இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில்  10ஆவது தேசிய சாரணிய ஜம்போரி  20.02.2024 ஆம் திகதி தொடக்கம் 26.02.2024 ஆம் திகதிவரை திருகோணமலையில்   நடைபெறுகிறது.

இலங்கையின் தலைமை சாரணரான அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தலைமையில் இன்றைய தினம்(21) ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளது.

தேசிய சாரணிய ஜம்போரியில் யாழ்ப்பாண சாரணிய மாவட்டத்தை சேர்ந்த 253 சாரணர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்களுக்கான ஜம்போறி ஒத்திகை நிகழ்வு கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை  (17) நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள்   கலந்துகொண்டு சாரணிய மாணவர்களுக்கு உணவுப் பொருட்களை கையளித்தார்.

இதேவேளை சாரண மாணவர்களை கெளரவித்து வழியனுப்பும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (19) பிற்பகல் 4.30 மணிக்கு வடக்கு மாகாண  ஆளுநர் அலுவலகத்தில்  இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடக்குமாகண ஆளுநரின் செயலாள‌ர் திரு.எம் நத்தகோபாலன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் திரு .எம் .பற்றிக் டிறஞ்சன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட கிளைச்சங்க சாரணர்களின் அணிவகுப்பு  இடம்பெற்றதோடு, யாழ் மாவட்ட  சாரணர் கிளைச் சங்கக் கொடி யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும்  மாவட்ட ஆணையாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன்,
சாரணர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு சாரணிய மாணவர்களை கௌரவ ஆளுநர் வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்.

Scouts 01 Scouts 02

  

Scouts 03 Scouts 04

  

Scouts 05 Scouts 06

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்தொழில்  அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ  டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் (16) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.

இதில், அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்  முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

அத்தோடு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளும்  ஆராயப்பட்டதோடு பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளும் ஆராயப்பட்டன.

இவ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நீர்வழங்கல்துறை அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்கள் கலந்துகொண்டதோடு, வடக்கு மாகாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பாக பல்வேறு  விடயங்களை குறிப்பிட்டார்.

மேலும், இந்திய  இழுவைப் படகுகளை கட்டுப்படுத்துதல், பேருந்து சேவை,  புகையிரத கடவைகளை முன்னுரிமை அடிப்படையில்  அமைத்தல், மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகள், சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டன.

இக் கலந்துரையாடலில் கடற்தொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, நீர்வழங்கல்துறை அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு கிழக்கு  அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ  சிவஞானம் ஸ்ரீதரன்,பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன்,பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆப்பிரகாம் சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வராஜா கஜேந்திரன், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் பிரதம செயலாளர், கௌரவ ஆளுநரின் செயலாளர், பிரதி பொலிஸ்மா அதிபர்,  மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்  (காணி), மத்திய மற்றும்  மாகாண அமைச்சின்  திணைக்களத்தலைவர்கள், வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், முப்படையினர், விஷேட  அதிரடிப்படை வலய  அதிகாரி, யாழ் மாவட்ட கட்டளைத்தளபதியின் பிரதிநிதி, மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் அரசாா்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமநல சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

DCC01  DCC02

  

DCC03  DCC04

  

DCC05  DCC06

  

DCC07  DCC08

  

DCC09  DCC10

  

சட்டவிரோதமாக கால்நடைகள் கடத்தப்படுவதனை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 09.02.2024 மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் சட்டவிரோதமாக கால்நடைகளை கடத்துவோர் மீது சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பாக தீவுப் பகுதிகளில் கால்நடைகளை களவெடுத்தல் மற்றும் சட்டவிரோதமாக கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுதல் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு பொலிஸார் விரைவாக சட்டநடவடிக்கைகளையெடுத்தல் வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் , பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாண மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 09.02.2024 காலை ஒன்பது மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் தென்னை மரங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள், கிருமிநாசினி பாவனை, நெல் உற்பத்தி மற்றும் நெல் அழிவுகள், சிறுதானிய ஊக்குவிப்புகள், பழமர உற்பத்திகள், காப்புறுதி நடவடிக்கைகள், நன்நீர் மீன் உற்பத்தி, பனம் விதைகளை நாட்டுதல் மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி), மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர், விவசாய திணைக்களத் தலைவர்கள், கமநல சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் துறைசார் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

Agri 01  Agri 02

  

Agri 03  Agri 04

  

Agri 05

யாழ்ப்பாண  மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்  காளிங்க ஜெயசிங்க அவர்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர்  சிவபாலசுந்தரன் அவர்களை  மரியாதை நிமித்தமாக இன்றையதினம் (08.02.2024 ) அரசாங்க அதிபர் அலுவலகத்தில்  சந்தித்து  கலந்துரையாடினாா்.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

DPS 01  DPS 02

  
DPS 03  DPS 04