துணைநிற்கும் எனவும், இன, மத, மொழி மற்றும் ஜாதி கடந்த நிலையில் எதுவித பாகுபாடு இன்றி அனைவரினதும் வளமான எதிர்காலத்தினை வழங்க தமது அரசாங்கம் பாடுபடும் எனவும் கெளரவ பிரதி அமைச்சர் தெரிவித்து, இன்றைய இந் நிகழ்வானது தாம் எதிர்பார்த்ததை விட மிகவும் சிறப்பாக நடைபெற ஒழுங்கமைத்த யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரை மிகவும் பாராட்டி தமது நன்றியினையும் தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வில் மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்கள பணிப்பாளர் திருமதி சானிகா மயாதுன்னே, மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்கள யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் திரு கே. கருணாகரன், மாவட்ட மற்றும் பிரதேச செயலக மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பங்குபற்றினார்கள்.
இன்றைய தொழிற்சந்தை நிகழ்வில் 1500 இற்கு மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் கலந்து கொண்டதுடன், தொழில் வழங்கும் 40 நிறுவனங்களும்,15 பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 23 24 25 26 27 28 29 30
அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணி நேர இரண்டாம் மொழி சிங்களப் பாடநெறியின் இறுதிநாள் நிகழ்வு
அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணி நேர இரண்டாம் மொழி சிங்களப் பாடநெறியின் இறுதிநாள் கலை நிகழ்வு இன்றைய தினம் (21.09.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களும், யாழ்ப்பாண உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்ஷினி அவர்களும், இரண்டாம் மொழி சிங்கள வளவாளரான திரு. சச்சிதானந்தம் நந்தன் அவர்களும், அரசகரும மொழிகள் திணைக்களத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டுப் பிரிவின் வடமாகாண ஒருங்கிணைப்பாளருமாகிய திரு. நடராஜா உமாநாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இரண்டாம் மொழி கற்பதற்கான 150 மணித்தியாள பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களை வாழ்த்துவதுடன், உத்தியோகத்தர்களின் வினைத்திறனாக சேவைக்கு இப்பயிற்சி நெறி உதவும் எனவும், மேலும் டிப்ளோமா கற்கைகளைக் கற்று மேன்மேலும் இரண்டாம் மொழிகளில் பாண்டித்துவம் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், இன்றைய நிகழ்வில் இடம்பெற்ற கலாசார நிகழ்வுகளில் தாம் அவதானித்த வகையில் உத்தியோகத்தர்களின் மொழி உச்சரிப்பு சிறப்பாக உள்ளதாகவும், ஆரம்ப கட்டமாக அலுவலக நடைமுறைகளை சமாளிக்க கூடியவகையில் இப் பயிற்சி நெறி அமைந்துள்ளதாகவும், அந்த வகையில் வளவாளர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
இந் நிகழ்வில் வளவாளர்களும் கெளரவிக்கப்பட்டதுடன், 100 உத்தியோகத்தர்கள் இப் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
2 3 4 5 6 8 9 10 12 12 14 18 20 21
1நாடு முழுவதிலும் உள்ள வறுமையை ஒழித்து சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட "பிரஜா சக்தி" வேலைத்திட்டம், அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் கடந்த ஜீலை மாதம் 04ம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற விழாவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தினால் பிரஜா சக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் திணைக்கள தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு .மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (19.09.2025) காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் ஜனாதிபதி செயலகத்தினுடைய பிரஜா சக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பிலான செயலமர்விக்கு வடக்கு மாகாண சபையினுடைய பிரதம செயலாளர் சார்பில் வருகை தந்துள்ள பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் திரு ஆழ்வார்பிள்ளை சிறி அவர்களுக்கும் சனாதிபதி செயலக உதவிச் செயலாளர் திருமதி சாரதாஞ்சலி மனோகரன் அவர்களுக்கும் கிராமிய அமைச்சினுடைய பணிப்பாளர்கள், வடக்கு மாகாண அமைச்சினுடைய செயலாளர்கள் ,மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபர் ,பிரதம கணக்காளர் ,பிரதேச செயலாளர்கள் ,உதவிப் பிரதேச செயலாளர்கள் ,திட்டமிடல் பணிப்பாளர்கள்,வடக்கு மாகாண சபையினுடைய பிரதிப்பிரதம செயலாளர் உட்பட ஏனைய திணைக்களங்களினுடைய தலைவர்கள் , மத்திய மாகாண அரச திணைக்களங்களினுடைய தலைவர்கள் ,பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் வரவேற்றுக் கொண்டு தனது தலைமையுரையில் அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு செயற்பாட்டில் முக்கியமானதாக இந்த பிரஜா சக்தி திட்டம் காணப்படுகிறது எனவும் சனாதிபதி செயலகதினால் மூன்று வகையான கொள்கை பிரமாணங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.அதிலும் முதலாவதாக தூய்மை இலங்கை (Clean srilanka) திட்டமாகும். இந்த திட்டங்களின் ஊடாகவே அரசாங்கம் இப்போது செயற்பட்டுக் கொண்டிருக்கிறது எனவும் இரண்டாவதாக பிரஜா சக்தி காணப்படுவதாகவும் மூன்றாவதாக டிஜிட்டல் ஶ்ரீலங்கா (Digital srilanka) உடன் சேர்ந்ததாக டிஜிட்டல் அரசுத்தொகுப்பு (Gov pay) காணப்படுவதாகவும் இவ்விரண்டும் திட்டங்களும் தற்போது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார். மேலும் சனாதிபதி செயலகம் மாவட்டங்களினுடைய அரசாங்க அதிபர்களுக்கு இது தொடர்பான போதுமான தெளிவூட்டல்களை வழங்கி மாகாண மற்றும் மாவட்டங்களில் இச் செயற்பாடுகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் "வளமான நாடு அழகான வாழ்க்கை " என்ற தொனிப் பொருளில் இந்த பிரஜா சக்தி செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என தெரிவித்ததோடு பொருளாதாரத்தினை மட்டும் வைத்து வறுமையினை தீர்மானிக்க முடியாதெனவும் அதனோடு இணைந்ததாக கல்வி, சுகாதாரம்,சிறந்த வாழ்க்கைத்தரம், மனப்பாங்கு போன்றன முக்கியமான கருப்பொருளாக இருப்பதாகவும் யாழ்ப்பாண மாவட்டத்திலே இந்த பிரஜா சக்தி செயற்றிட்டத்தை மேற்கொள்வதன் மூலம் வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தை ஒன்றினைந்து செயற்படுத்த முடியும் எனவும் பிரதேச,கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மட்டுமன்றி அனைவரும் ஒன்றினைந்து இந்த வறுமை ஒழிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இந்த வறுமை ஒழிப்பு திட்டத்தை முற்றாக ஒழிக்க முடியாவிட்டாலும் அதனை குறைத்து கொள்ளக்கூடிய ஏதுநிலை உருவாகும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது சமூக வலுவூட்டல் மூலம் வறுமை ஒழித்தல் என்னும் தொனிப்பொருளில் இவற்றை செயற்படுத்தவுள்ள சமூக அபிவிருத்திக் குழுவின் சட்ட அடிப்படை, ஆக்க அமைவு, ஸ்தாபிப்பு மற்றும் பணிகள் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இதன் வளவாளராக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் திருமதி சாரதாஞ்சலி மனோகரன் அவர்கள் கலந்து கொண்டார்.
குறித்த வேலைத்திட்டம் வறுமையை ஒழித்து நாட்டு மக்களை அனைத்து வகையிலும் வளமான மனிதர்களாக மாற்றியமைக்கும் நோக்கில் "செழுமையான தேசம் பசுமையான வாழ்க்கை" எனும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மேலும் குறித்த செயலமர்வு சம நேரத்தில் சிங்கள மொழி மூலமாக மாவட்ட செயலக திட்டமிடல் கிளையில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
5யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரி சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் இரத்ததான நிகழ்வானது நலன்புரிச் சங்க தலைவரும் புள்ளிவிபரப்பிரிவின் பிரதிப் பணிப்பாளருமான திரு. ம. வித்தியானந்தநேசன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் பங்குபற்றுதலுடனும் இன்றைய தினம் (19.09.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் இரத்ததான ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் வைத்திய அதிகாரி S.சண்முகப்பிரியா,
பொதுச் சுகாதார பரிசோதகர் திரு. த.ரவீனதாஸ், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
மேலும், இரத்ததான நிகழ்வில் 31 மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் குருதிக் கொடை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 13
 
14மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் எண்ணக்கருவிற்கு இணங்க GovPayஎன்ற அரசின் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு இன்றைய தினம் (18.09.2025) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வு போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் நிரோசன் ரட்ணாயக்க தலைமையிலும் பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரது பங்கேற்புடன் நடைபெற்றது.
இது ஒரு முக்கியமான நடவடிக்கையாக இருப்பதுடன் நாட்டை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வழியாக சாதாரண மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வெளிப்படையானதும் சிக்கனமானதுமான மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் அரச திட்டங்களுக்கு வழிகாட்டும் பெரும் முயற்சியின் ஒரு பகுதியாகும். மேலும் GovPay செயலியின் மூலம், மக்கள் அரசு சேவைகளை பாதுகாப்பாகவும் சுலபமாகவும் நம்பகத்தன்மையாகவும் பயன்படுத்த முடியும். மேலும் இது அழுத்தங்களை குறைப்பதோடு மட்டுமில்லாது அரசுத் துறைகளில் நம்பிக்கையை உயர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாகும்.
இதன் இறுதி இலக்காக இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு டிஜிட்டல் சேவையின் மூலம் பாதுகாப்பும்,நம்பிக்கையும் வழங்குவதுடன், அனைவரும் பங்கு பெறக்கூடிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் எதிர்காலத்தை கட்டமைப்பதே இதன் நோக்கமாகும்.
இந் நிகழ்வில் லங்கா பே (Lanka pay) துணை தலைமை அதிகாரி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ,பிரதம கணக்காளர் ,பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டாரகள்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 13 14